Home » Articles » மனம் விரும்பும் பணம்

 
மனம் விரும்பும் பணம்


ஜெயசித்ரா குமரேசன்
Author:

MLM பற்றியும், எந்த மாதிரி நல்ல நிறுவனத்தில் இணைவது என்பது பற்றியும், நமது தேவையைப் பொறுத்தும், உறுதியான நம்பிக்கையைப் பொறுத்தும் வெற்றி -அடையாளம் என்பதையும் கடந்த இதழில் பார்த்தோம்.

MLM வியாபாரத்தில் மட்டும்தான் மற்றவர்களின் செயல்பாடுகள் மூலம் நமக்கு வெற்றி கிடைக்கும்.

தினசரி ஒரு குறிப்பிட்டநேரம் விடாமுயற்சி உடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். ஆகவே வெற்றிக்கு வழி தெரிந்து கொண்டால் கோடீஸ்வரராகலாம்.

வெற்றிக்கு உரியவழி

நமது கைகளின் பலம் ஐந்து விரல்களின் பலத்தைப் பொறுத்திருப்பதுபோல் வெற்றியெனும் சிகரத்தை அடைய தேவையானவைகள்.

1. ஆசைகளும், எதிர்கால கனவுகளும்

2. குறிக்கோள்

3. தன்னம்பிக்கை

4. திட்டமிட்டு செயல்படுதல்

5. சின்ன சின்ன தியாகங்கள்.

ஆசைகள், எதிர்கால கனவுகள்

குறிப்பிட்ட ஒரு சிலரே வெற்றிக்கு சொந்தக்காரர்களாக உள்ளனர். பலபேரை வெற்றித் திருமகள் திரும்பிப் பார்ப்பதே இல்லை. மனித வாழ்வில் விடை கிடைத்திடா மர்ம விடுகதை இதுதான் புரியாத புதிர் இதுவாகத்தானிருக்கலாம். வெற்றியாளர்கள் பலரின் பொதுவான குணம் என்ன என்று கவனித்தால், அனைவருமே எதிர்காலத்தைப் பற்றி ஆசையுடன் கனவு காண்பார்கள்.

எதிர்காலத்தில் தாங்கள் நினைப்பது நடந்தே தீர வேண்டும் என உறுதி கொண்டு உழைத்து நிச்சயம் வெற்றிடைபவர்களே சாதனையாளர்கள்.

உதாணமாக பொதுவாழ்வில் ஒரு MGR, விளையாட்டு உலகில் ஒரு சச்சின், தொழில் துறையில் ஒரு G.D. நாயுடு, கண்டுபிடிப்பில் ஒரு எடிசன், கவிதையில் ஒரு கண்ணதாசன் என்று இன்னும் பல மேதைகள்.

எனவே, குறிப்பிட்ட ஆசை, கனவுடன் இந்த MLM வியாபாரத்தில் ஈடுபட வேண்டும்.

குறிக்கோள்

குறிப்பிட்ட விருப்பமான ஆசை, கனவு ஆகியவற்றை குறிப்பிட்ட காலத்திற்குள் அடைய எண்ணுவதே குறிக்கோள். அடிக்கடி காணும் கனவே குறக்கோளாக மாறும். குறிக்கோள் இல்லாமல் செயல்படுவது குறிபார்க்காமல் அம்பு விடுவது போலவும், குறிபார்க்காமல் சுடுவது போலவும் வீணான செயலாகிவிடும்.

ஆசைகளையும், கனவுகளையும் நிஜமாக்குவதே குறிக்கோள். இதில் குறுகிய கால, நீண்டகால குறிக்கோள்களை திட்டமிட்டு தங்கள் கண் பார்வையில் படும்படி எழுதி வைத்துக்கொண்டு செயல்பட்டு வெற்றியடைகிறார்கள். சாதனையாளர்கள்.

தன்னம்பிக்கை

எதிலும் வெற்றி பெற அடிப்படையே தன்னம்பிக்கைதான். தன்னம்பிக்கை பற்றி இக்கட்டுரை இந்த இதழில் வெளிவருவது அரசருக்கு மகுடம் சூட்டுவதுபோல இயல்பாக அமைந்துள்ளது.

உங்களால் என்றைக்கு முடியும் என்று முழுமனதுடன் நம்புகிறீர்களோ அப்போதுதான் வெற்றி கிட்டும். வெற்றி எனும் ஒளி, தீபம் விட தன்னம்பிக்கை ஒரு தூண்டுகோல். ஒவ்வொரு மனிதனும் வெற்றி மாலை சூட விரும்புகிறான். இடையில் ஏற்படும் தற்காலிக தடைகளை படிக்கட்டுகளாக எண்ணுபவனே இறுதியில் வெற்றியாளனாகிறான்.

ஒருவன் வாழ்வில் வெற்றி பெற பெரிதும் உந்துசக்தி என்னால் முடியும் என்பதுதான்.

ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு முன்னேற்றத்தை எண்ணி முயற்சிக்கையில் தன்னம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே விடா முயற்சி செய்து வெற்றியடைகிறார்கள். முயற்சிக்கும் விடா முயற்சிக்கும் சிறிய வித்தியாசம் தான் என எண்ணாதீர்கள். விடா முயற்சியால் மட்டுமே நிச்சயமான வெற்றி கிடைக்கும்.

முடியும்! உங்களால் முடியும்! நிச்சயமாக நம்புங்கள்! வெற்றி பெறலாம்!

திட்டமிட்டு செயல்படுதல்

உறுதியான ஆசை, கனவு, தன்னம்பிக்கை, குறிக்கோளுடன் திட்டமிட்டால்தான் வெற்றியை அடையமுடியும்.

திட்டமிடாதவர்கள் தோல்வியடைகிறார்கள். தோல்வியடையாதவர்கள் திட்டமிடுகிறார்கள்.

எங்கே செல்லப் போகிறோம் என்று திட்டமிடாமல் ஊருக்கு செல்லுதல் கூட இயலாது. பலரும் வருடாவருடம் விடுமுறையை எப்படி செலவழிக்கலாம் என திட்டமிடுகிறார்கள். வருமானத்திற்குள் செலவு செய்ய (பட்ஜெட்) திட்டமிடுகிறார்கள். ஆனால் வெற்றியாளர்கள் பொருளாதார சுதந்திரம் கிடைக்க திட்டமிடுகிறார்கள. வருமானத்தை மடங்குகளில் பெருக்க திட்டமிடுகிறார்கள்.

சரியான செயல் திட்டத்துடன் குறிப்பிட்ட காலக்கெடு வைத்துக்கொண்டு செயல்படுதலே திட்டமிட்டு செயல்படுதல் ஆகும்.

உங்களது எல்லாவிதமான ஆசைகளையும், எதிர்கால கனவுகளையும் நிறைவேற்றக்கூடிய திட்டத்தை பார்க்கீறிர்கள். ஏன் இந் வியாபராத்தைச் செய்ய வேண்டும் என்று உணர்ந்தபின், புரிந்தபின் இதனை நீங்கள் எப்படி செயல்படுத்த போகிறீர்கள்?

உண்மையில், நான் தீவிரமான விடாமுயற்சியை எனது கனவுகள் நிறைவேற மேற் கொள்கிறேனா என்று ஒவ்வொரு வெற்றியாளரும் தன்னைத்தானே சுயபரிசோதனை செய்து வர வேண்டும்.

ஆம். தீவிரமாக விடமுயற்சியுடன், குறிக்கோளுடன், தன்னம்பிக்கையுடன் திட்டமிட்டு செயல்பட முடிவெடுத்தால் இந்த தொடர் உங்களுக்கு பக்க பலமாக வழிகாட்டியாக அமையும்.

நேரமே நமது செல்வம்

மனித குலத்திற்கு எந்தவித பாகுபாடுமின்றி அனைவருக்கும் சம்மாக இறைவானல் அளிக்கப்பட்டுள்ள செல்வம் கால நேரம் தான். தினசரி 86,400 ரூபாய் ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கிறது. அப்படியானால் நீங்களும் பணக்காரர்தானே? என்ன குழப்பமாக இருக்கிறதா? சந்தேகமில்லை, நீங்களும் தினசரி 86,400 ரூபாய் பெற்றுக்கொண்டுதான் இருக்கிறீர்கள். எப்படி?

1 நாள் = 24 மணி நேரம் X மணி = 60 நொடிகள் = 86400 நொடிகள் இதனை பயன்படுத்துபவர்கள் பணக்காரர்கள் ஆகின்றனர்.

இதன் அருமை தெரியாதவர்கள் வறுமையில் வாடுகின்றனர்.

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் முதல்ல் கற்க வேண்டியது நேர நிர்வாகம் (Time Management).

நேரத்தை பயன்படுத்துபவர்கள் Vs நேரத்தின் அருமை தெரியாதவர்கள்.

உழைப்பாளிகள் VS சோம்பேறிகள், வெற்றியாளர்கள் Vs தோல்வியாளர்கள், சாதனையாளர்கள் Vs சாதாரணமானவர்கள்.

அனைத்து வாய்ப்புகளும் அனைவருக்கும் இருந்தாலும், ஏன் எல்லோராலும் முன்னேற முடியவில்லை? சரியான நேரத்தை திட்டமிடாமைதான்.

எனவே, இன்று முதல் திட்டமிடுங்கள். நாளை என்ன செய்யப்போகிறோம் என முன்கூட்டியே திட்டமிடுங்கள். உங்களின் நேரத்தின் மதிப்பை முதலில் நீங்கள் உணருங்கள்.

ஒரு வருடத்தின் அருமை +2 தேர்வில் தவறி விட்ட மாணவனுக்குத் தெரியும்.

ஒரு மாதத்தின் அருமை சம்பளத்தை தவற விட்ட ஊழியருக்குத் தெரியும்.

ஒரு வாரத்தின் அருமை வாரப் பத்திரிகையின் ஆசிரியருக்குத் தெரியும்.

ஒருநாளின் அருமை, பந்த் அன்று பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தெரியும்.

ஒரு மணி நேரத்தின் அருமை போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டவருக்குத் தெரியும்.

ஒரு நிமிடத்தின் அருமை இரயிலை தவற விட்டவர்களுக்குத் தெரியும்.

ஒரு வினாடியின் அருமை ஸ்டம்ப்பை கோட்டைவிட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு தெரியும்.

ஒரு வினாடியில் நூறில் ஒரு பங்கு நேரத்தின் அருமை ஒலிம்பக் ஓட்டப் பந்தய வீரர்களுக்குத் தெரியும்.

ஏனெனில், இவர்களுக்குக்கெல்லாம் வெற்றி அடைவது என்பது நேரத்தை பயன்படுத்துவது என்ற செயலில் அடங்கியுள்ளது.

பலர் எனக்கு நேரமில்லை. நான் ரொம்ப பிஸி என பெருமித்த்துடன் கூறுவார்கள். உண்மையில் பார்த்தால் அவர்களுக்கு நேர நிர்வாகம் பற்றி தெரியவில்லை. எனவே நேரத்தின் அருமையைப் புரிந்து உணர்ந்து செயல்பட்டால் அனைவரும் வெற்றிபெறலாம்.

இந்த நேரத்தை பயன்படுத்துவதில், வேலைக்கு செல்பவர்கள் தினசரி 8 மணி நேர வேலை. 8 மணி நேரம் தூக்கம் சொந்த வேலை என்றாலும் கூட மற்றொரு 8 மணி நேரத்தை திட்டமிடுவது இல்லை. பொழுது போக்கில் செலவிட்டு விடுகின்றனர்.

வியாபாரம் செய்பவர்கள் தினசரி 16 மணி நேரம் வேலை செய்து பார்த்தாலும் அவர்கள் தேர்ந்தெடுத்துக்கும் வியாபாரத்தை பொறுத்து நஷ்டம், கடன், நஷ்டம், லாபம் போன்ற மாறுபாடுகள் ஏற்படுகிறது. முதலில் குறிப்பிட்டதில் எந்த வித முன்னேற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை. இரண்டாவதில் அதிகமாக உழைத்து, தொடர்ந்து உழைத்து வந்தால் மட்டுமே முன்னேற்றம் ஏற்படும். இதில் நிலைமாறி பின்னடைவும் ஏற்படலாம்.

சரி இதுதானே எங்களுக்குத் தெரியும். வேறென்ன செய்ய முடியும்? என்ற உங்களது கேள்விகளுக்கு சரியான பதில்தான் என்னும் புதுமையான வியாபாரம்.

முதலில் சிறிது காலம் மற்றவர்களுக்காக நீங்கள் உழைப்பைப் போட்டுவிட்டால் வாழ்நாள் முழுவதும் அவர்கள் மூலமாக உங்கள் வாழ்க்கையில் முன்னேறம் அடையலாம்.

சின்ன சின்ன தியாகங்கள்

இந்த MLM வியாபாரத்தில் ஒவ்வொருவரும் வெற்றியடைய சில சிறிய தியாகங்களை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடன் செய்ய வேண்டும்.

மற்ற வியாபாரங்களில் பணமே முதலீடு. ஆனால் MLM வியாபாரத்தில் நேரமும் அறிவும் முதலீடு.

எனவே, முதலில் கற்றுக்கொள்ளவேண்டும். பிறகு மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும். அவர்களை மற்றவர்களுக்கும் சல்லிக் கொடுக்கம் அளவுக்கு தயார்படுத்த வேண்டும். இதைத்தான் Learn, TEah, Deelop to Teach othes என்பார்கள், இதற்கும் அதிக நேரம் ஒதுக்க வேண்டும்.

எனவே, ஏற்கனவே வேறு தொழில் செய்து வருபவரகள் MLM ல் ஈடுபடும் முன்னரே பொழுதுபோக்கு, குடும்பத்துடன் செலவிடும் நேரங்களை ஒதுக்க்கி MLM வியாபாரத்தை வளர்ச்சியடைய செய்ய முடியுமா? ஏன்? சிந்தித்து தேர்ந்தெடுக்கவும்.

சரி, இதுபோல தியாகங்கள் தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் செய்யணுமா? அப்போது நேரமும் பணமும கிடைக்கும், என்கிறார்களே? என குழப்பமாக உள்ளதா? சற்றுப் பொறுங்கள். அடுத்த மாதம் தொடருவோம்.

இணைந்த கரங்கள் எதையும் சாதிக்கும். (தொடர்ந்து முன்னேறுவோம்)


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


February 2002

உள்ளத்தோடு உள்ளம்
பொக்கிஷம் ஏது?
தோல்வி உங்களைத் துரத்துகிறதா?
பொதுவாச் சொல்றேன்
ஓ அன்றில் பறவைகளே!
உறவுகள் உணர்வுகள்
வாசகர் கடிதம்
அதிக மதிப்பெண் பெற தேர்வை அணுகுவதெப்படி?
மனித சக்தி மகத்தான சக்தி
கேள்வி பதில்
மனம் விரும்பும் பணம்
தொழில்முறை பரிமாற்றம்
நம்பிக்கையும் நானும்
வெற்றியின் மனமே