இரண்டு முக்கிய அம்சங்கள்
எல்.கே.ஜி. சிறுவனிடம் ஆசிரியை கேட்டபோது, ஒன்று, இரண்டு – எல்லாம் எனக்குத் தெரியும் என்றான்.
“எப்படி?” ஆசிரியை “எங்கப்பா சொல்லி கொடுத்தார்” – சிறுவன்.
“சரியாகத்தான் சொல்றே ஆறுக்குப் பிறகு எந்த நெம்பர்?” – “ஏழு”
“வெரிகுட். உங்கப்பா நல்லாவே சொல்லித் தந்துள்ளார் போலிருக்குதே!”
“சரி, பத்திற்கு பிறகு என்னென்ன நெம்பர் வரிசையா சொல்லு, பார்க்கலாம்”.
“ஜேக், குயின், கிங் – “நன்கு உற்சாகத்துடன் சொன்னான்.
அதுவரை உற்சாகமாக இருந்த ஆசிரியைக்கு இதைக் கேட்டவுடன் அவனது பெற்றோர் மீது கடும் வெறுப்பு.
பெரும்பாலும் பிள்ளைகள் தங்களடைய பொறுப்புகளை உணராமல் செயல்படுதவற்கு பெற்றோர்களும் முக்கிய காரணம் என்பதை இதன்மூலம் அறியலாம்.
இங்கு இரண்டு அம்சங்களை முக்கியமாக உணரவேண்டும்.
ஒன்று அறிவுக்கூர்மை.
இரண்டாவது அன்புள்ளம்.
அறிவைப் பெருக்குவதற்கு படிப்புதான் வழி. அதை எப்படியாவது குழந்தைகளுக்கு பிடிக்காதபோதும், கட்டாயப்படுத்தாமல், ஆர்வத்தை உருவாக்கி, அடிப்படைக் கல்வியை கற்க வைத்தல் அவசியம்.
படிப்பில்லாத ஒரு மனிதன், மற்ற எல்லா செல்வங்கள் இருந்தாலும், பலதரப்பட்ட மனிதர்கள் கூடுமிடத்தில், தயக்கத்துடன்தான் செயல்படுவான்.
ஆகையால், படிப்பு என்பது பட்டம் மற்றும் பதவிகளைப் பெறுவதற்கு மட்டுமன்றி வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளைப் புரிந்து செயல்படவும் தன் சொந்தக் கால்களில் நின்று வாழ்வதற்கும் அவசியமாகும்.
அதற்கு, தினமும் படிக்கும் பழக்கத்தை உருவாக்குதல், ஆர்வத்துடன் பள்ளிக்குச்செல்லுதல், பொது அறிவு மற்றும் படித்து தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுதல் போன்வற்றில் பெற்றோர்கள் கவனம் செலுத்துதல் நன்று.
இரண்டாவதான அன்புள்ளம் படிப்பறிவைப் போலவே ஒவ்வொருவருக்கும் அவசியமான இருத்தல் முக்கியம்.
அதற்கு, பிள்ளைகள், தங்களுடைய விருப்பு வெறுப்புகள், வெற்றி – தோல்விகள், பிறருடன் ஏற்படும் அனுபவங்கள், எதிர்கால இலட்சியங்கள், நிகழ்கால அனுபவங்கள் போன்றவைகளை பெற்றோர்களிடம் மனம்விட்டு பேசுவமளவிற்கு அன்பும், பாசமும் குடும்பத்தில் நிலவும் சூழ்நிலை உருவாகவேண்டும்.
அத்துடன் பெற்றோர்களையும் மற்றவர்களையும் மதித்துப் பழகுதல், பிறருக்கு உதவுவதல், குடும்பத்தில் உடல் நலக்குறைவு உள்ளவரகளைக் கவனித்தல், வயதானவர்களுக்கு உதவி செய்தல் போன்ற பொறுப்புகளை உணர வைத்தல் பெற்றோரின் கடமையாகும்.
மனம் கடந்த நிலையில் சுதந்திரம் தருவது தியானம் என்பதை உணர்கிறபோது அதனை உளவியல் சிகிச்சை மனோவசியம் போன்றவற்றுடன் குழப்பிக் கொள்கிற நிலை நேராது.
மனம் கடந்த தெளிவும், விழுப்புணர்வுமே தியானம், தியானம் சேர்ந்த மனதை அடிமைப்படுத்த இயலாது. மனோவசியம் என்பது மற்றொரு மனதின் மீது நீங்கள் செலுத்துகிற ஆதிக்கம். அதற்கு நேரெதிரான நிலை தியானம்.
மனோவசியம் போன்ற தீமைகளிலிருந்து முற்றாக விடுபட தியானம் துணைபுரிகிறதே தவிர, தியானம் மனோவசியத்தின் தன்மைகளை முற்றிலும் கடந்தது.
உளவியல் சிகிச்சையில் ஒரு நிலை மனித மனதின் இயல்புகளைக் கண்டறிவதாக இருக்கக்கூடும்.
ஆனால், குறுகிய எல்லைக்குட்பட்ட குறைபாடுள்ள மனசுகளில் சில, உளவியல் துறையின் விதிகளை நிர்ணயிப்பதால், மனத சக்தியின் முழுமையை அவர்களால் கண்டறிய முடியாமல் போனது.
மேற்கில் அந்த விபத்து நிகழ்ந்ததால், உளவியல் துறை உரிய வளர்ச்சியைப பெற இயலவில்லை. சிக்மண்ட் பிகய்ட் டபஸ் போன்ற உளவியல் அறிஞர்கள், உளவியல் துறையின் விதிகளை எழுதுகிறார்கள். ஆனால், அவர்களுக்கு, மரணம் பற்றி மிகப்பெரிய ஆக்கம் இருந்துள்ளது.
‘யங்’ எகிப்துக்கு செல்ல வேண்டுமென்று பலமுறை விரும்பினார். ஆனால், எகிப்தில், பிரமிடுகளில் பாதுகாக்கப்படும் பிணங்களாகிய மம்மிகள் பற்றி அவருக்கு மிகப்பெரிய அச்சமிருந்தது. எனவே, பலமுறை விமான டிக்கட் வாங்கியும் கூட எகிப்துக்கு செல்லாமல் திரும்பியிருக்கிறார்.
வாழ்வின் அடிப்படை உண்மைகளில் முக்கியமானது மரணம். வாழ்வில் மற்ற எது நிகழுமோ, நிகழாதோ, மரணம் கண்டிப்பாக மனிதனுக்கு நிகழும். மரணம் என்கிற விஷயத்தையே ஏற்க மறுக்கிற மனிதனால், மனித மனம் குறித்த முடிவுகளை எந்த வித்த்தில் தீர்மானிக்க முடியும்?
மரணம் குறித்து மட்டுமின்றி எல்லாவித அச்சங்களிலிருந்தும் விடுதலை தருவதே தியானம். தியானம் என்கிற விழிப்பு நிலையைத் தொட்ட மனதன் உளவியலின் குறுகிய அளவைகளுக்குள் அகப்பட மாட்டான்.
ஒரு வித்த்தில், மனநிலை பிறழ்ந்தவனும், மனம் கடந்த நிலையிலுள்ளவனும் ஒன்றுபோல் தோற்றமளிக்ககூடும். ஆனால், மனம் கடந்த நிலையிலுள்ள ஞானிக்கு தன் மீது ஆளுமை இருக்கும்.
இன்றைய மனித சமூகம், மற்றவர்கள் மேல் ஆதிக்கம் செலுத்துவதற்குத்தான் சொல்லித்தருகிறது. அரசியல், மதம், கல்வி போன்றவைகூட, மற்றவர்கள் மீது சிலர் செலுத்தும் ஆதிக்கத்தின் வெளிப்பாடுகளாய் ஆகி வருகின்றன.
இந்த ஆதிக்கம், ஒரு வித்தில் மனோவசியம்தான். மனிதனை அடிப்படுத்தும் இத்தகைய வசியங்களிலிருந்து தியானம் மனிதனை விடுவிக்கும்.
தியானத்தின் பாதையில் நடப்பவர்களை மனோவசியத்திற்கு உட்பட்டவர்கள் என்று யாராவது சொன்னால், அவர்கள் தியானம் மனோவசியம் இரண்டின் தன்மையையும் உணர்ந்து கொள்ளவில்லை என்றே பொருள்.
தவறான நம்பிக்கைகள், போதனைகள், இவற்றின் ஆதிக்கத்திலிருந்து விடுதலையாகி, விழிப்பு நிலையில் தன்னைத் தெளிவாக உணரத் துணை புரிவதே தியானம்.
தியானத்தில் அத்தனையும் ஒன்றாக உணர்கிற நிலை வாய்க்கும். உயர்வு, தாழ்வு போன்ற இருவேறு நிலைமைகள் தியானத்தில் இராது. எனவே, தியானத்தில் இருப்பவர்கள் தங்களைத் தாங்களே அறிந்து வைத்திருப்பது அவசியம்.
இன்னொருவர் என்ன சொன்னாலும், அந்த விமர்சனங்கள் பாதிக்காத அளவுக்கு அந்தத் தெளிவு இருக்க வேண்டும். தியானம் என்பது வாழ்வை வீண் செய்வது என்று சிலர் பேசலாம். இப்போது இருப்பதைவிட இன்னும் பயனுடைய விதமாய் வாழ்வதே தியானம் என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்து வைத்திருந்தால் அதுவே போதுமானது.
தேக்க நிலைக்கும் அமைதிக்கும் உள் நிலையில் நிறைய வேற்றுமை உண்டு. புறத்தோற்றத்தில் இரண்டும் ஒன்று போல் தெரியலாம். அறியாமையின் கண்களுக்கு, தியானம் என்கிற அமைதி நிலை, தேக்க நிலை போலத் தெரியும். ஆனால், தியானத்தின் அருமை, அந்த அனுபவம் வாய்க்கப் பெற்றவர்களுக்கே புரியும்.