Home » Articles » கேள்வி பதில்

 
கேள்வி பதில்


admin
Author:

எனக்கு அடிக்கடி மனச்சோர்வு உண்டாகிறது. சிகிச்சை பெற்றாலும் சில நாட்கள் கழித்து திரும்ப உண்டாகிறது. கடந்த 2 ஆண்டகளாக உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், பொருள் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளேன்.

மனச் சோர்வு என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்னென்ன? அதற்கான சிகிச்சை முறைகள் எவை?

(பெயர், ஊர் வேண்டாம்)

அன்றாட செய்கைகளை தடைசெய்து, உடலையும் உள்ளத்தையும் உற்சாகத்தையும் பாதிக்கும் மனநிலையே மனச்சோர்வு என்கிறோம்.

மனச்சோர்வின் அறிகுறிகள் என்னென்ன?

1. சோகமான மனநிலை நாள்முழுவதும் இருக்கும். எதையோ பறி கொடுத்துவிட்ட உணர்வு எதிலும் நாட்டமில்லாத மனநிலை தோன்றும். சிறுவர்களுக்கு உண்டாகும்சோகம், எரிச்சலாக வெளிப்படும்.

2. சிந்திக்கும் ஆற்றல் குறைந்து கொண்டே வரும். அதனால் சிறு பிரச்சினைக்குக்கூட முடிவெடுக்க முடியாமல் தடுமாற நேரிடும். எதிலும் கவனம் செலுத்த இயலாமை ஏற்படும்.

3. தான் எதற்கும் பயனில்லாதவன், தகுதியில்லாதவன் ஏற்றத் தாழ்வான எண்ணங்கள் தோன்றும். அதைத் தொடர்ந்து ஏதோ தவறு செய்து விட்ட குற்றவுணர்வு உண்டாகிக் கொண்டே இருக்கும்.

4. உடலில் மிகுந்த அசதி ஏற்படும். ஒருவேலையம் செய்யாமலே எல்லா சக்தியையும் இழந்துவிட்ட உணர்வு ஏற்படும்.

5. தூக்கமின்மை அல்லது தூங்கினாலும் ஆழ்ந்த உறக்கமின்மை ஏற்படும். அதிக கனவுகள் உண்டாகும். அதிகாலையில் விழிப்பு ஏற்படும். விழித்தபின்னும் களைப்பகாவே இருக்கும்.

6. தன் தொழிலைப் பற்றிய, நண்பர்களைப் பற்றிய, உறவினரகளைப் பற்றி ஆர்வம குறைந்து கொண்டேவரும். முன்பு மகிழ்ச்சியைக் கொடுத்த செயல்கள், இப்போது தேவையற்றதாகத் தோன்றும்.

7. பசியின்மையால் – சாப்பிடுவதில் ஆர்வமின்மை உண்டாகும். அதனால் எடைக்குறைவு ஏற்படும். சிலருக்கம் மட்டும் அளவிற்கதிகமான பசி ஏற்பட்டு, உடல் பருமனாகும்.

8. மகிழ்ச்சியுணர்வு சிறிதும் இல்லாமல் கவலையே மேலிடும். சிலருக்கு பதட்டமும், எதைச் செய்தாலும்பரபரப்பும் எரிச்சலும் கோபமும் அதகம் உண்டாகும்.

9. இறப்பு பற்றி எண்ணங்கள் அடிக்கடி உண்டாகும். சிலருக்கு தற்கொலை செய்து கொள்ளும் உந்துதல் ஏற்படும்.

10. பிறருடன் பழகுவதில் விருப்பமில்லாமல் தனிமையையே நாடும் மனநிலை.காரணமின்றி அழுதல் போன்றவைகள் ஏற்படும்.

11. காலையிலும் மாலையிலும் வெவ்வேறு மனநிலை உண்டாகும்.

12. சிலருக்கு உடலில் கீழ்க்கண்ட அறிகுறிகள் தோன்றும்.

– தீராத தலைவலி
– குறிப்பாக தலையின் பின்புறம் வலி.
– நெஞ்சுவலி, வயிற்று வலி, இடுப்பு வலி
– மலச்சிக்கல்
– உடலுறவில் வெறுப்பு
– சிறய சத்தத்தையோ / வெளிச்சத்தையோ தாங்க இயலாமை
– உடலில் ஏதாவது ஊர்வது போன்ற உணர்வு போன்றவைகள் உண்டாகும்.

இது போன்ற அறிகுறிகளில் ஐந்தும் அதற்கு மேலும் ஒருவருக்கு இரண்டு வாரத்திற்கு மேல் தொடர்ந்து இருக்குமானால், அவர் மனச்சோர்வு கொண்டவர் எனலாம்.

– இந்நோய் சுமார் 3 முதல் 5 சதம் மக்களைப் பாதிக்கிறது.

– ஆண்களைவிட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

– பணக்காரர்களைவிட ஏழைகளே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

– எல்லா வயதினருக்கும் உண்டாக்க்கூடியது என்றாலும், 30 வயது முதல் 40 வயுது வரையுள்ளவர்களுக்கே அதிகம் உள்ளது.

இதற்கு முறையான மனநல ஆலோசனை பெற்று மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். அதைத் தொடரந்து திரும்ப வராமலிருக்க தேவையான சிகிச்சைகளையும் செய்ய வேண்டும்.

மிகச்சிலருக்கு மட்டுமே ECT எனப்படும் ஷாக் ட்ரீட்மென்ட் தேவைப்படும்.

சிகிச்சையில் குணமானபின் முறையான யோகப்பயிற்சி, தியானம் மற்றும் உடற்பயிற்சிகளை தினமும் செய்தால் பூரண நலம் கிடைக்கும்.

இதில் முக்கியமாக, உங்களுடைய மனச்சிந்தனையும், சூழ்நிலைகளையும் இயன்ற வரையில் மாற்றியமைத்து நம்பிக்கையான மனநிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2002

பெற்றோர் பக்கம்
ஓ அன்றில் பறவைகளே!
மனம் விரும்பும் பணம்
கேள்வி பதில்
பொதுவாச்சொல்றேன்
மனதி சக்தி மகத்தான சக்தி
வணக்கம் தலைவரே!
பிரச்சனைகளை சமாளிக்கும் பார்முலா
கேள்வி பதில்
இலட்சியம் வெற்றிக்கு அடிப்படை
வாசகர் கடிதம்
இதுவரை நீங்கள் சாதித்தது என்ன?
உறவுகள் உணர்வுகள்…
உள்ளத்தோடு உள்ளம்
நம்பிக்கை நானும்
முயற்சி சிறகுகளை