Home » Articles » வெற்றியின் மனமே

 
வெற்றியின் மனமே


இராமநாதன் கோ
Author:

மாதச் சம்பளம் பெறுவோருக்கு, இருபது சதம் சேமிப்பு முறைதான் சிறந்த வழி.

கடனில் மூழ்கி அவதிப்படுவோருக்கு, செலவைக் குறைப்பதுதான் சிறந்தவழி.

தம்மால் கடுமையாக உழைக்க முடியும். சுயமாக தொழில் செய்ய முடியும் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு மூன்றாவதாக ஒரு வழி உண்டு.

அதுதான் கடன் வாங்கி வருமானத்தை அதிகமாக்குகின்ற வழி.

அது என்ன வழி என்று பார்க்கும் முன் ஒரு கேள்வி.

கடன் வாங்கி சிலர், கடனாளியாகி அவதிப்படுகிறார்கள். இன்னும் சிலர் கடன் வாங்கி அதிலிருந்து பணக்காரனாகிறார்களே அதெப்படி?

ஒரு நகைச்சுவை;

எலக்ட்ரிசிட்டி – மீட்டர் கணக்கை பார்க்கும் இருவர் தங்ளுடைய வண்டியை அந்த வீதியின ஒரு மூலையில் நிறுத்திவிட்டு, ஒவ்வொரு வீடாகச் சென்று, அந்தந்த வீட்டின் மீட்டர் கணக்கை எழுதிவிட்டு கடைசியாக ஒரு பெண்ணின் வீட்டிற்கு வந்தனர்.

அங்கேயும் மீட்டர் கணக்கை பார்த்து எழுதினர்.

இதை சன்னலின் வழியாக அப்பெண் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மீட்டர் கணக்கை எழுதிக் கொண்டிருத இருவரும் அவர்களுக்குள் ஏதோ பேசிவிட்டு திடீரென ஓட ஆரம்பித்தார்கள்.

இதைப் பார்த்த அப்பெண்மணியும் அவர்கள் பின்னால் வேகமாக ஓடி வந்தாள்.

தங்கள் வண்டியை நெருங்கிக்கொண்டிருந்த அவ்விருவரும் திரும்பி அப்பெண்ணைப் பார்த்து, “ஏன் இப்படி மூச்சிரைக்க ஓடி வருகிறாய்?” என்று கேட்டனர்.

“என் வீட்டு மீட்டரைப் பார்த்ததும் வேகமாக நீங்கள ரெண்டுபேரும் ஓடி வந்தீங்க? என்ன விஷயம்னு தெரியல. சரி, நாமும் ஓடிடுவோமேனு ஓடி வந்தேன்” என்றாள்.

“நாங்க ரெண்டு பேரும், எங்களுக்குள் ஒரு சின்ன போட்டி வச்சோம். யார் முதலில் வண்டிக்கு ஓடி வர்றோமோ, அவருக்கு மற்றவர், விருந்து தர்ற வேண்டுமென எங்களுக்குள் பேச்சு. அதனால் நாங்க ஓடி வந்தோம்” என்றனர்.

“அடேடே.. அப்படியா விஷயம். எங்க வீட்டுக்கிட்ட இருந்து ஓடி வந்ததாலே என்னமோன்னு நினைச்சு நானும் முட்டாள்தனமா ஓடி வந்துட்டேன்” என்றாள்.

இனி விவாதத்திற்கு வருவோம்.

பெரும்பாலான சமயங்களில் நாம் தவணை முறையில் பொருட்களை வாங்குவதிலும், பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதிலும், நிதி நிறுவனங்களில் பணத்தைச் சேமிப்பதிலும், மற்றவர்களைப் பார்த்தோ அல்லது சொல்வதைக் கேட்டோ பிறரைப் போலவே செய்கிறோம். பின்னாளில் சிக்கல் வரும்போது என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பமடைகிறோம்.

இதற்கு அடிப்படையாக சில விவரங்களை அறிதல் நல்லது.

கடன் வாங்குவதென்றால் பயம். கடன் வாங்கினால் தவறு என்று நினைக்கிறோம். ஆனால் அதில் நல்ல கடன் எது?தவறான கடன் எது? என்பதை அறிவதில்லை.

செலவு செய்திலும் நமக்கு உறுத்தல் எது சரியான செலவு? எது தவறான செலவு? என்பதை உணராமல் பணம் விரயமாகுதேன்னு குழம்புகிறோம்.

டி.வி. யில் வரும் விளம்பரத்தைப் பார்த்ததும் அதைப்பற்றி சரியா? தவறா? என யோசிக்காமல், உடனே முதலீடு செய்துவிட்டு பணத்தை இழப்போம்.

வருமான வரி கட்டினால் நமக்குத்தானே நஷ்டம் என நினைத்து அதையே ஒதுக்கி விடுவோம். ஆனால், அதையே சரியாக செலுத்தி வருமானவரி அங்கீகாரம் பெற்றால் எத்தனையோ எளிய கடன்களுக்கு அது உதவும் என்பது தெரிவதில்லை.

இவை தவிர, சில வார்த்தைகளை விதிமுறைகளாக எண்ணி விடுவோம்.

உதாரணமாக, கடன் வாங்கவே கூடாது.
பணத்தை செலவு செய்யாதே,
பண சேமிப்பு மட்டுமே நல்லது.

இப்படியெல்லாம் எண்ணிக் கொண்டு பலர் நாள் முழுவதும் கடுமையாக உழைப்பார்கள். பெரிய அளவில் எதையும் செய்ய முடியாமல் சராசரி மனிதனாகவே வாழ்வார்கள்.

இன்னும் சிலர், வட்டியின் அளவைப் பாராமல் அப்போதைக்கு தங்களுடைய பணப் பிரச்சனை தீர்ந்தால் சரி என நினைத்து வட்டி, வாரக்கந்து, அடகுவைத்தல், பாண்டு எழுதி கொடுத்தல் போன்ற கடன்களை வாங்கி பணத்தை விரயம் செய்து விடுவார்கள்.

இவையாவும் பணத்தைக் கையாளத் தெரியாதவர்களின் செயல்கள்.

இன்னுமொரு முக்கியக் கேள்வி.

பெரும்பாலும், ஏழையானாவன், மேலும் ஏழையாகிறான். பணமுள்ளவன் மேலும் பணக்காரணனாகிறான். அதெப்படி? இருவரின் செயல்பாடுகளில் என்ன வித்தியாசம்?

ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினால், அதனுடன் வட்டி இருநூறு ரூபாயை யும் சேர்த்து 1200 ரூபாய் சுமையாகி விட்டமே என நினைப்பன் ஏழை.

ஆயிரம் ரூபாய் கடனுடன் இருநூறு வட்டியை சேர்த்து அதனால் உண்டாகும் வளர்ச்சியையும் கணக்கிட்டுப் பார்ப்பவன் பணக்காரன்.

கடன் வாங்குகிற பணத்தை, அந்க் கடனில் வட்டிக்குமேல் வருமானம் வருமாறு முதலீடு செய்து, தொழிலைப்பெருக்கினால் அது நல்ல கடன் ஆகிவிடும். இது பணக்காரனின் செயல்பாடு.

ஆனால், கடனை வாங்கி, எந்த வருமானத்தையும் அதிகமாக்காமல் செலவினங்களில் போட்டு விட்டால் அதுவே கடனாகிவிடும். இதுதான் ஏழையின் செயல்பாடு.

கடன் இருமுனை கத்தியைப் போன்றது. அதை திறமையாகப் பயன்படுதிதனால் பழங்களை வெட்டி சுவைக்கலாம்; சரியாகபயன்படுத்த தெரியாவிடின் வைத்திருப்பவரையே குத்தி அழித்து விடும்.

ஆகவே, வருமானத்தைப் பெருக்கும் கடனே நல்ல கடன்.

கடனை வாங்கி வளர்ச்சிக்கு திட்டமிட்டு செயல்படுத்துவதுதான் செல்வந்தரின் முக்கிய சூத்திரம்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2001

நம்பிக்கையும் நானும்
மனசு விட்டுப் பேசுங்க!
வணக்கம் தலைவரே
மனித சக்தி மகத்தான சக்தி
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்
பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
பார்க்க முடியாத போதும்.. படிப்பின் பலமே போதும்!
உள்ளத்தோடு உள்ளம்
சிரிப்போம் சிறப்போம்
வெற்றியின் மனமே
வாசகர் கடிதம்
உன் வாழ்வு மலரும்!
வாடிக்கையாளரே மன்னர்
உறவுகள் உணர்வுகள்…
உற்சாக நீரூற்று
நல்ல நண்பன் வாழ்வின் துணைவன்
நிறுவனர் பக்கம்
தொழில் முனைவோர்க்குத் தேவையான குணநலன்கள்