Home » Articles » பொதுவாச் சொல்றேன்

 
பொதுவாச் சொல்றேன்


புருஷோத்தமன்
Author:

சமீபத்திலே கோவை தன்னம்பிக்கை வாசகர் வட்டக் கூட்டம் நடந்தது. அதிலே ஒரு நண்பர் கேட்டார். ‘ஏன் சார் நம்ம இதழில் எழுதற நிறையப்பேர் காந்தி, ஆபிரகாம் லிங்கன்னு நிறைய தலைவர்களை உதாரணம் காட்டறாங்க! அவங்க எல்லாம் விதிவிலக்குகளாச்சே’ அப்படீன்னு.

நல்ல கேள்வி, நிறையப்பேர் கேட்க நினைச்ச கேள்வியுங்கூட. ஆனா, ஒண்ணை மறந்துடக்கூடாது. சராசரி மனுஷன், தன்னை சரியா உருவாக்கினா சாதனையாளன் ஆக முடியும். அப்படீங்கதுக்கு அடையாளம் பெரிய தலைவர்கள்.

நான் பொதுவாச் சொல்றேன், மேற்கோள் காட்டும் விதமா வாழ்கிற அவங்கதான் விதிகள்! வாழ்க்கையை முழுவதுமாக வாழாம தடுமாறுகிற ஒருசிலர்தான் விதிவிலக்குகள்.! ஆனா, இப்ப எப்படி ஆயிடுச்சுன்னா விதிகளை எல்லாமே விதிவிலக்குகளா கருத்த் தொடங்கிட்டோம்.

எல்லோருக்கும் சாத்தியப்படக்கூடிய வாழ்க்கைதான் சாதனையாளர்கள் வாழ்க்கை. அதனால்தான் அவங்களுக்கு சிலைகள் வைக்கிறோம்.

நான் பொதுவாச்சொல்றேன். மனித உடல் கோவில் மாதிரி இருக்கணும்னு கோவில் கட்டினாங்க. அதை கும்பிட மட்டுமே பயனபடுத்தற மனிதன், தன் வாழ்க்கையை அதுபோல் அமைக்கநினைக்கலை. குறிப்புகளைக் காரணங்ளோட அமைச்சவங்க நம்ம பெரியவங்க. குறியீடுகளை எல்லாம் வாழ்க்கைக்கு வெளியே இருக்கிற விஷயம்னு நாம் நினைச்சுடறோம்.

சிலைகளா நிக்கறவங்க விதிவிலக்குகள் அல்ல, நினைச்சா இந்த அளவு உயர முடியும்னு காட்டறது தான் சிலைகளுக்கு நோக்கம்.

இதிலே, பொது வாழ்க்கைன்னா முன்ன மாதிரி இல்லீங்க. ஏகப்பட்ட தொந்தரவுகள் அப்படீன்னு புகார் வேற புறப்படுது. பொது வாழ்கைக்குள்ளே வர்றபோது ஒரு பக்குவம் – வந்தா சராசரி மனிதர்கள் சாதனை மனிதர்கள் ஆக முடியும்.

எதிர்ப்புகள் ஏற்படாத துறைன்னு எதுவுமே இல்லை. ஆனா, ஏற்படுகிற எதிர்ப்புகள் என்ன மாதிரி இருக்குன்னு பாருங்க. எதிரான கருத்து சொல்லப்படும் போது, அதுக்காக வருத்தப்பட வேண்டியதில்லை. அந்த வருத்தம் என்னாகும் தெரியுமா? எதிர்ப்புக் கருத்தை சொன்னவங்களை நமக்கு எதிரியாக்கிடும்.

நமக்கு எதிர்ப்புகள் இருக்கலாம். எதிரிகள் இருக்கக்கூடாது. இரண்டுக்கும் வித்தியாசம் நிறைய இருக்கு. எதிர்ப்புகளை அங்கீகரச்சு அதிலே நியாயம் இருந்தா எதிர்ப்புகள் நியாயமில்லைன்னு பட்டா, உரிய விளக்கங்களை நிதானமக தந்துடலாம் ஒண்ணும் தவறில்லை.

நான் பொதுவாச் சொல்றேன், எதிர்ப்புகள் நம்ம வளர்ச்சிக்காக தானா வருவது. எதிரிகள் நம் வீழ்ச்சிக்காக நாமே உருவாக்குகிறோம். இல்லீங்களா! அப்ப என்ன முடிவு பண்ணலாம்.

எதிர்ப்புகள் இருப்பது
வளர்ச்சிக்கு உதவும்

எதிரிகள் இருப்பதோ
ஆபத்தில் முடியும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2002

வணக்கம் தலைவரே!
வாசகர் கடிதம்
வேலை தேடுகிறீர்களா?
பெற்றோர் பக்கம்
சிந்தனைத்துளி
ஓ அன்றில் பறவைகளே!
அதிக மதிப்பெண் பெற தேர்வை அணுகுவதெப்படி?
கேள்வி பதில்
சிறந்த விற்பனையாளர் யார்?
பொதுவாச் சொல்றேன்
மணம் விரும்பும் பணம்
உறவுகள் உணர்வுகள்
நம்பிக்கையும் நானும்
உள்ளத்தோடு உள்ளம்