Home » Articles » பொதுவாச்சொல்றேன்

 
பொதுவாச்சொல்றேன்


புருஷோத்தமன்
Author:

“நாலு மாடு சேர்ந்தபோது
சிங்கம் கூட அஞ்சுச்சு!
வேறுவேறாய் போனபோது
எலும்பு கூட மிஞ்சலை!”

இது எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு. இல்லையா?

விதம்விதமான கருத்துக்கள் இருக்கிற மனிதர்களோட வாழ்ந்தாலும், பொதுவான பாதுகாப்புக்காக சில விஷயங்களிலே ஒத்துமை வேணும்னுதான் இது சொல்லுது. நாலு மாடுங்க ஒண்ணா நின்னா என்னாகும்னு பயந்து சிங்கம் பக்கத்துல வரலை. ஆனா, நாலு மாடுகளும் தனித்தனியா பிரிஞ்ச பிறகு வேட்டையாடுறது சிங்கத்துக்கு ரொம்ப சாதாரண விஷயமாயிடுச்சு.

நான் பொதுவாச் சொல்றேன், வேற்றுமையில் ஒற்றுமை அப்படீங்கறதை காந்தி வலியுறுத்தினதுக்குக் காரணமிருக்கு. சின்ன சின்ன விஷயங்களிலே சண்டை போட்டுகிட்டு பெரிய விஷயங்களிலே கோட்டை விட்டுடக் கூடாது.

அப்படித்தான் பாருங்க டெல்லி கோட்டையிலே ஓட்டை விழத் தெரிஞ்சது! உஷாரா இருந்ததாலே நல்லதாப் போச்சு!

நான் பொதுவாச்சொல்றேன்! அரசியல் வேறுபாடுங்கறது தேச நலனுக்கு முரண்பட்டு இருக்கக்கூடாது. சில பொதுவான விஷயங்களிலே, அது நாட்டுக்கு நல்லதுன்னு தெரிஞ்சா கட்சி பேதமில்லாம -கருத்து பேதமில்லாம – ஒண்ணா நின்னு குரல் கொடுக்கறதுதான் தேசத்துக்கு நல்லது.

இந்த அணுகுமுறை, ஒரு தேசத்துக்கு ஒரு மாநிலத்துக்கு – ஒரு மாநகராட்சிக்கு – ஒரு பஞ்சாயத்துக்கு – ஏன், ஒரு குடும்பத்துக்குக் கூடப் பொருந்தும்.

நான் பொதுவாச் சொல்றேன், ஆயிரம் வேறுபாடகள் இருந்தாலும் அடுத்தவங்க முன்னால விட்டுத்தராம வீட்டிலேயே சின்னச் சின்ன மனத்தாங்கல் கணவன் – மனைவிக்குள்ளே வரலாம்.

ஆனா குடும்பத்திலே இருக்கிறவங்களைப்பத்தி அடுத்த வீட்டிலேயோ எதிர்த்த வீட்டிலேயோ யாராவது எதாவது பேசினா நாம சும்மா இருக்க மாட்டோம்.

அலுவலகத்திலே, “நீ பெரியவனா, நான் பெரியவனா” அப்படீன்னு ஆயிரம் அதிகார பேதம் இருக்கலாம். ஆனா, “உங்க அலுவலகமே மோசம்” அப்படீன்னு வெளியிலே யாராவது பேசினா நாம விட்டுத் தரப் போறதில்லை.

நான் பொதுவாச்சொல்றேன், பஞ்சாயத்து – மாநகராட்சி – மாநிலம் – தேசம், இதையெல்லாம் நிர்வாகம் செய்யறபோது, எதிர்க்கட்சிகள் இருக்கலாமே தவிர, எதிரிக்கட்சிகள் இருக்கக்கூடாது.

நிர்வாக நிலைகளிலே நாட்டுக்கு சமூகத்துக்கு நன்மை தருகிற திட்டங்களை யார் கொடுத்தாலும் அவங்களுக்குத் துணை செய்கிற மனப்பான்மைதான் தலைவர்ளுக்கு இருக்கணும்.

நான் பொதவாச்சொல்றேன், பொது நன்மை, தேச நன்மை இதெல்லாம் கட்சி அரசியல் கட்சிக் கொள்கைகளை விடவும் பெரிசு.

உள்ளாட்சி மன்றம் தொடங்கி, பாராளுமன்றம் வரை இருக்கிற எல்லா உறுப்பினர்களுக்குமே இந்த உணர்வு வர்றது ரொம்ப ரொம்ப முக்கியம்.

நன்மை தருகிற பொதுவான திட்டங்களை யார் அறிவிச்சாலும் பாராட்டற மனப்பான்மையுள்ள அரசியல் வாதிகளைத்தான் பொதுமக்கள் பாராட்டுவாங்க.

இந்த அடிப்படை ஒற்றுமை இருந்தாலே எந்தவிதமான தீவிரவாதமும் நம்ம தேசத்தை தொட்டுக்கூடப் பார்க்க முடியாது.

“பேதம் ஒரு சில கொள்கையில் இருக்கலாம். தேச நலனுக்குக் கைகள் இணைக்கலாம்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2002

பெற்றோர் பக்கம்
ஓ அன்றில் பறவைகளே!
மனம் விரும்பும் பணம்
கேள்வி பதில்
பொதுவாச்சொல்றேன்
மனதி சக்தி மகத்தான சக்தி
வணக்கம் தலைவரே!
பிரச்சனைகளை சமாளிக்கும் பார்முலா
கேள்வி பதில்
இலட்சியம் வெற்றிக்கு அடிப்படை
வாசகர் கடிதம்
இதுவரை நீங்கள் சாதித்தது என்ன?
உறவுகள் உணர்வுகள்…
உள்ளத்தோடு உள்ளம்
நம்பிக்கை நானும்
முயற்சி சிறகுகளை