Home » Articles » வெற்றியின் மனமே

 
வெற்றியின் மனமே


இராமநாதன் கோ
Author:


வெற்றிக்கு அடிப்படைத் தேவை

யோக்கியன் என்பவன் யார்?

சற்றுக் சூடான கேள்விதான்.

இதற்கு மனிதர்களின் வகைகளைப் பார்ப்போம்.

முதலாவது, பிறர் கண்காணிப்பின் போது தவறு செய்யாதவர்கள் (அதாவது வகுப்பறையில் ஆசிரியர் கண்டிப்பில், பொது இடத்தில் போலீஸ் கண்காணிப்பில் ) அதையும் மீறி செல்பவர்கள் அயோக்கியர்களாகிறார்கள். குற்றவாளிகளாகிறார்கள்.

இரண்டாவது, கண்காணிப்பும் எதுவுமில்லை. தவறு செய்யவும் சூழ்நிலைகள் இல்லை.

இந்த சூழ்நிலைகளில் தவறு செய்யாமல் இருப்பதில் ஆச்சரியமில்லை.

அவர்கள் சராசரி மனிதர்கள்.

மூன்றாவது, கண்காணிப்பு எதுவுமில்லை. தவறு செய்யவும் சூழ்நிலைகள் உள்ளன. அப்படியே தவறு செய்தாலும் வெளியில் தெரியாது.

அப்படி ஒரு சூழ்நிலையிலும் ஒரு மனிதன் தவறே செய்யாமல் இருப்பானானால் அவனே சுய கட்டுப்பாடுள்ளவன்.

அவனே நேர்மையானவன்.

அவனே நம்பத்தகுந்தவன்.

இகு ஒரு ஜென் கதையை பார்ப்போம்.

நான்கு குரங்குகள் சேர்ந்து ஒரு முடிவு எடுத்தன. அடுத்த 24 மணி நேரத்திற்கு நால்வரும் மௌனவிரதம் இருப்பது என ஒவ்வொன்றும் உறுதி எடுத்தன.

ஒரு மெழுகுவர்த்தியை நடுவில் வைத்து அதைச்சுற்றி நான்கும் அமர்ந்தன.

ஆச்சரியப்படுமளவிற்கு வாயை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தன. திடீரென காற்று வீசியது. மெழுகுவர்த்தி அணைந்தது.

இதைப் பார்த்த முதல் குரங்கு, ‘அடேடே மெழுகுவர்த்தி அணைஞ்சுடுச்சே’ என்றது.

உடனே, இரண்டாவது குரங்கு “நாம மௌன விரதம் இருக்கோம். இப்படியெல்லாம் பேசக்கூடாது” என்றது.

அடுத்ததாக,, மூன்றாவது குரங்கு, “நீங்க ரெண்டு பேரும் என்னை டிஸ்டர்ப் பண்றீங்க” என்றது.

இம்மூன்றையும் பார்த்துக் கொண்டிருத நான்காவதுகுரங்கிற்கு மனதிற்குள் குஷி “ஹைய்யா – நான் மட்டுந்தான் பேசவே இல்லை” என்றது.

இப்படித்தான் வாழ்க்கையில் வெற்றிபெற இயலாதவர்கள் எடுக்கிற ஒவ்வொரு முடிவும் பல்வேறு சூழ்நிலைகளில் மாறிவிடுகிறது. நிலைக்கின்ற எதுவும் தம்முடைய கட்டுக்குள் இல்லாமற்போய் விடுகிறது.

அதற்கு என்ன செய்வது?

இங்கு கட்டுப்பாட்டைப் பற்றியும் சுதந்திரத்தைப் பற்றியும் சற்று ஆராய்வோம்.

சிலர் சொல்வதைப் பார்க்கலாம். நான் – நெனைக்கறதெல்லாம் இஷ்டப்படி செய்யணும். அதுதான் சுதந்திரம் அந்த வாழ்க்கைதான் வேண்டும்.

இப்படி சொல்பவர்களுக்கு ஒரு கேள்வி.

சாலையில் எந்த கட்டுப்பாடும் இன்றி விருப்பத்திற்கேற்ப தாறுமாறாக வண்டியை ஓட்டினால் என்னாகும்? எந்த சாலை விதியையும் யாரும் அனுசரிக்காமல் அவரவர் விருப்பத்திற்கேற்ப ஓட்டினால் அதன் முடிவு என்னவாகும்?

அப்படித்தான், கட்டுப்பாடில்லாது, மது அருந்துவது, போதை பொருட்களை பயன்படுத்துவது, விரும்புவதையெல்லாம் சாப்பிடுவது, அளவற்கதிகமாக தூங்குது, மனதில் தோன்றியதையெல்லாம் பேசுவது போன்ற எல்லாமே ஒரு கட்டத்தில் தீய விளைவுகளை உருவாக்கிவிடும்.

ஆகவே, எவையெல்லாம் சரி? எவையெல்லாம் நியாயம் என்பதை உணர்ந்து அந்த வரையறைக்குள் நம்முடைய செயல்பாடுகளை செயல்படுத்தும்போது அங்கு வெற்றி உருவாகிறது. நிஜமான சுதந்திரம் உண்டாகிறது. அதுதான் சுயகட்டுப்பாடு ஆகும்.

ஒரு சிறுவன் தன் தந்தையுடன் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தான்.

“அப்பா, இந்தப்பட்டம் எதனால் உயரமாக பறக்கிறது?” சிறுவன்.

‘பட்டத்தில் கட்டியிருக்கும் நூல் கயிற்றால்தான்’ – அப்பா.

‘இல்லை.. இல்லை… அந்த கயிறு பட்டத்தை மேலே பறக்க விடமால் இழுத்துப் பிடித்துக் கொள்கிறது’ – சிறுவன்.

உடனே தந்தை அச்சிறுவனுக்கு புரியவைக்க, அந்த நூலை அறுத்துவிட்டார். பட்டம் கீழே விழுந்தது.

ஆமாம், அந்த கயிறு இழுத்துப்பிடிப்பதுபோல தோன்றினாலும், அது தான் பட்டத்தை உயர்த்துகிறது என்பதை ஏற்றான் சிறுவன்.

சுயக்கட்டுப்பாடும் பட்டத்தின் நூல் – கயிற்றைப்போலவே நாம் உயர்வதற்கான அடிப்படைக் காரணமாக இருக்கிறது.

ஆற்றுக்குதேவை – அணைக்கட்டு

தேருக்குத் தேவை – முட்டுக்கட்டு

குதிரைக்குத்தேவை – கடிவாளம்

வெற்றிக்குத்தேவே – சுயக்கட்டுப்பாடு

சுயக்கட்டுப்பாடு உஇள்ளவர் என்று ஒரு மனிதரை எப்படி அறிவது?

சற்று சிரம்ம்தான். ஆனால் ஒரு சில செயல்முறைகளை வைத்து அறியலாம்.

மூன்றாவது, மனிதரைப் பற்றி தரக்குறைவாக பேசாதவன்.

குறித்த நேரத்தில் தூங்கி, குறித்த நேரத்தில் விழிப்பவன்.

சுவையான உணவுகளிலிருந்தாலும், அதை அளவுடன் சாப்பிடுபவர்.

பிறரை துன்புறுத்த நினக்காதவர்.

தன் தகுதிக்குமீறிய பணம், பதவி, புகழ் எதையும் ஏற்காதவர்.

மது, மாது,போதை இவற்றுக்கு அடிமையாகதவர்.

பெரிய காரியங்களைச் செய்தாலும் பந்தா இல்லாமல் அமைதியாக செயல்படுபவர்.

இவையெல்லாம் சுயக்கட்டுப்பாட்டின் ஒருசில அடையாளங்கள்.

எந்த ஒரு மனிதருக்கு தம்மை முழுமையாகக் கட்டுப்படுத்தி செயல்படுத்தும் ஆற்றலுள்ளதோ அவரே மற்றவர்களையும், சூழ்நிலைகளையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் படைத்தவர்.

நீங்கள் எப்படி?

(தொடரும்…)


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2002

உள்ளத்தோடு உள்ளம்
பொக்கிஷம் ஏது?
தோல்வி உங்களைத் துரத்துகிறதா?
பொதுவாச் சொல்றேன்
ஓ அன்றில் பறவைகளே!
உறவுகள் உணர்வுகள்
வாசகர் கடிதம்
அதிக மதிப்பெண் பெற தேர்வை அணுகுவதெப்படி?
மனித சக்தி மகத்தான சக்தி
கேள்வி பதில்
மனம் விரும்பும் பணம்
தொழில்முறை பரிமாற்றம்
நம்பிக்கையும் நானும்
வெற்றியின் மனமே