Home » Articles » பார்க்க முடியாத போதும்.. படிப்பின் பலமே போதும்!

 
பார்க்க முடியாத போதும்.. படிப்பின் பலமே போதும்!


admin
Author:

பி.எச்.டி பட்டம் வாங்கப் போகும் முதல் பார்வையிழந்த பெண்

பி.ஏ. வரலாற்றில் தங்கப்பதக்கம், எம்.ஏ. வரலாற்றில் தங்கப்பதக்கம், பார்வையற்ற பெண்களின் நிலை குறித்து எம்ஃபில், பட்ட ஆய்வு, இப்போது பார்வையற்றோரின் தொழில் நுட்பக் கல்வி, பொருளாதார நிலை பற்றிய பி.எச்.டி ஆய்வு….

இத்தனை சாதனைகளையும் செய்திருக்கும் “எலிசபெத் லாவண்யா பாப்பி” பிறவியிலேயே பார்வையிழந்த பெண்!

பி.எச்.டி பட்டம் பெறப்போகும் முதல் பார்வையிழந்த பெண் இவர்தான் (ஆண்களில் சிலர் ஏற்கனவே முடித்திருக்கிறார்கள்.)

பனியன் கம்பெனி ஒன்றில் போர்மென் வேலை பார்த்துவரும் திரு. குழந்தைசாமியின் மகள் எலிசபெத் லாவண்யா. மகளின் பார்வைக் குறைவு 3 – வயது வரை இவர்களுக்குத் தெரியவில்லை. வீட்டுக்குள்ளேயே குழந்தை தடுமாறுவதை விருந்தினர்கள் கவனித்துச் சொன்னபோது பெற்றோர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

கோவை பாத்திமா கான்வென்டில் படிக்க வைத்தார்கள. பார்வையிழந்த பெண்ணின் பாதையில் வெளிச்சம் அளிக்க வந்தவர்தான் பாத்திமா கான்வென்டின் முதல்வர் கரோலி லீமாரோஸ். 3 – ம் வகுப்புவரை எலிசபெத் படித்து அங்கேதான். பார்வையற்றோருக்கான பிரத்யோகப் பள்ளி சென்னையில் இருப்பதைச் சொல்லி சேர்த்து விட்டதும் அவர்தான்.

தேனாம்பேட்டை லிட்டில் பிளவர் பள்ளியில் ஏழாவது வரை படித்த எலிசபெத், கோவை அவிநாசிலிங்கம் பள்ளியில் ஒருங்கிணைந்த கல்வி இருப்பதாகக் கேள்விப்பட்டு 8 – 12 வரை அங்கே படித்தார்.

பிறகு, அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. வரலாறு படித்து எம்.ஏ.வும் முடித்தார். இரண்டு நிலைகளிலும் தங்கப்பதக்கம் பெற்ற இவரை விரிவுரையாளராக்கிப் பார்க்கும் ஆசை இவரது ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரும்பியது.

பார்வையற்ற பெண்கள் நிலை குறித்து எம்ஃபில், ஆய்வு செய்த எலிசபெத் இன்னொரு சாதனையும் செய்துள்ளார். மாநில அளவிலான


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2001

நம்பிக்கையும் நானும்
மனசு விட்டுப் பேசுங்க!
வணக்கம் தலைவரே
மனித சக்தி மகத்தான சக்தி
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்
பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
பார்க்க முடியாத போதும்.. படிப்பின் பலமே போதும்!
உள்ளத்தோடு உள்ளம்
சிரிப்போம் சிறப்போம்
வெற்றியின் மனமே
வாசகர் கடிதம்
உன் வாழ்வு மலரும்!
வாடிக்கையாளரே மன்னர்
உறவுகள் உணர்வுகள்…
உற்சாக நீரூற்று
நல்ல நண்பன் வாழ்வின் துணைவன்
நிறுவனர் பக்கம்
தொழில் முனைவோர்க்குத் தேவையான குணநலன்கள்