Home » Articles » மனம் விரும்பும் பணம்

 
மனம் விரும்பும் பணம்


ஜெயசித்ரா குமரேசன்
Author:

ஜெயச்சித்ரா குமரேசன்
MLM ஆலோசகர்

வாழ்க்கையை பணத்தால் அளக்கும் காலம் இது. வாழ்க்கையில் முன்னேறுவது என்பது பணம் சேர்ப்பதில் மட்டுமல்ல என்று வாதிட்டாலும், செல்ம் சேர்பதையும் சேர்த்துத்தான் முன்னேற்றத்தைக் கணக்கிட வேண்டியுள்ளது. செல்வம் சேர்க்க நாம் செய்யும் தொழில் நியாயமானதாக இருக்கவேண்டும் என்ற ஒரு வரையறை மட்டும் வைத்துக் கொள்ளலாம்.

இன்று விரைவாக செல்வம் சேர்க்க விரும்பும் பலரும் மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்னும் வியாபாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே MLM பற்றிய சில தெளிவுகளைத் தருவது நமது கடமையாகிறது.

இதில் கூறப்படும் செய்திகள் நடைமுறையில் உள்ள பல நிறுவனங்கள் கடைபிடிக்கும் அடிப்படை விஷயங்கள் மட்டுமே.

இந்தத் தொழிலில் ஈடுபட விரும்புவோர், மேற்கொள்ளவேண்டிய திட்டமிடல், அவற்றோடு இருக்க வேண்டிய உற்சாக மனப்பான்மை எதையும் எதிர்கொள்ளும் துணவு போன்ற வழிகாட்டுதல்களைத் தரவே இந்தத் தொடர்.

மல்டி லெவல் மார்க்கெட்டிங் பற்றிய புதுமைத் தொடர்..

மனிதனின் வாழ்க்கைக்கு பணம் அவசியம்தான். பணமே வாழ்க்கையில்லை என்றாலும் பணம் இல்லாத வாழ்க்கை ருசிக்காது.

இதனைத்தான் “பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை” என வள்ளுவரும் சுட்டிக் காட்டியுள்ளார்.

மனிதன் விரும்பும் பணம் நிச்சயமாக நேர்மையான வழியில் வந்தால் மட்டுமே மனிதனால் நிம்மதியாக அனுபவிக்க முடியும். எனவே பணம் வரும் வழி நல்வழியாக இருப்பது அவசியம்.

பணம், புகழ், பதவி, பாதுகாப்பு, மனமகிழ்வு, நிம்மதி ஆகிய அனைத்தும் ஒன்று சேர கிடைத்தால் எப்படியிருக்கும்? நினைதாலே மனசு பூரிப்படைகிறதல்லவா, இது சாத்தியமா என தோன்றுகிறதல்லவா, சாத்தியமே என உங்களுக்கு உறுதி கூறவே இந்த முயற்சி.

மேற்குறிப்பிட்ட அனைத்தும் கிடைத்து, சாதாரண மனதன் சாதனையாளராக, இருபத்தியோராம் நூற்றாண்டில் உள்ள மிகச்சரியான வழி “மல்டி லெவல் மார்க்கட்டிங்” என்னும் வியாபாரம்.

அலாவுதீனும் தெரியும். அற்புத விளக்கு பற்றியும் தெரியும்.நாம் ஒவ்வொஒருவரும் வாழ்க்கையில் விரும்புவதையெல்லாம் அடைய உதவும் இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் அற்புத விளக்குதான் இந்த மல்டி லெவல் மார்கெட்டிங் (MLM) வியாபாரம்.

மற்றவர்களை முன்னேறச் செய்து, நாமும் முன்னேற்றமடைந்து உயர் நிலையை அடைய உதவும் அற்புதமான, இந்த வியாபாரத்தை மனித குலம் அறிந்து புரிந்து, விடா முயற்சியுடன் ஈடுபட்டு, வாழ்வில் உயர் நிலையை அடைய வழிகாட்டும் சிறிய பணியின் தொடக்கமே இது.

21ம் நாற்றாண்டில் கொடிகட்டிப் பறக்கும் MLM வியாபாரத்தை தெரிந்து கொள்வதை விட, புரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

முதலில் பல நிறுவனங்கள் MLM வியாபாரம் என்ற பெயரில் தங்களது வியாபார வலையை வீசி கவர்ச்சியால் மயங்கும் பலரை மயக்கி கொஞ்ச காலத்தில் பல மடங்கு பணத்தை அவர்கள் சம்பாதித்து விடும் அபாயநிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

நீங்கள் MLM வியாபாரம் செய்யும் முன் கவனிக்க வேண்டியவை

1. MLM நிறுவனம் – எத்தனை வருட அனுபவம் உள்ளது

– வேறு ஏதாவது நாடுகளில் இதற்கு முன் நடைபெற்று வருகிறதா. – எவ்வளவு சொத்து மதிப்பு Turn over உடையது.

– எப்படிப்பட்ட பொருள்களை சந்தைக்கு அறிமுகப்படுத்துகிறது.

2. அந்த நிறுவனம் ஒரு கால அவகாசம் கொடுத்து, செயல்படாத உறுப்பினர்கள் கட்டிய முழுத் தொகையையும் திருப்பி அளிக்கிறதா?

3. WDSA – World Direct Selling Association

IDSA – Indian Direct Selling Associatio

இவற்றின் அனுமதியுடன் இயங்குகிறதா?

4. எவ்வளவு நபர்கள் உங்களுக்கு தெரிந்து இந்த நிறுவனத்தின் மூலம் வளமான வாழ்க்கையை அடைந்துள்ளார்கள்?

5. அந்த நிறுவனம் அதன் தயாரிப்பு பொருள்களை MLM திட்டம் மூலம் மட்டும் விற்பனை செய்து வருகிறதா? (Exclusively) அல்லது தனது பொருட்களை வெளிமார்க்கெட்டிலும் விறபனை செய்கிறதா?

6. மக்களுக்கு திரும்ப, திரும்ப தேவைப்படும் பொருள்களை வழங்குகிறதா? அல்லது ஒருவர் ஒருமுறை மட்டுமே வாங்கும் பொருள்களை வழங்கிறதா?

7. MLM திட்டத்தின் மூலம் மக்களிடம் சேரும் பொருள்களில், ஒருவேளை அவர்களுக்கு பிடிக்காவிடில் முழுத் தொகையினையும் திருப்பி வழங்கக்கூடிய Return Policy உள்ளதா?

8. எந்த நிறுவனம் அவர்களது பொருள்களைப் பற்றிய முழு விவரங்களையும் பயிற்சியின் மூலம் விற்பனையாளர்களுக்குத் தெரியப்படுத்துகிறது.

9. MLM திட்டம் அந்த நிறுவனத்தில் பிரமீடு முறையில் பணச் சங்ககிலி Money chain சுழற்சி முறை இதுபோல இல்லாமல் இருக்கிறதா?

இவற்றையெல்லாம் ஆராய்ந்து சேருதல் பயன்தரும்.

ஆகவே, எப்படி +2 படிக்க ஒரு நல்ல பள்ளியைத் தேர்ந்தெடுக்கிறோமோ, அதுபோல MLM செய்வது என்றாலும்,மேற்கூறிய அனைத்தையும் அலசி ஆராய்ந்து நல்ல நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பது நமது பொறுப்பு.

குறுகிய காலத்தில் நிறை பணம் வந்து சேரும் என்ற ஆர்வத்துடன், அவசரமாக நண்பர்களின் கவர்ச்சி பேச்சுக்களை மட்டும் நம்பி MLM வியாபாராத்தில் ஈடுபட்டு தோல்வி அடைந்தவர்கள் பலர். கவனமுடன், விவேகத்துடன், முன்னெச்சரிக்கையுடன் கவனித்து வெற்றிமாலை சூடியவர்கள் சிலரே. எனவே, விழிப்புணர்வு ஏற்படுத்துவது நமது கடமையாகும்.

அனைத்தையும், ஆராய்ந்து சரியான நிறுவனத்தை தேர்ந்தெடுத்து, இணைந்து விட்டீர்கள்! இனி என்ன செய்வது?

மக்களில் இரண்டு வகை உண்டு.

ஒன்று, நடப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்.

இரண்டு, நடப்பதற்குக் காரணமாயிருப்பவர்கள்.

இதில், நீங்கள் எந்த வகை? முடிவு செய்யுங்கள்.

ஒவ்வொன்றைப் பற்றியும் ஆராய்ச்சி செய்பவர்கள் நிச்சம் பணம் சம்பாதிக்க முடியாது.

MLM துறையில் ஒருவர் வெற்றி பெற இரண்டு விஷயங்கள் முக்கியம்

1. அவசியமான தேவை (Needs)

2. உறுதியான நம்பிக்கை (Faith)

அதாவது, அவசியமான தேவை X உறுதியான நம்பிக்கை = தன்னம்பிக்கை

“தன்னம்பிக்கை” உடைய ஒருவன் நிச்சயம் வெற்றி பெறுவான். தன்னம்பிக்கை ஏற்பட தனது தேவை என்ன என்பதைத்தெளிவாக அறிந்திருத்தல் மிகவும் அவசியம்.

அடுத்து, தான் செய்யப்போகும் MLM வியாபாரத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு செயல்படல் மிக மிக அவசியம்.

MLM வியாபாரத்தில் ஈடுபட்டால் நாம் கோடீஸ்வரன் ஆக முடியும் என்ற உறுதியுடன் ஈடுபட வேண்டும்.

மனிதனின் தேவைகள்

1. எனது குடும்பம் வசிக்க ஓர் அழகான நல்ல வீடு தேவை.

2. குழந்தைகளை அவர்களது திறமைக்கேற்ப படிக்க வைக்க வேண்டும்.

3. வங்கியில் நமது பாதுக்காப்பு, மருத்துவ செலவிற்காக இருப்பு தேவை.

4. சௌகரியமான பயணத்திற்கு ஒரு கார் தேவை.

5. சமுதாய அந்தஸ்து தேவை.

6. மற்றவர்களுக்கு உதவி செய்யவும், சமூக சேவையும் செய்யவும் பணம் தேவை.

7. வெடுநாடுகளைச் சுற்றிப் பார்க்க விரம்பினால் அதற்குபணம் தேவை.

8. Residual, Royalty – வருமானம் தேவை.

9. அனைவரும் போற்றத்தக்க நல்ல புகழ், பதவி, உயர் நிலை தேவை.

இதுவரை வேலையிலும், வியாபாரத்திலும் இரவு, பகலாக உழைத்து, மிஞ்சியது ஒன்றுமில்லை. எந்தக் கனவும் நிறைவேறவில்லை.

எனவே, அனைத்தையும் தரும் அமுதசுரபி, அட்சய பாத்திரம் ஆன MLM வியாபாரத்தில் உழைப்பைப் போட வேண்டும். அந்த உழைப்பும் உறுதியான நம்பிக்கையுடன் கூடிய உழைப்பாக இருக்க வேண்டும்.

உறுதியான நம்பிக்கை எதன் மீது தேவை?

1. நமது நிறுவனத்தின் மீது.

2. நமது நிறுவனத்தின் பொருள்கள் மீது.

3. நமது நிறுவனத்தின் வியாபார திட்டத்தின் மீது.

4. நமது குடும்பத்தின் மீது

5. நம்மீது.

6. நம் எதிர்காலத்தின் மீது உறுதியான நம்பிக்கை இருக்க வேண்டும்.

மேற்கண்டவற்றில் என்றைக்கு முழுமையான, உறுதியான அசைக்க முடியாத, நம்பிக்கை உங்களுக்கு வருகிறதோ அன்று முதல் வெற்றித் திருமகள் உங்கள் பக்கமே.

நமது எதிர்காலம், அடுத்த ந்தாண்டுகளில் எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிக்க வேண்டும். நமக்கு என்ன தேவை என சரியாக தெரியாவிட்டால் வாழ்வில் வெற்றி பெற இயலாது. எனவே, என்ன தேவை என புரிந்து, அதனை நம்மால் அடைய முடியும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் செயல்பாட்டால் வெற்றி நிச்சமே!

இனி வெற்றிப் பாதையில் நடைபயில்வது பற்றி.. அடுத்த இதழில் பார்ப்போம்.

இணைந்த கைகள் எதையும் சாதிக்கும்!

 

2 Comments

  1. suresh says:

    sir, very nice artical,
    i want know about this continuos.
    pls sent me mail
    thanks

Leave a Reply to suresh


 

 


January 2002

பெற்றோர் பக்கம்
ஓ அன்றில் பறவைகளே!
மனம் விரும்பும் பணம்
கேள்வி பதில்
பொதுவாச்சொல்றேன்
மனதி சக்தி மகத்தான சக்தி
வணக்கம் தலைவரே!
பிரச்சனைகளை சமாளிக்கும் பார்முலா
கேள்வி பதில்
இலட்சியம் வெற்றிக்கு அடிப்படை
வாசகர் கடிதம்
இதுவரை நீங்கள் சாதித்தது என்ன?
உறவுகள் உணர்வுகள்…
உள்ளத்தோடு உள்ளம்
நம்பிக்கை நானும்
முயற்சி சிறகுகளை