Home » Articles » பிரச்சனைகளை சமாளிக்கும் பார்முலா

 
பிரச்சனைகளை சமாளிக்கும் பார்முலா


இராமநாதன் கோ
Author:

ஒரு இண்டர்நெட் ஜோக்:

நள்ளிரவில் தூக்கம் கலைந்து எழுந்த அவள், பக்கதில் படுத்திருந்த கணவனைக் காணாமல் திடுக்கிட்டாள்.

பரபரப்பாகத் தேடியவள் கடைசியில் அவனை சமையலறையில் கண்டாள்.

ஒரு கப் காபியை கையில் வைத்துக் கொண்டு, எங்கேயோ வெறித்துப் பார்த்தப்படி ஏதோ சிந்தனையில் மூழ்கியிருந்தன்.

“என்னாச்சு… ஏன் இந்த நேரத்தில்?” தோளைத் தொட்டாள்.

தலையைத் திருப்பாமல் அவன் கேட்டான். “இருபது வருஷத்திற்குமுன்னாடி நாம காதலர்களா திரஞ்சோமே.. ஞாபகமிருக்கா?”

“ஆமா..”

“நம்மளை ஒரு நாள் கையும் களவுமா உங்க அப்பா புடிச்சாரே, அது…?”

“நல்லா ஞாபகம் இருக்கு.. அது மட்டுமல்ல… அப்போ உங்க நெற்றிப் பொட்டுல துப்பாக்கியை எச்சு, மரியாதையா என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ.. இல்லேன்னா மைனர் பொண்ணை டாவடிச்சுக்காக இருபது வருஷம் ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும்னு அவர் மிரட்டினதுகூட ஞாபகம் இருக்கு. சரி அதுக்கென்ன இப்பபோ?”

“ஜெயிலுக்கு போயிருந்தா இந்நேரம் நான் விடுதலை ஆகியிருப்பேன்!”” என்றான் அவன்.

இனி, நகைச்சுவையை விட்டு, நடை முறையல் நம்மனத்தில் ஏற்படும் சஞ்சலங்களைப் பார்ப்போம்.

நம்மனம் எப்போதெல்லாம் த்த்தளிக்கிறது?

தோல்விகளின் போது….

பிரச்சைகளைச் சமாளிக்க முடியாத போது…

பிறர் நம்மை குறை சொல்லும்போது…

நம்மைவிட திறம குறைவானரகள் உயர்வடைந்ததாக நினைக்கும்போது…

என்ன செய்வதென்று தெரியாத குழப்பத்தின்போது…

நம்மைப்பற்றி தாழ்வாக நினைக்கும் போது…

பிறர் ம்மை புண்படுத்தும் போது..

நாம் எதிர்பாராத மாற்றங்களின்போது.. நாம் எதிர்பார்த்தவைகள் நிகழாத போது..

பிறர் நம்மை ஆதரிக்காதபோது. ஏதாவது பயம் நம்மை ஆட்டுவிக்கும் போது…..

இப்படி, பட்டியலை எழுதிக் கொண்டே போகலாம்.

இன்னுமொரு முக்கிய விஷயம் என்னவன்றால், அது எதனால் ஏற்படுகிறது என்பதே பலரக்குப் புரிவதில்லை.

நான் சமீபத்தில் சந்தித்த ஒரு மனிதரை இங்கு பார்ப்போம்.

“எனக்கு என்னான்னே தெரியல மனசுல நிம்மதியேயில்லை”

“எப்போதிருந்து?”

“எப்பன்னு சரியா சொல்ல முடியாது அப்பப்போ வருது”

“சரி அப்பவெல்லாம் என்ன செய்வீங்க?”

“கோபத்தில் வெடிச்சிடுவேன். அப்புறம் அதை நெனச்சி கஷ்டப்படுவேன்”

“எல்லோரும் ஓரளவு நலவங்கதான். ஆனா, யாரைப் பார்த்தாலும் எரிச்சலா வருது”

“நீங்க என்ன செய்றீங்க?”

“ஆபிஸில சூப்ரடெண்டா இருக்கேன்”

“அங்கே போனா மனசுக்கு ஏதோ விடுதல கிடைச்ச மாதிரி இருக்கும்”.

“அதெப்படி?”

“ஆபிஸில இருக்கிறவங்கள பார்த்தா மகிழ்ச்சியா இருக்குது. அவங்கள ரொம்ப நேசிக்கறேன்.”
“அதப் போலவே வீட்டுலேயும் இருந்தா என்ன?”

“ஊரே என்னை பெருமையா பேசும். ஆனால், என் மனைவி மட்டும் நான் சொல்வதை ஏத்துக்கமாட்டா”

“உங்க ஆபிஸில இருக்கிறவங்களை விரும்பற மாதிரி உங்க மனைவியையும் நேசித்தால்..”

“ஓ.. அப்படியா! அப்போ சரியாயிடும் போல தெரியுது”

“சரி. முயற்சி பண்ணுங்க. நிச்சயமா சரியாயிடும்.”

மன சஞ்சலத்தின் போது மனிர்கள் என்ன செய்கிறார்கள்.

சிலர் தளர்ந்து விடுகிறார்கள்.

சிலர் தவிக்கிறார்கள்.

சிலர் தடுமாறுகிறார்கள்.

சிலர் தாங்க இயலாத வேதனையில் அவதிபபடுகிறார்கள்.

ஒரு சிலர் போதையில் அதை மறக்க வைக்க நினைக்கிறார்கள்.

சிலர் நமக்கேன் வம்பு என அப்படியே விட்டுவிட்டு ஒதுங்கிக்கொள்கிறார்கள்.

நாம் கடவுளிடம் வேண்டும்போதுகூட “கடவுளே பிரச்சினைகளே வரக்கூடாது. எனக்குள்ள கஷட்ங்களயெல்லாம்நயே தீர்த்து வை” என்றுதான் வேண்டுகிறோம்.

பல சமயங்களில் யாராவது இரண்டு பேர் தங்களுடைய சிக்கல்களை தங்களிடம் சொன்னால் என்ன சொல்கிறோம்?

“ஒருத்தரோட ஒருத்தர் ஒத்துப்போங்க. எதுக்கு பிரச்சனை உண்டாக்கறீங்க. நீங்களே சரியா இருந்துக்கணும்ம னு தீர்ப்பு கூட சொல்வோம்.

இவை எதனால்?

நமக்கு பிரச்னகளைச் சந்திக்கவே பயம். அதனால்தான் கடவுளையே தீர்த்து வைக்கச் சொல்கிறோம்.

மேலும், பிரச்சனை என்ன? அது எதனால் உண்டாகியது என்று காரணங்களை நாம் அறியமுடியாததால் எல்லாம் போகப்போக சரியாயிடும் என்றுகூட சொல்லி விடுகிறோம்.

இதற்கு என்ன செய்யலாம்?

முதலாவதாக, என்னதான பிரச்சனை என்பதைத்தெளிவாக அறிய வேண்டும். பிரச்சனையே என்னவென்று தெரியாதபோது அதைத்தீர்ப்பது சாத்தியமாகாது.

இரண்டாவது, அதன் மூல காரணம் என்ன? என்பதை அறிதல் ஏண்டும். காரணத்தைக் கண்டுபிடித்தாலே பிரச்சையை தீர்பது எளிதாகிவிடும்.

மூன்றாவது, அதைத்தீர்க்க என்னென்ன வழிகள் என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அதன் லாப நஷ்டங்களைப் பட்டியலிட வேண்டும்.

நான்காவது, அதில் எது சிறந்ததோ அதை தேர்ந்து செயல்படுத்துவதே பிரச்சனைகளைச் சமாளிபதற்கான அடிப்படை சூத்திரம்.

தொடரும்…


Share
 

1 Comment

  1. daniel says:

    அருமையான பதிவு அன்பரே! தொடர்ந்து இதனை சிறப்பாக எழுத வாழ்த்துக்கள்.

Post a Comment


 

 


January 2002

பெற்றோர் பக்கம்
ஓ அன்றில் பறவைகளே!
மனம் விரும்பும் பணம்
கேள்வி பதில்
பொதுவாச்சொல்றேன்
மனதி சக்தி மகத்தான சக்தி
வணக்கம் தலைவரே!
பிரச்சனைகளை சமாளிக்கும் பார்முலா
கேள்வி பதில்
இலட்சியம் வெற்றிக்கு அடிப்படை
வாசகர் கடிதம்
இதுவரை நீங்கள் சாதித்தது என்ன?
உறவுகள் உணர்வுகள்…
உள்ளத்தோடு உள்ளம்
நம்பிக்கை நானும்
முயற்சி சிறகுகளை