Home » Articles » மணம் விரும்பும் பணம்

 
மணம் விரும்பும் பணம்


ஜெயசித்ரா குமரேசன்
Author:

எல்லாவிதமான ஆசைகளையும், எதிர்கால கனவுகளையும் நிறைவேற்றக்கூடிய மல்டி லெவல் மார்க்கெட்டிங் வியாபாரத்தை குறிக்கோளுடன், தன்னம்பிக்கையுடன், நேர நிர்வாகத்துடன், திட்டமிட்டு விடா முயற்சி செய்தால் நிச்சயமாக வெற்றி பெறலாம் என்பதை அறிந்து கொண்டீர்கள்.

நேர்மையான வழியில், அளவற்ற பணமும், அதனை அனுபவிக்கத் தேவைஆன நேரமும் ஒன்றாக கிடைக்கும் அற்புத்த்தைப் ர்க்கலாம்.

நேரம் நல்ல நேரம்

பெரும்பாலானோர் எந்தக காரியம் செய்வதானாலும் நேரம், காலம், சகுனம், ஜாதகம் பார்த்தே செய்கின்றனர். என்ன செய்வது பலரும் செய்வதால் பழக்கமகா மாறிவிட்டது. இதனால் திறமைசாலிகள் கூட ஏதாவது ஒரு சூழ்நிலையில் தடுக்கப்பட்டு விடுகின்றனர்.

‘கைரேகை பார்த்து செயல்படுவனை விட கைரேகை தேய உழைப்பனவே வெற்றி பெற முடியும்’

உழைப்பவனுக்கு எல்லா நேரமும் நல்ல நேரம்தான்.

இறைவனால், இவ்வுலகில் பிறந்த அனைவருக்கும் பாகுபாடின்றி சம்மாக கொடுகப்பட்டுள்ள 24 மணி நேர செல்வத்தை பயன்படுத்துபவர்கள் செல்வந்தர்கள் ஆகிறார்கள்.

நேரமே போதவில்லை என உழைப்பவன் முன்னேறி வெற்றி பெறுகிறான்.

நேரமே போகவில்லை என புலம்புபவன் பொழுதை வீணே கழிக்கிறான்.

இரண்டு வகையான மனிதர்களும் இருந்து கொண்டுதான் இருப்பார்கள்.

நீங்கள் எப்படி இருக்கப் போகிறீரகள் என முடிவெடுங்கள்.

காலத்தே பயிர் செய்! காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்!

எத்தனை கோடி கொடுத்தாலும் போன கால நேரம் திரும்ப கிடைக்காது. என போதித்தாலும் எதற்கும் ஜாதகத்தை புரட்டிப் பார்த்து விடுவோம் என உள் மனசில் எண்ணுபவர்கள்கூட துணிந்து ஈடுபடலாம். இந்த MLM வியாபாரத்தில் ஏன் தெரியுமா?

MLM வியாபாரம் என்பது ஒரு கூட்டு முயற்சி (Team work) ஒரு குழுவாக செயல்பட்டு அனைவரன் சிறிய முயற்சியால் மிகப்பெரிய லாபத்த அடந்து அவரவர் உழைப்பிறகு ஏற்ற லாபத்தை அடைந்து அவரவர் உழைப்பிற்கு ஏற்ற லாபத்தை பகிர்ந்து கொள்ளும் சுதந்திரமான வியாபாரம்.

எத்தனை பேருக்கு இந்த வியாபாரத்திட்டத்தை புரிய வைத்து உங்கள் குழுவில் இணைந்து செயல்பட வைக்கிறீர்களோ அதனைப் பொறுத்து உங்கள் வருமானமும் அங்கீகாரமும், வெற்றியும் கிடைக்கும்.

MLM வியாபாம் தான் புதிதே தவிர இந்த த்த்துவம் நமக்கெலாம் ஏற்கனவே தெரிந்திருக்கும் விஷயங்கள்தான். என்னவென்று பார்க்கலாமா.

மற்றவர்களை முன்னேறச் செய்தால், நாமும் முன்னேறலாம்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

ஊர் கூடினால் தேர் இழுக்கலாம்.

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.

பசித்தவனுக்கு மீன் கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக்கொடுக்கவும்.

ஒன்றுபடுவோம்! ஒற்றுமையாக செயல்படுவோம்! வெற்றி பெறுவோம்!

முடியம்! முடியும்! உலகை திருத்த உன்னால் முடியும்!

எனவே, உங்களுடன் இணைந்து செயல்படுபவர்களில் சுக்ரதிசைக்காரர்களும் நிறைய இருப்பார்ளாதலால், உங்களது நேரத்தைப் பற்றி கவலைப்படாமல் முடிவெடுக்க வேண்டியது நீங்கள்தான்.

நேரமும் பணமும்

ஒவ்வொருவரும் வேலை, தொழல் வியாபாரம் என தங்களது நேர செல்வத்தை செலவிடுகிறார்களே எதற்காக?

பணம் சம்பாதிப்பதற்காகத்தானே? இது மறுக்க முடியாத உண்மைதானே! ஆனால் வருமானத்தில் தான் எத்தனை வித்தியாசங்கள். ஏழை, நடுத்தரம், பணக்காரர் என்ற பாகுபாடுகள் சற்றே சிந்தியுங்கள்!

நேரம் என்ற விதை அனைவரிடமும் சம்மாக உள்ளது. விதையினை விதைக்கும் மன வயல்தான் வேறுபடுகிறது. ஏன் சரியான வழிகாட்டுதல் இல்லாத்தால்தானே! பாகுபாடுகளை தகர்த்தெறிய உங்களுக்காகவே பிறந்துள்ள குழந்தைதான் இந்த MLM வியாபாரம்.

குறைந்த முதலீடு + தினசரி ஒரு மணி நேர உழைப்பு + தன்னம்பிக்கையுடன் கூடிய விடாமுயற்சி + அனுபவமில்லா உங்களை வழி நடத்திச் செல்ல ஒரு தலைமை + உங்களாலும் மற்றவரகளை வழிநடத்த முடியும் என்ற சுயமுன்னேற்றம் + நேர்மையான வழியில் பாதுகாப்பான வருமானம் + புதுமையான சுதந்திரம் போன்றவைகள் இணைந்த வானவில்தான் மல்டி லெவல் மார்க்கெட்டிங் வியாபாரம்.

பணம் சம்பாதிக்க நேரத்தைச் செலவிடுதல்

வேலைக்கு செல்பவர்களுக்கு நேரம் இருக்கும். பணம் இருக்காது.

சொந்தத் தொழில் / வியாபாரம் வெற்றிகரமாக செய்பவரகளுக்கு நேரம் இருக்காது. பணம் நிறைய இருக்கும்.

இவை இரண்டிலுமே மன நிம்மதியான வாழ்க்கை கிடைக்காது அல்லவா?

இப்படி கற்பனை செய்து பாருங்களேன்!

தொடர்ந்து பாதுகாப்பான வருமானம். அதனை செலவிட்டு குடும்பத்துடன் மகிழ தேவையான நேரம் இரண்டுமே உங்களுக்கு சொந்தமானால் ‘சொர்க்கம் வந்தது நமக்கு’ எனச் சொல்ல ஆனந்த கூத்தாடலாம்தானே.

குறிப்பிட்ட காலம் திட்டமிட்டு உழைப்பினை MLM வியாபாரத்தில் விதைத்தால் பிறகு அந்த உழைப்பின் பலனை வாழ்நாள் முழுவதம் தேவைப்படும் பொழுதெல்லாம் பண அறுவடையாக செய்யலாம். சுருக்கமாக புரியும் வகையில் எடுத்துக் கூறினால் MLM வியாபாரம் தென்னை மரம் வளர்ப்பது போலத்தான்.

தென்னை மரத்தினைப் பற்றித் தெரியாத நபர் ஐந்து வருடம் கழித்து பலன் தருமா? என சந்தேகப்பட்டு கேட்பது போல அநேக மக்கள் சந்தேகமாக MLM வியாபாரத்தை நினைப்பது தவறில்லை. ஆனால், தெரிந்தவர்களிடம் விளக்கம கேட்காமல் தவறான முடிவு எடுப்பது சரியல்ல.

நேரமும் பணமும் கிடைத்து வாழ்வினை அனுபவிக்க முடிகிறது. இது இந்த விஆபாரதில்மட்டுமே சாத்தியமாகும. ஏனெனில், இந்த முறை வியாபாரம் உலகில் அறிமுகப்படுதப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேலாகிறது. நல்ல நிறுவனங்களில் இணைந்தவர்கள் பலர் லட்சாதிபதிகளாகவும், சிலர் கோடீஸ்வரர்கள் ஆகவும் உருவாகியுள்ளனர்.

நமது நாட்டிற்கு நடைமுறைப்படுத்தப்பட்டு ஓரிரு ஆண்டுகள் மட்டுமே ஆகியுள்ளதால் அனைவரும் நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்வார்களா?

சற்று சிரம்ம் தான். ஏனெனில் மக்களால் உலகம் உருண்டை என்றவர்க்கு உதைதான் கிடைத்து. பறக்கும் விமானம் கண்டறந்தவரை பைத்திக்காரன் என்றனர். அஹிம்சையில் ஆயுதத்தை வெல்ல்லாம் என்றதற்கு நம்ப மறுத்தனர்.

ஆனால், சில காலங்களுக்குப் பின்னால் இவைகள் சாதனைகளாக பாராட்டப்பட்டு சரித்திரத்தில் இடம் பெற்றன.

எந்த நல்ல மாற்றங்களையும் அனைத்து மனிதர்களும் உடனே ஏற்றுக்கொள்வதில்லை. அனைவருக்கும் இது சிறந்தது என்று புரியும் விசயங்கள் அதற்கு முன்னரே ஒரு சிலருக்கு மட்டும் நம்பிக்கை ஏற்படுத்தும். அவர்களால் எளிதில் உயர்நிலையை அடைய முடியும்.

சரி, அனைவருக்கும் புரியும்போது புரியட்டும், முதலில் புரிந்தவர்களுக்கு வழி காட்டுவோம்.

அனைவருக்கும் ஏற்படும் நியாயமான சந்தேகம் அடுத்தது என்ன.. வியாபாரத்தில் வெற்றி பெறுபவர்களுக்கு எப்படி மாதா மாதாம் இவ்வளவு வருமானம் கிடைக்கும்? அந்த நிறுவனத்தாரால் தொடர்ந்து கொடுக்க முடியுமா?

எதிர்பார்புடன் காத்திருங்கள் ஏப்ரல் மாதம் வரை

இணைந்த கரங்கள் எதையும் சாதிக்கும்.

வழிகாட்டுதல்
தொடரும்.

 

1 Comment

 1. mariappan says:

  தங்கள் ஆலோசனைக்கு நன்றி. எனக்கு தெளிவான ஆங்கிலம்
  தெரியாது. காரணம்எனது படிப்பு பள்ளிப்படிப்ப
  இறுதிவரைதான் இனி கற்றுக்கொள்வது சிரமம் காரணம்
  எனது வயது நாற்பத்தைந்து . இப்பொழுதும் எனது சொந்த
  முயற்சியாள்தான் கணினியில் தமிழில் தெளிவாக தங்களுக்கு
  கருத்து தெரிவிக்கும் அளவுக்கு தேறியிருக்கிறேன். மேலும்
  எனது முயற்சியில்முன்னேறஎனக்ககணினி வழியே
  வருமானம் தேவைப்படுகிறது .இது தொடர்பான தங்கள்
  கருத்துக்களை அறிய விரும்புகிறேன்
  நன்றி .
  உழைப்பது நானாயினும் உயர்வது -எந்தன்
  சமுதாயமாக இருக்கட்டும்

Leave a Reply to mariappan


 

 


March 2002

வணக்கம் தலைவரே!
வாசகர் கடிதம்
வேலை தேடுகிறீர்களா?
பெற்றோர் பக்கம்
சிந்தனைத்துளி
ஓ அன்றில் பறவைகளே!
அதிக மதிப்பெண் பெற தேர்வை அணுகுவதெப்படி?
கேள்வி பதில்
சிறந்த விற்பனையாளர் யார்?
பொதுவாச் சொல்றேன்
மணம் விரும்பும் பணம்
உறவுகள் உணர்வுகள்
நம்பிக்கையும் நானும்
உள்ளத்தோடு உள்ளம்