Home » Cover Story » நம்பிக்கை நானும்

 
நம்பிக்கை நானும்


தாமரை
Author:

கவிஞர் தாமரை பேசுகிறார்

தாமரையின் அரும்புப் பருவம் பற்றி?

பள்ளியில் படிக்கிறபோதே படங்கள், பாடல்கள் மீது எனக்கு மிகுந்த ரசனையுண்டு. எல்லா பெற்றோர்களையும் போலவே +2 முடித்ததும் மருத்துவம், அல்லது பொறியியல் துறையில் நான் பட்டம் பெற வேண்டும் என்று என் பெற்றோர் விரும்பினர். எனவே பொறியியல் படித்தேன்.

அப்போதே பத்திரிகைகளில் என் படைப்புகள் பரவலாக வெளிவரத் தொடங்கின. ஆனாலும், அது வாழ்க்கைக்கு உதவுமா? என்கிற கேள்வி இருந்தால் பொறியியல் துறையிலேயே பணிக்குச் சேர்ந்தேன்.

அந்தப் பணி உங்களுக்குப் பிடித்திருந்ததா?

எதைச் செய்தாலும், குறைபடச் செய்வது என்பது என்னால் இயலாத இதுதான் என் இயல்பு. நான், பொறியியல் பிரிவில் படித்த துறையும் கடினமானது. மெக்கானிக்கல் என்ஜினியரிங் பிரிவில் பொதுவாக, பெண்கள் படிப்பதற்கு சேர்வதில்லை.

என்னோடு சேர்ந்து படித்து மூன்றே மூன்று பெண்கள்தான். அவர்களில் ஒருவர் விரிவுரையாளராகி விட்டார். மற்ற இருவரும் திருமணம் ஆகி வீட்டோடு இருப்பதாக்க் கேள்வி. ஆனால், நான் பணிபுரிந்தது யூனிவர்சல் ஹீட் எக்ஸ்சேஸ்சர்ஸ் என்கிற இடம். BHEL போன்ற முக்கிய நிறுவனங்களுக்கு அழுத்தக் கலன்களை உற்பத்தி செய்கிற நிறுவனம். அதிலும், எந்தக் குறையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிற Non-De-structive Testing என்கிற பிரிவில் முக்கிப் பொறுப்பில் இருந்தேன்.

தனத் தொழிலாகத்தொடங்கும் அளவு நிபுணத்துவமும், நம்பிக்கையும் இருந்தது. அதே நேரம் படைப்புத் துறையில் நிறைய சாதிக்கிற ஆர்வமும், வளர்ந்து கொண்டே இருந்தது.

அலுவலகப்பணி என்னை ஒரு எந்திரம்போல் ஆக்கியிருந்தது. அது வேறு வாழ்க்கை, வேறு உலகம். கலை ஆர்வத்தையும், தொழிலையும் சேர்த்துப் பார்க்கிற சக்தி எனக்கு இல்லை.

இதற்கிடையில், என் படைப்புகளுக்காக பத்திரிகை விருதுகள் கிடைக்கத் தொடங்கின. அவற்றைப் பெற சென்னை என்று வரத் தொடங்கினேன். அதற்கு முன் ரயில் ஏறக்கூடத் தெரியாது. சென்னை பயணங்களின் போது புதிய உலகம் அறிமுகம் ஆனது. சாவியல் தொடர்கதை எழுதினேன். தொலைக்காட்சிக்கு கதை கேட்டார்கள்.. அப்போதெல்லாம் இசையமைப்பாளர்கள், இயக்குநர்களை சந்தித்து பாடல் எழுதும் வாய்ப்பு கேட்கத் துவங்கினேன். பாடலாசிரியராக வேண்டுமென்றால் சென்னையிலேயே இருக்க வேண்டும் என்று தெரிந்தது. எனவே, அங்கு குடியேறினேன்.

நீங்கள் பாடல் எழுதுவதில் நிறைய கொள்கைகள் வைத்திருக்கிறீர்களாமே?

முதலில், நான் பாடல்களின் ரசிகை, அதன் பிறகே பாடல் ஆசிரியை ரசனையின் அடுத்த கட்டமே படைப்பு என்று நம்புபவள் நான். சில பாடல்களை 100 முறை கேட்டாலும், மனதிற்கு இதமாக உள்ளன. சிலவற்றை ஒருமுறை கேட்டாலே முழுதாக கேட்க முடியாத அளவு ஆபாசம், மலிவான ரசனை கொண்டவையாக இருக்கின்றன.

எந்தவிதமான பாடல்களை நம்மால் ரசிக்க முடியவில்லையோ, அந்த விதமான பாடல்களை எழுதுவதில்லை என்று தீர்மானித்தேன். ஆபாச பாடல்கள், இரட்டை அர்த்தம் தொனிக்கும் பாடல்கள், அனாவசிய ஆங்கிலக் கலப்புள்ள பாடல்களை நான் எழுதுவதில்லை.

நீங்கள் பெண்ணின் சுயமரியாதை கடவுள் மறுப்பு, போன்ற கொள்கைகள் உடையவர். நீங்கள் எழுதும் காதல் பாடல்களிலேயே கூட ஒரு பெண் தன் காதலனே தனக்கு எல்லாம் என்பதுபோல் எழுதுகிறீர்களே?

ஒரு பெண் அன்பின் அடிப்படையில், ஒரு ஆணை தன் வாழ்வின் அனைத்துமாக்க் கருதலாம். அன்பு எதை வேண்டுமானாலும் செய்யும். அந்த வித்த்தில்தான் தன்னையே காதலனிடம் ஒப்புத் தருவது போல, பாடல்கள் எழுதியிருக்கிறேன்.

அன்பின் அடிப்படையில், பெண்ணோ, ஆணோ, தன்னை முழுவதும் மற்றவருக்கு ஒப்புக்கொடுப்பது போலத்தான் பக்தர்களும், அன்பின் அடிப்படையில் சரணடைகிறார்கள். அதன் மூலம் வாழ்வில் நம்பிக்கை பெறுகிறார்கள். அதை மட்டுமே ஏன் மூட நம்பிக்கை என்கிறீர்கள்?

கடவுள் நம்பிக்கை தவறு என்று நான் சொல்லவில்லை. காதல் போலவே அதுவும், தனிமனித்த் தேவையாகிறபோது அதை யாரும் தடுக்கவோ,, விமர்சிக்கவோ முடியாது. ஆனால், அது மதமாக வடிவம் பெற்று, சமூகத்தில் சில மூடநம்பிக்கைகளை ஏற்படுத்தும் போதுதான், விமர்சனத்துக்கும், கண்டனத்திற்கும் உள்ளாகிறது.

ஒருவன் கடவுளான தன் வளர்ச்சிக்குவழிகாட்டுவதாக கொள்ளாமல், கடவுள் பார்த்துக் கொள்ள்வார் என்று, தன் கடமைகளை செய்யாமல் விட்டு விடுகிறான். இதுதான் எதிர்ப்புக்குரியது.

பெண்ணியம் பற்றி சிந்திக்கிற கவிஞராகவும்,சினிமாவில் இன்றைக்கு உள்ள ஒரே பெண் கவிஞராகவும் திகழ்கிறீர்கள். சினிமா என்கிற ஊடகம், பெண்மைக்கு, எதிரானதாக, உங்களுக்குத் தெரியவில்லையா?

சினிமா மட்டுமல்ல. எல்லா ஊடகங்களுமே பெண்ணுக்கு எதிரானதுதான். சினிமாவை விட, மோசமான சீரழிவை பெண்மைக்கு பத்திரிகைகள் செய்கின்றன. தணிக்கை செய்யப்படாத ஆபாசம் பத்திரிகையில் தான் உள்ளது. எனவே, சினிமா ஒன்றுதான் பெண்மைக்கு எதிரானது என்பதை, என்னால் ஏற்க இயலாது.

இதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

இன்று, எந்தத் துறையிலும் தொழில் தர்ம்ம் என்பது இல்லை. ஒரு காலத்தில், நேர்மையாய் இருந்தவர்கள், 80% என்றால் நேர்மை குறைவானவர்கள் ஒரு விதவிலக்கு போல 20% இருப்பார்கள். ஆனால், ன்று விதிவலக்கே விதியாகிவிட்டது. எல்லாத்துறையிலும் ஆதர்சனமானவர்கள் தலைவர்களாக இருந்தார்கள். இப்போது, அப்படி யாருமில்லை. இதுகூட காரணமாக இருக்கலாம்.

இத்தகைய சூழலில் இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

எந்த சமூகத்திலுமே மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணுபவர்கள் குறைவான எண்ணிக்கையில்தான் இருப்பார்கள். எண்ணிக்கை குறைவாக இருப்பதாலேயே எதுவுமே செய்ய இயலாது என்று, எண்ணிவிடக்கூடாது. சமூகத்தை மாற்ற விரும்புகிறவர்கள், முன்னுதாரணமாக வாழ விரும்புகிறவர்கள் எக்காரணம் கொண்டும் நம்பிக்கை இழக்கக்கூடாது.

உண்மையாகச் சொல்லுங்கள்? பெண் விடுதலை வந்துவிட்டதா? இல்லையா?

இது ஆணாதிக்க சமுதாயம் என்பதில் மாற்றமேயில்லை. ஆனால், பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக, போராட வேண்டும்’ என சேர்ந்தபோது என் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒருவர், ஒரு பெண்ணுக்குக் கீழ் பணியாற்ற முடியாது என்று பதவி விலகிவிட்டார்.

மாற்றங்கள் குடும்பங்களில் தொடங்க வேண்டும் ஆண் மனதிலும், பெண் மனதிலும் நிறைய மாற்றங்கள் ஏற்பட வேண்டும். பெற்றவர்கள் ஏற்பாடு செய்யும் திருமணங்களை விட காதல் திருமணங்கள் பெருக வேண்டும்.

பொதுவாகவே சமூக மாற்றம் குறித்து, சிந்திக்கும் யாரும், தங்களுக்கென்று, சில வழிமுறைகளை குத்துக்கொண்டுதான் வருகிறார்கள். ஆனால், அந்த வழிமுறைகள் தவறென்று அனுபவம் சொல்லித் தந்தால் அதை மாற்றிக்கொள்ள வேண்டும் தன் கருத்து மட்டும்தான் சரி, என்கிற பிடிவாதம் அவசியம் இல்லை.

சினிமாத்துறை வாங்கித் தந்திருக்கும் பிரபலம் என்கிற பெயர் உங்களுக்கு பெருமிதம் தருகிறதா?

சினிமாவை, நான் ஒரு தொழிலாக மட்டுமே நினைக்கிறேன். இதில், பெருமிதம் கொள்ள எதுவுமில்லை. இன்று, சமூக மாற்றம் நிறைய ஏற்பட வேண்டியுள்ளது. தமிழ் தன் இயல்பான இடத்தில் இல்லை. இவற்றையெல்லாம் ஏற்படுத்த முடிந்தால்தான், பெருமிதம் கொள்ள முடியும்.

என்னைப் பொறுத்தவரை ஒரு விவசாயியும், ஒரு மருத்துவரும் தான், தங்கள் தொழிலில் பெருமிதம் கொள்ள முடியும். படைப்பில் மகிழ்ச்சியிருக்கிறது. அது போதும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2002

பெற்றோர் பக்கம்
ஓ அன்றில் பறவைகளே!
மனம் விரும்பும் பணம்
கேள்வி பதில்
பொதுவாச்சொல்றேன்
மனதி சக்தி மகத்தான சக்தி
வணக்கம் தலைவரே!
பிரச்சனைகளை சமாளிக்கும் பார்முலா
கேள்வி பதில்
இலட்சியம் வெற்றிக்கு அடிப்படை
வாசகர் கடிதம்
இதுவரை நீங்கள் சாதித்தது என்ன?
உறவுகள் உணர்வுகள்…
உள்ளத்தோடு உள்ளம்
நம்பிக்கை நானும்
முயற்சி சிறகுகளை