Home » Articles » வாசகர் கடிதம்

 
வாசகர் கடிதம்


admin
Author:

புத்தாண்டுச் சிறப்பிதழ் புத்துணர்ச்சியூட்டியது. உள்ளத்தோடு உள்ளம் – அடைக்கலம் தரப்போவதென்னவோ அகிம்சைதான்’ என்ற நம்பிக்கையான வரிகள்தான் பெரும்போரை பொடிப் பொடியாக்கப்போகிறது. பொருளாதார சீரழிவைக் காக்கப் போகுது.

-செல்லக்குட்டி, துப்பாக்கித்தொழிற்சாலை

கவிஞர் தாமரையின் நேர்காணல், சாதிக்கத் துடிக்கும் மனிதனுக்கு நல்ல டானிக் வணக்கம் தலைவரே அருமை. நாடு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும்போது பொதுவாச் சொல்றேன் புருஷோத்தமன் வேற்றுமையில் ஒற்றுமையை மிக அருமையாக புரிய வைத்தார்.

– பா. வசந்தன், கோபி.

திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு, வாழ்க்கைக்கு முன்னால் ஒளிவீசும் (ஒலிக்கும்) கவிஞர் தாமரையின் பேட்டி அவரைப் போன்றே இனிமையாகவும், அருமையாகவும் இருந்தது. தன்னம்பிக்கை நட்சந்திரமாக மிளிரும் தாமரைக்கு பாராட்டுக்கள்.

-உஷா, முத்துராமன், திருச்சி

நிறுவனர் இல.எ.க.வின் “திதுவை நீங்கள் சாதித்தது என்ன?” என்ற கேள்வியைப் படித்தபின் என் மனதில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது. வெற்றிக்கு வித்திடும் இப்பகுதியை வெளியிட்டமைக்கு நன்றி.

– முகவை தி.பாலமுரளி,
இராமநாதபுரம்.

மனச்சோர்வுக்கு ஆசிரியர் அளித்தபதில் அருமை. 12 பாகமாகப் பிரித்து பயன்தரும் செய்தியாக தெளிவாகக் கொடுத்து, படிப்பவர் மனச்சிக்கல் தீர்ந்து, தங்கள் சூழ்நிலைகளை மாற்றியமைத்து நம்பிக்கையான வாழ்க்கைக்கு வழிகாட்டும்.

– தடாகம் ஆர் ஆறுச்சாமி.

“இதுவரை நீங்கள் சாதித்தது என்ன?” இல.செ.க.கட்டுரை வாசக்கள் கட்டாயம் சாதிக்க வேண்டும் என்கிற தூண்டுகோலாக இருக்கிறது.

– மா. பழனி, கூத்தப்பாடி

MLM பற்றிய தொடர் சிந்திக்க வைப்பதோடு,மனதில் எழும் கேள்விகளுக்கெல்லாம் பதிலாய் அமைந்தது. நம்பிக்கை என்ற நார் மட்டும் இருந்தால் உதிர்ந்த பூக்கள் கூட வந்து ஒட்டிக்கொள்ளும் என்கிற எழுச்சியை ஏற்படுத்தியது. தொடரின் ஆரம்பமே.

-வெ. சங்கர நாராயணன், பாவனி.

பிரச்சனைகளைச் சமாளிக்கும் பார்முலா தரமிக்கதாயுள்ளது. “மனம் விரும்பும் பணம்” தினசரி வாழ்வில் சிறந்து வாழ வழிவகுத்தது. – உறவுகள் உணர்வுகள்” மனிதர்களுக்கு மட்டுமல்ல, உலகிற்கே உரியதென்பதை உணர்த்தியது. “மனித சக்தி” புனிதமான வாழ்விற்கு கனிவான பாதை காட்டியது.

– டாக்டர். வேத யோகநாத்,
சேலம்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2002

உள்ளத்தோடு உள்ளம்
பொக்கிஷம் ஏது?
தோல்வி உங்களைத் துரத்துகிறதா?
பொதுவாச் சொல்றேன்
ஓ அன்றில் பறவைகளே!
உறவுகள் உணர்வுகள்
வாசகர் கடிதம்
அதிக மதிப்பெண் பெற தேர்வை அணுகுவதெப்படி?
மனித சக்தி மகத்தான சக்தி
கேள்வி பதில்
மனம் விரும்பும் பணம்
தொழில்முறை பரிமாற்றம்
நம்பிக்கையும் நானும்
வெற்றியின் மனமே