Home » Articles » தொழில்முறை பரிமாற்றம்

 
தொழில்முறை பரிமாற்றம்


admin
Author:

சமீபத்தில் சேலம் மாநகரில் திருச்சி ‘சிவம் அவர்களின் தொடர் சொற்பொழிவு நடந்தது. நாள் தவறாமல் வந்து கொண்டிருந்தார். ஒரு அன்பர். அவர் செருப்பு தைக்கும் தொழிலைச் செய்பவர் நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார். அவர் மனைவி எம்.ஏ பட்டதாரி மனைவியின் தூண்டுதலால் இதுபோன்ற நல்ல விஷயங்களை கேட்பதறகு ஆர்வம் ஏற்பட்டது அவருக்க. திரு.சுகி சிவம் அவர்களின் பேச்சால் பெரிதும் கவரப்பட்ட அவர் தாமாகவே ஒரு ஜோடி செருப்பு தைத்துக்கொண்டு வந்து ‘இதற்கான அடிப்படைச் செலவுக்குரிய பணத்தையாவது பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார். “இல்லை இது என் அன்பளிப்பு” என்று அந்த நண்பர் மறுத்தார். சிறிது யோசித்த திரு. சுகி சிவம், “இதற்கான அடிப்படைச் செலவுக்குரிய பணத்தையாவது பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார். “இல்லை. இது என் அன்பளிப்பு” என்று அந்த நண்பர் மறுத்தார். சிறிது யோசித்து திரு.சுகி சிவம் தன் புத்தகங்கள் சிலவற்றை எடுத்து, “நீங்கள் உங்கள் படைப்பை எனக்கு அன்பளிப்பாக கொடுத்தீர்கள். நான் எனது படைப்பை உங்களுக்கு அன்பளிப்பாகத் தருகிறேன்” என்று சொல்லி அந்த புத்தகத்தில் “இனிய நண்பருக்கு தொழில்முறை பரிமாற்றமாக” எழுதி கையெழுத்திட்டுக் கொடுத்தார். சிரத்தையோடு செய்யும்போது சொற்பொழிவு செருப்புத் தைத்தல் எல்லாத் தொழிலும் சமம்தானே!


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2002

உள்ளத்தோடு உள்ளம்
பொக்கிஷம் ஏது?
தோல்வி உங்களைத் துரத்துகிறதா?
பொதுவாச் சொல்றேன்
ஓ அன்றில் பறவைகளே!
உறவுகள் உணர்வுகள்
வாசகர் கடிதம்
அதிக மதிப்பெண் பெற தேர்வை அணுகுவதெப்படி?
மனித சக்தி மகத்தான சக்தி
கேள்வி பதில்
மனம் விரும்பும் பணம்
தொழில்முறை பரிமாற்றம்
நம்பிக்கையும் நானும்
வெற்றியின் மனமே