Home » Articles » பெற்றோர் பக்கம்

 
பெற்றோர் பக்கம்


இராமநாதன் கோ
Author:

மீன் பிடிக்க கற்றுத்தர வேண்டும்

பெற்றோர்களுக்குள்ள சில சிக்கலான கேள்விகள்.

தாம் சொல்கிற துறை சிறந்ததா? பிள்ளைகள் தேர்ந்தெடுக்கும் துறை சிறந்ததா?

ஏழு தலைமுறைக்கு சொத்து இருக்கும் போது அதைச் செய்யாமல், ஏதோ புதியதாக செய்வதாகச்சொல்லி அவதிப்படுகிறார்களே! இது தேவைதானா?

படிபு நன்றாக படித்தால் மட்டும் பெரிய வேலை அதிக வருமானம் பெற முடியும் என்பதறகு என்ன உத்திரவாதம்?

தனிக்குடித்தனம் சரியா? கூட்டுக் குடும்பம் சரியா?

இதுபோன்ற கேள்விகளுக்கு இதுதான் சரியென்று ஒரு முடிவை சொல்வது சிரமம்.

இது கோழி முதலில் வந்ததா? முட்ட முதலில் வந்தா? என்ற கேள்விக்கு பதில் சொல்வது போலாகும்.

பிள்ளைகள் எல்லாவற்றையும் தங்களைக் கேட்டே செய்ய வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்ப்பது இயல்புதான். எந்த நிற சட்டை போட வேண்டும் என்பதில் துவங்கி எல்லாவற்றுக்கும் தங்களை கேட்டே செய்ய வேண்டும் என பல பெற்றோர்கள் எதிர்பார்ப்பது உண்டு.

நாம், குரு. சீடர் பாரம்பரியத்தை கொண்டவர்கள். ஒரு நல்ல குரு, தன்னுடைய சீடன் தன்னையே சார்ந்திருக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார். சுயமாக செயல்படும் முதிர்ச்சி பெற்று விட்டால் குருவே, தம் சீடனை வெளியே அனுப்பி சுயமாக செயல்பட ஆசி கொடுப்பார்.

அதைப்போல பெற்றோர்கள், தம் பிள்ளைகளை தங்கள் சொந்த கால்களில் நிற்பதற்குத் தேவையான பயிற்சிகளை இளம் வயதிலிருந்த கொடுத்து வர வேண்டும் தங்களையே சார்ந்து வாழும்படி வளர்க்கும் பிள்ளைகள், பிற்காலத்தில வேறு யாரையாவது சார்ந்து வாழ்வார்கள் அல்லது வாழத்தெரியாமல் தடுமாறுவார்கள்.

திருமணமான பிறகு, மகனாக இருந்தாலும் மகளாக இஉந்தாலும் அவர்களே சொந்தமாக முடிவு எடுத்து செயல்படுகின்ற வாய்ப்புகள் அமைத்துத் தரவேண்டும். அது தனிக்குடித்தனமாக இருந்தாலும் சரி கூட்டுக் குடும்பமாக இருந்தாலும் சரி.

விளையாட்டு போட்டியில் சொல்லிக் கொடுக்கும் பயிற்சியாளர் எப்படி அரங்கத்திற்கு வெளியே நின்று கவனிக்கிறாரோ, எப்படி தேவைப்படும்போது மட்டும் ஆலோசனை சொல்கிறாரோ அப்படித்தான் செயல்பட வேண்டும். அதைவிட்டு என் பிள்ளை ஜெயிக்க வேண்டுமே என்ற வேகத்தில் அரங்கினுள் நுழைந்து பந்தாடி விடக்கூடாது.

சுந்திரமாக இயங்கும் மனநிலையையும், சூழ்நிலையையும் பெற்றோர்களே ஏற்படுத்தித் தரவேண்டும். அதே சமயத்தில் அச்சுதந்திரத்தினால் சுயக்கட்டுப்பாட்டை இழந்துவிடாத அளவிற்கு கண்டிப்புடன் இருக்க வேண்டும்.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். ஒரு மனிதனுக்கு மீனை சாப்பிட கொடுத்தால் அவனுக்கு ஒரு வேலை சாப்பாடு கொடுத்ததாகும். அதுவே, அவனக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுத்தால் அவனுக்கு வாழ்நாள் முழுதும் சாப்பாடு கொடுத்ததாகும்.

ஆம், பிள்ளைகளுக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடுக்க வேண்டுமே தவிர நாமே மீனை பிடித்துக்கொடுக்க கூடாது.

பிள்ளைகளுக்குப் பணத்தைச் சேர்த்து வைப்பதைவிட தங்களுக்குத் தேவையானபணத்தை சம்பாதிக்கும் ஆற்றலை வளர்த்துக் கொள்ளும்படி பார்த்துக்கொண்டால் அவர்களுடைய இல்வாழ்க்கை இனிமையாகவும் பெருமையாகவும் அமையும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2002

பெற்றோர் பக்கம்
ஓ அன்றில் பறவைகளே!
மனம் விரும்பும் பணம்
கேள்வி பதில்
பொதுவாச்சொல்றேன்
மனதி சக்தி மகத்தான சக்தி
வணக்கம் தலைவரே!
பிரச்சனைகளை சமாளிக்கும் பார்முலா
கேள்வி பதில்
இலட்சியம் வெற்றிக்கு அடிப்படை
வாசகர் கடிதம்
இதுவரை நீங்கள் சாதித்தது என்ன?
உறவுகள் உணர்வுகள்…
உள்ளத்தோடு உள்ளம்
நம்பிக்கை நானும்
முயற்சி சிறகுகளை