Home » Articles » இலட்சியம் வெற்றிக்கு அடிப்படை

 
இலட்சியம் வெற்றிக்கு அடிப்படை


மெர்வின்
Author:

இலட்சியமில்லாத வாழ்க்கை வெற்றியான வாழ்க்கையாகாது. வெற்றியைப் பெற வேண்டும் என்ற இலட்சியத்துடன் உழைக்கும் போது நம் மனம், உடல் கூட நமக்குத் துணை செய்யும்.

உருண்டோடி வரும் பனியாறுகள், பயங்கரமான பனிக்கட்டிகள், சூரிய ஒளியைக் காணமுடியாது. காற்றுக்கூட பஞ்சம், இவைகளைக் கடந்து சென்றால்தான் எவரெஸ்ட் சிகரத்தைக் காணமுடியும்.

இளமையிலிருந்தே டென்சிங் எவரெஸ்ட்டின் உச்சியைக் காண வேண்டும் என்ற இலட்சியம் கொண்டிருந்தார். அதே நோக்கத்தில் அவர் செயல்பட்டபொழுது அவர் நண்பர்களும் அவரை விட்டுப் பிரிந்தனர்.

இயற்கையும் எதிர்த்து நின்றது. ஆனால் டென்சிங் கலங்கவில்லை. உறுதியோடு செயல்ட்டார். தொடர்ந்து சென்றார். அதன் பயன் வெற்றித்தாய் அவரை அணைத்துக் கொண்டாள். இலட்சியத்தைக் கைவிட்டிருந்தால் இன்று அவரை உலகம் புகழுமா?

அறுபத்தொன்பது நாட்கள் கடலில் பிரயாணம் செய்து கொண்டிருந்த கொலம்பஸ் நிலப்பரப்பைக் காண முடியாமல் தவித்தார். உடனிருந்த நண்ர்கள் அவருடைய முயற்சிகளை கேலி செய்தனர்.

ஆனால், கொலம்பஸ் தன் இலட்சியத்தைக் கைவிடவே இல்லை. கொலம்பஸ் தன்னுடைய ஆற்றலுக்குமேம்பட்ட ஒரு காரியத்தைச்செய்வதாக்க் கருதவில்லை. மேலும், மேலும் கப்பலைச் செலுத்தினார். எழுபதாவது நாளில் அமெரிக்காவைக் கண்டார். இன்று அவரை உலகம் புகழ்ந்து போற்றுகிறது.

பலமுறை போரில் தோல்விகண்ட ராபர்ட் புரூஸ் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்ற நோக்கத்தில் மென்மேலும் முயன்றார். தன்னை எதிர்த்து நின்ற துன்ங்களையும் விரட்டி அடித்தார். இறுதியில் துணிவும், கலங்காத மனமும்தான் வெறியைத்தேடித் தந்தன. வெற்றியோ ரோஜா மலரை போன்றது. வெற்றியைச் சுற்றி எத்தனையோ முட்கள் நிறைந்திருக்கின்றன. அதனைப் பற்றி நினைக்காமல் ரோஜாவை மட்டுமே நினைத்துப் பார்க்க வேண்டும்.

எதிர்ப்பைத் துணிவுடன் எதிர்கொண்டால்தான் வெற்றி பெற வேண்டும் என்று தங்கள் உடல் பொருள் எண்ணத்தால் காத்து வளர்த்தார்கள் என்பதை அறிந்து பின்பற்றினால் நாமும் சாதிக்கலாம்.

ஒரு காரியத்தில் தோல்வி அடைந்தால் மனம் சளைக்க வேண்டாம். மீண்டும் மீண்டும் தொடரந்து முயற்சி செய்தால் வெற்றி கிடைத்தே தீரும்.

உயர்ந்த இலட்சியங்களும், வளமான எண்ணங்களும் உள்ளத்தில் நிலைத்திருக்க வேண்டும். இன்று நம்முடைய மனதில் பதியும் இலட்சியமே, நாளை நம்மை யார் என்று உலகுக்குத் தெரிவிக்கும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2002

பெற்றோர் பக்கம்
ஓ அன்றில் பறவைகளே!
மனம் விரும்பும் பணம்
கேள்வி பதில்
பொதுவாச்சொல்றேன்
மனதி சக்தி மகத்தான சக்தி
வணக்கம் தலைவரே!
பிரச்சனைகளை சமாளிக்கும் பார்முலா
கேள்வி பதில்
இலட்சியம் வெற்றிக்கு அடிப்படை
வாசகர் கடிதம்
இதுவரை நீங்கள் சாதித்தது என்ன?
உறவுகள் உணர்வுகள்…
உள்ளத்தோடு உள்ளம்
நம்பிக்கை நானும்
முயற்சி சிறகுகளை