Home » Articles » வணக்கம் தலைவரே!

 
வணக்கம் தலைவரே!


முத்தையா ம
Author:

பதவி என்பது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கான பொதுவழிச் சாலை அதனைப் புதிய சுகங்களையும், அனுபவிப்பதற்கான புறவழிச்சாலையாகப் பயனபடுத்துபவர்களைக் கையாள தலைவருக்குத் தெரிந்திருக்க வண்டும். அதற்கு முதல் தேவை. தலைவர்தான். வந்த சாலையை சரியாகப் பயன்படுத்துவதுதான்.

பொது வாழ்க்கையை ஒரு சாலையாக உருவகப்படுத்துவது, சுவாரஸ்யம் கருதி மட்டுமல்ல. அதற்கொரு காரணமும் இருக்கிறது.

ஆரம்பத்தில் பொது வாழ்க்கை இத்தனை சுகமாய் இருந்ததில்லை. குண்டும் குழிகளும் நிரம்பிய பாதையாய், கல்லும் மேடும் நிறைந்த கலவையாய், கால்களைக் கிழிக்கும் சில்லுகளின் சிதறுலோடுதான் இருந்தது.

பல தலைவர்கள் தங்கள் தியாகத்தின் வழி “பொதுவாழ்க்கை” என்கிற சாலையைப்பழுது பார்த்து, அதனை சமச்சீரான பொதுவழிச் சாலையாய் உருவாக்கித் தந்தனர். இலக்கை விரைவாக எட்ட சாலை ஒரு தடையாக இருக்கக்கூடாது என்கிற சிந்தனைதான் இதன் அடித்தளம்.

ஆனால், பின்னால் வரத்தொடங்கிய தலைமுறைகளின் தலைர்கள், இலக்கை இலட்சியத்தை எட்டும் நோக்கத்தில் இல்லாமல் பயண சுகத்திற்காக மட்டுமே பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு சலுகைகளையும், சுகங்களையும் சேர்க்கத் துவங்கினர். அதனாலேயே பொதுவழிச்சாலை, புறவழிச்சாலையாகிப் போனது. பதவி என்பது, பணமும் புகழும் குவிக்கும் மார்க்கமாய் ஆனது.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும், அவன் தவிர்க்க நினைக்கிற அசிங்கமான மனிதன் இருக்கிறான். ஆசை, ஆணவம், குறுக்குச்சிந்தனை எல்லாம் கொண்ட மனிதன் இவன். இவனை வெற்றி கொள்ளாதவரை ஒருவர் தலைவராக உலகை வெல்ல முடியாது.

சமீபத்தில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களைத் தலைவராகக்கொண்டு வெற்றித்தமிழர் பேரவை என்கிற அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம். அந்த அமைப்புக்கு, கவிஞர் கொடுதிருக்கும் கொள்கை வாசகம், “உன்னை வெல்வாய் தமிழா” “உலகை வெல்வாய் தமிழா”

உள்ளுக்குள் இருக்கும் ஆசையை ஆணவத்த,தவறான எண்ணங்களை வெற்றி கொள்பவனே வெளியுலகில் தலைவனாக முடியும்.

இது குறித்து ரவீந்திரநாத் தாகூர் இன்னும் விரிவாகப் பேசுகிறார்.

கூட்டமொன்றில் பங்கேற்க்க்கிளம்பி வருகிறேன்.

எனக்குள்ளேயே இருக்குமிந்த இருட்டு மனிதன் யார்?

அவனிடமிருந்து விலக முயல்கிறேன்; இயல்வதில்லை;

புழுதி கிழப்பி நடக்கின்றான் அவன்;

என்னுள் இருகும் அவனுக்கு எந்த வெட்கமும் கிடையாது.
ஆனால், அவனோடு உன் வாசல்வர – இறைவா எனக்கு வெட்கமாயிருக்கிறது”

பொதுவாழ்க்கை கூட கடவுள் சந்ந்திதான். அங்கே சுயநலத்தின் துணையோடு வர தன் சுயம் கூசுவதை உணரும் தலைவர்களால்தான் தன்னலமறவர்களாத் திகழ முடியும்.

இந்த தன்னலமற்ற தன்மை எப்படி ஏற்படும்?

தனி வாழ்க்கையில் தன்னிறைவு பெற்றவர்கள் மட்டுமே பொதுவாழ்க்கைக்குப்ப பொருத்தமானவர்கள் என்பதை அவர்கள் உணரவேடும். அத்தகைய மனிதர்களை மட்டுமே பொறுப்பான பதவிகளில் அமர்த்த வேண்டும்.

இயக்கம் மேற்கொண்டிருக்கும் கொள்கைகளை இதயப்பூர்வமாக நேசிப்பவர்களால், அதில் பயன்பெற முடியுமா என்று சிந்திக்க முடியாது.

தனது வாழ்க்கை பற்றி பெர்னாட்ஷா எழுதி வைத்திருக்கும் சிறு குறிப்பு. மிக அழகானது. பொது வாழ்க்கைக்கு வரும் ஒவ்வொருவருக்கும் பொருத்தமானது.

“என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்க உலகம் உதவுவதில்ல என்கிற குழந்தைத் தனமான புகார்களை விட்டுவிட்டு, இயற்கையின் கைகளில் என்னை ஒரு கருவியாக ஒப்படைப்பதுதான் சுகமானது என் வாழ்க்கை, இந்தச் சமூகம் முழுமைக்கும் சொந்தமானது. அதற்காக இயன்றவரை புணிபுரிவதே எனக்குப் பெருமிதமானது.

மரணத்திற்கு முன் இந்த உலகம் என்னை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை, வாழ்க்கை என்பது உருகி கரைகிற மெழுகுவர்த்தி அல்ல. நான் உயர்த்திப் பிடிக்க வேண்டிய நந்தாவிளக்கு.

அதனை, அடுத்த தலைமுறையின் கைகளில் ஒப்படைக்கும் முன்பாக, அந்த நந்தா விளக்கு, நன்கு கொழுந்துவிட்டெரியச் செய்ய வேண்டியது என் பொறுப்பு”

இந்த வாசகங்களை மறுபடியும் மறுபடியும் வாசித்துப் பாருங்கள்.

தாகூர் – பெர்னாட்ஷா – வைரமுத்து, மூவரும் உணர்த்தும் உண்மையே தலைமைப் பண்பின் இருப்பதி ஐந்தாவது விதியாகிறது.

தலைமை என்பது விண்ணைத் தொடும் உயர்வல்ல..
தன்னை வெல்லும் நிறைவு…”

– தொடரும்…


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


January 2002

பெற்றோர் பக்கம்
ஓ அன்றில் பறவைகளே!
மனம் விரும்பும் பணம்
கேள்வி பதில்
பொதுவாச்சொல்றேன்
மனதி சக்தி மகத்தான சக்தி
வணக்கம் தலைவரே!
பிரச்சனைகளை சமாளிக்கும் பார்முலா
கேள்வி பதில்
இலட்சியம் வெற்றிக்கு அடிப்படை
வாசகர் கடிதம்
இதுவரை நீங்கள் சாதித்தது என்ன?
உறவுகள் உணர்வுகள்…
உள்ளத்தோடு உள்ளம்
நம்பிக்கை நானும்
முயற்சி சிறகுகளை