Home » Articles » சிறந்த விற்பனையாளர் யார்?

 
சிறந்த விற்பனையாளர் யார்?


இராமநாதன் கோ
Author:

‘சார், நான் எதை செஞ்சாலும் தோல்வியிலேயே முடியுது. அதனால இப்ப எதையும் செய்யாம சும்மாயிருக்கேன்’

‘அப்படியே சும்மா காலந்தள்ளிடலாமுனு உத்தேசமா?’

‘இல்லை… இல்லை…. ஏதாவது சக்ஸ்ஸ்புல்லா செஞ்சி நானும் திறமையானவன்தான்னு நிரூபிக்கணும்.

‘இதுக்கு முன்னாடி என்ன தொழில் செஞ்சீங்க’

‘ஒரு கம்பெனியிலே டீலர்சிப் எடுத்து வியாபாரம் பண்ணினேன். கடைசியா நஷ்டத்திலே முடிஞ்சிடுச்சு. அவங்க வெளியே தள்ளிட்டாங்க’

‘ஒரு ஏஜண்டா இருந்து வேலை செஞ்சேன். நல்லா பிக்கப் ஆச்சு. திடீரென பெரிய சரிவு ஏற்பட்டு எல்லா முதலும் போயிடுச்சு’.

‘அப்புறம்..’

‘சொந்தமா ஒரு கடை வெச்சேன்; அதையும் கஷ்டப்பட்டு உழைச்சு நல்ல வருமானம் வர்றமாதிரி செஞ்சேன். ஆனாலும் ஒரு வருஷம் கழிச்சதும் நஷ்டத்தினால மூடிட்டேன்.’

‘இந்த தோல்வியெல்லாம் எதனாலனு நினைக்கிறீங்க?’

‘நான் ரொம்ப நல்லவனுங்க; சிகரெட் கூட குடிக்கமாட்டேன். தண்ணீ போட மாட்டேன்; பிற பெண்களிடம் பேசக்கூட மாட்டேன்.’

‘அதெல்லாம் சரி. எதனால தோல்வியாகியிருக்கும்னு நினைக்கிறீங்க?’

‘பணம் செலவழிக்கறதுல ஒரு பலவீனம் இருக்குது?’

‘என்ன?’

‘நண்பர்கள் காசுகேட்டா, பாக்கெட்டுல இருக்கிற அத்தனையும் கொடுத்துடுவேன். சில சமயங்களில் பிறர்கிட்ட கடன் வாங்கியும் கொடுத்துடுவேன்.’

‘அப்புறம்?’

‘ஆனா அதுல எதுவுமே திரும்பி வராதுங்க’

‘அதுக்கு என்ன பண்ணுவீங்க?’

‘பணத்த நண்பர்கள் கிட்ட திருப்பி கேக்கறதுன்னா? ரொம்ப தயக்கம்; அதனால அந்தக் கடனை நானே சுமப்பேன். ஒரு நாளு கம்பெனி பணத்தை நண்பருக்கு அவசரமுன்னு கொடுத்திட்டேன்; கம்பெனிக்கு கொடுக்க முடியாம போச்சு. அதனால் என்னைத் தப்பா எடுத்துட்டாங்க.’

‘அப்புறம்’

‘வீட்டில் குழந்தைங்க ஏதாவது கேட்டா இருக்கிற பணத்த உடனே செலவழிச்சிடுவேன்.’

‘எப்பவுமேயா?’

‘ஆமாங்க. இதனால என் மனைவிக்கும் எனக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடுகள் வந்துவிடும்’

‘சரி இன்னும் ஏதாவது சொல்லணுமா?

‘எந்த வேலையாயிருந்தாலும் ஆரம்ப காலத்துல முழு – உற்சாகமா இருக்குது. சில சோர்வாகுது. அப்புறம் சரியா உழைக்க முடியல. பிஸினசும் விழுந்துடுது’

‘இனி என்ன செய்வதாக உத்தேசம்?’

‘ஏதாவது ஒரு பொருளை எடுத்து அதை சிட்டி முழுதும் விற்கணும். நல்ல லாபம் சம்பாதக்கணும். அதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்?

சிறந்த விற்பனையாளர் ஆவதற்கான தகுதிகள்:

ஒரு சிறந்த விற்பனையாளருக்கு தோற்றம் முக்கியமான அம்சமாகும். சிலருக்கு பிறவியிலேயே நல்ல நிறம் மற்றும் உடலமைப்பு அமைந்துவிடுவதுண்டு. அப்படியில்லாதவர்கள் தங்களுடைய உடை மற்றும் நடைகளில் நன்கு கவனம் செலுத்தி பொலிவனா தோற்றதை உருவாக்கலாம்.

இரண்டாவது பேச்சுத்திறன். தம்முடைய விற்பனைப் பருட்களை வாடிக்கையாள் ஏற்குமாறு வெளிப்படுத்தும் பேச்சுத்திறன், அப்பொருட்ளின் நிற மற்றும் குறைகளை நன்கு அறிந்து அதனுடைய நிறைகளை சாமர்த்தியத்துடன் பரப்பும் ஆற்றலுக்கு தகவல் தொடர்புத் துறையில் (Communication skills) பயிற்சி பெறுதல்.

வாடிக்கையாளருக்கு எந்த மொழியில் பிடிக்குமோ அந்த மொழியில் நன்கு உரையாடுகிற பழக்கம்.

வாடிக்கையாளரின் தேவைகளை அறிந்து, அவரின் உணர்வுகளை மதித்து, அவருடைய தேவைகள நிறைவேற்றவோம் என்ற நம்பிக்கையை உருவாக்குதல்.

எல்லா தரப்பு மக்களிடமும் சுமூகமாக பழகும் ஆற்றல் அத்துடன் மனதில் பணிவு.

வாடிக்கையாளர் கோபமாக பேசினாலும் நிதானமாக செயல்படும் சகிப்புத்தன்மை.

பொருளை பிறர் தாழ்த்திப் பேசினாலும், வாங்க மறுத்தாலும் மனத் தளராமல் உறுதியுடன் வலியுறுத்தும் விடாமுயற்சி.

கற்பனைத்திறன்; வாடிக்கையாளரின் மன உணர்வுகளை முன்னரே கணித்து அதற்கேற்ப செயல்படும் ஆற்றல்.

தொழிலில் தளராத ஆர்வம்

வாடிக்கையாளர்களை ஒன்றாகச் சேர்த்து அவர்களுக்கு விருந்தளித்தல்; அதன் மூலம் தம்முடைய பொருட்களை அறிமுகப்படுத்துதல். (Organising Ability)

வாடிக்கையாளர்களுக்கு ஒரு புறமும், உற்பத்தியாளர் அல்லது நிர்வாக இயக்குநருக்கு மறுபுறமும் பாலமாக இருந்து அந்த கம்பெனியின் வளர்ச்சிக்கு உதவுதல்.

பல்வேறு விளம்பர யுக்திகளின் மூலம் மக்களிடையே தம்முடைய வியாபாரத்தைப் பரப்புதல்.

இறுதியாக, பணத்த கையாளுதலில் நாணயம். அதிக தொகையை பார்க்கும்போது அதில் ஒரு சின்ன அளவு எடுத்து கொண்டாலென்ன? என்ற சபலம், மற்றும் கம்பெனி பணம்தானே, செலவழிப்போம் என்ற ஊதாரித்தனம், இவ்விரண்டும் இல்லாமலிருத்தல்.

இவையாவும் சிறந்த விற்பனையாளரின் தகுதிகளாகும்.


Share
 

1 Comment

  1. PEER MOHAMED says:

    Super

Post a Comment


 

 


March 2002

வணக்கம் தலைவரே!
வாசகர் கடிதம்
வேலை தேடுகிறீர்களா?
பெற்றோர் பக்கம்
சிந்தனைத்துளி
ஓ அன்றில் பறவைகளே!
அதிக மதிப்பெண் பெற தேர்வை அணுகுவதெப்படி?
கேள்வி பதில்
சிறந்த விற்பனையாளர் யார்?
பொதுவாச் சொல்றேன்
மணம் விரும்பும் பணம்
உறவுகள் உணர்வுகள்
நம்பிக்கையும் நானும்
உள்ளத்தோடு உள்ளம்