Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

வண்ணத்திரை, சின்னத்திரை இரண்டும் பொழுதுபோக்கு அம்சங்களை மட்டுமே, முன்னிலைப்படுத்தினால்,அ வை வளர்ச்சிக்கு தடையானவை என்பதை பலரும் வெவ்வேறு கோணங்களில் வலியுறுத்தி வந்துள்ளனர். இன்று, இந்தியா, பாகிஸ்தான் உரசலுக்கும் இணையாகவே, சின்னதிரைக்கும், வண்ணத்திரைக்கும் இடையிலான சர்ச்சைகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.

சின்னத்திரையில் பலருக்கு சினிமா தேவைப்படுகிறது. சினிமாவில் சிலருக்கு சின்னத்திரை வேண்டியிருக்கிறது. ஆனால், இந்த இரு ஊடகங்களும், ஒருவருக்கொருவர் பகைவர்களாகவே பேசப்படுகின்றன.

இளைஞர்களின் வளர்ச்சிக்கும், எதிர்கால சமூகத்தில் அறிவு வளத்திற்கும் இந்த இரண்டு ஊடகங்களும் துணையா? தடையா? என்பதை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து அவற்றிக்கு உரிய இடத்தை நம் வாழ்வில் வழங்குவது பற்றி, முடிவெடுக்க இதுவே நேரம்.

தங்களைப் பாதுகாத்ததுக் கொள்வதில் அவர்கள் தெளிவாய் இருக்கிறார்கள். நம்மைப் பாதுகாத்துக் கொள்வதில் நாம் சரியாய் இருக்கிறோமா? நம்மிடமிருந்தே பதில் வரட்டும்.

வாழ்த்துக்களுடன்,
ஆசியர் குழு.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


March 2002

வணக்கம் தலைவரே!
வாசகர் கடிதம்
வேலை தேடுகிறீர்களா?
பெற்றோர் பக்கம்
சிந்தனைத்துளி
ஓ அன்றில் பறவைகளே!
அதிக மதிப்பெண் பெற தேர்வை அணுகுவதெப்படி?
கேள்வி பதில்
சிறந்த விற்பனையாளர் யார்?
பொதுவாச் சொல்றேன்
மணம் விரும்பும் பணம்
உறவுகள் உணர்வுகள்
நம்பிக்கையும் நானும்
உள்ளத்தோடு உள்ளம்