Home » Articles » கேள்வி பதில்

 
கேள்வி பதில்


admin
Author:

என் இஷ்டப்படித்தான் மற்றவர்கள் நடக்க வேண்டும் என்று நினைக்கிறேன். யாராச்சும் கொஞ்சம் மாத்தி செஞ்சாலும் கோபத்தில் வெடிக்கிறேன். இதனால தினமும் பலருடன் கருத்து வேறுபாடு உண்டாகிறது இதற்கு என்ன செய்வது?

உங்களைச் சுற்றியுள்ளவங்க யாராக இருந்தாலும் அவங்களுக்கும் சொந்த விருப்பு, வெறுப்ப என்பது உள்ளது என்பதை உணர வேண்டும்.

அதனால் எல்லா விஷயத்திலும் எல்லோரும் ஒத்துப்போக முடியாது என்பதையும் ஏற்க வேண்டும்.

இதுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்.

சர்க்கஸ் சிங்கத்தை பார்த்திருப்பீங்க.

அதை செயல்படுத்தற சர்க்கஸ்மேன் ஒரு சாட்டையை உதறியவுடன் அவன் சொல்றபடி அந்த சிங்கம் வெளியே வரும்.

மேலும் சொல்கிற உத்திரவுகளையும் செய்யவும்.

ஆனால், அதே சர்க்கஸ்மேன் இன்னும் கொஞ்சம் அருகில் போய், சாட்டையை வீசினால் சிங்கம் அவன் மீது சீறிடும்.

இதைப் பார்த்ததும் அவனும் அப்படியே சமாளித்து விலகி வந்துவிடுவான்.

தன் இஷ்டப்படி ஆடுகிற சிங்கத்திற்கு எப்படி ஒரு எல்லை (Limitations) உள்ளதோ, அதைப்போலவே உங்களுடைய எல்லையை எல்லா உறவுகளிலும் உணர வேண்டும்.

அதை உணர்ந்துவிட்டால், உங்க இஷ்டப்படி பிறரிடம் எதிர்பார்க்கிற மனநிலை மாறிவிடும்.

அடுத்ததாக கோபம். ஆத்திரம் வந்தவுடன் உடனே எதையும் சொல்லாதீங்க. எதையும் சொல்லாதீங்க. எதையும் செய்யாதீங்க..

ஏதாவது உடனடியாக சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டாலும், நிதானத்தை வரவழைத்து, இதைச் செய்ய எனக்கு கொஞ்சம் நேரம் அவகாசம் வேண்டும் என்று சொல்லி ஆத்திரத்தில் முடிவெடிப்பதை தவிர்த்து விடுங்கள்.

சில சமயங்களில் மற்றவர்கள் மீது தோன்றும் ஆத்திரம், கோபம், முதலியவற்றை ஒன்று விடாமல் ஒரு பேப்பரில் எழுதுங்கள். அதை அப்படியே, பத்திரமாக வைத்து விட்டு அடுத்த நாள் அதை படித்துப் பாருங்கள்.

பெரும்பாலும் அந்த கோப உணர்வுகளுக்கு தேவையே இருக்காது. அப்படியே தேவை ஏற்பட்டாலும் நீங்கள் எதிர்பார்க்கும் அம்சங்களை சுமூகமாக மற்றவர் ஏற்கும் வகையில் மாற்றிச் சொல்லும் பக்குவம் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள் சரியாகிவிடும்.


Share
 

1 Comment

  1. vino says:

    மதுரை பெண்கள் நல்லவர்கள்

Post a Comment


 

 


February 2002

உள்ளத்தோடு உள்ளம்
பொக்கிஷம் ஏது?
தோல்வி உங்களைத் துரத்துகிறதா?
பொதுவாச் சொல்றேன்
ஓ அன்றில் பறவைகளே!
உறவுகள் உணர்வுகள்
வாசகர் கடிதம்
அதிக மதிப்பெண் பெற தேர்வை அணுகுவதெப்படி?
மனித சக்தி மகத்தான சக்தி
கேள்வி பதில்
மனம் விரும்பும் பணம்
தொழில்முறை பரிமாற்றம்
நம்பிக்கையும் நானும்
வெற்றியின் மனமே