Home » Articles » ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்

 
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்


admin
Author:

ஆஸ்திரேலியா சென்றிருந்த சமயத்தில் சிட்னியில் ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

எமது கல்விப் பயணத்தின் ஒரு பகுதியாக கேன்பரா (ஆஸ்திரேலியாவின் தலைநகர்)வில் உள்ள Bureau of Rural Sciences செல்லவும் வழியில் சிட்னியில் வார இறுதி நாட்களைச் செலவிடவும், முடிவு செய்திருந்தேன்.

சிட்னியில் தங்குவதற்கு இடம் ஏற்பாடாகவில்லை. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் தங்கம் விடுதிகளில் ஒரு நாள் வாடகை குறைந்தது ரூ. 6000 என கேள்வியுற்று சற்று மலைத்துப் போயிருந்தேன்.

இந்தச் சூழலில் குவீன்ஸ்லாந்து தமிழ்ச் சங்கத் தலைவர் பழனி சிட்னியில் உள்ள அவரது நண்பர் சரவணன் என்பவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது வீட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார்.

ஒரு சனிக்கிழமை அதிகாலை பிரிஸ்பனில் இருந்து சிட்னிக்கு விமானத்தில் புறப்பட்டேன். ஒலிம்பிக் போட்டி காரணமாக விமானக்கட்டணம் பேருந்து, ரயில் கட்டணத்தைவிட வெகுவாக குறைக்கப்பட்டிருந்தது. எனவே விமானப் பயணத்தை தேர்ந்தெடுத்தேன்.

பிரிஸ்பனில் இருந்து சிட்னி 1000 கி.மீ. தூரம் காலை 6.55 மணிக்கு புறப்பட்ட விமானம் சிட்னியில் காலை 8.55க்கு தரையிரங்கியது.

சிட்னி விமான நிலையத்தில் எமது விமானம் தரையிறங்கும்போது எண்ணற்ற விமானங்கள் இறகு விரித்துக் கிடந்தன. பார்ப்பதற்கு அது விமானங்களின் சரணாலயோ என்று எண்ணத் தோன்றியது.

விமான நிலையத்திலிருந்து சரவணன் வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். அவர் வெளியில் சென்று விட்டதாக அவர்தம் துணைவியார் தெரிவித்தார். “விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு எப்படி வருவது” என்று கேட்டேன். “எனக்குத் தெரியாது” என்றார்.

சென்ட்ரலில் இருந்து புறப்பட்ட இரயில் சென்று கொண்டே இருந்தது. நீண்ட நேரம் ஆகிவிட்டதே இன்னும் ஓபன் வரவில்லையே என்று பக்கத்தில் இருந்த பயணி ஒருவரிடம் கேட்டேன். அவர் சொன்னார். இந்த வண்டி ஓபன் செல்லாது. நீங்கள் சட்டர்பீல்டில் இறங்கி வேறு வண்டியில் சென்றிருக்க வேண்டும்” என்றார். அடுத்த நிறுத்தத்தில் இறங்கி திரும்பி சட்டர்பீல்டு வந்தேன்.

ஆஸ்திரேலியாவில் மக்கள் திரளைப் பார்ப்பது ஆபூர்வம். ஆனால், சிட்னியில் எங்கெங்கு காணினும் மக்கள் வெள்ளம். சட்டர்பீல்டு இரயில் நிலையத்தில் எந்த பிளாட்பாரத்திலிருந்து செல்லும் வண்டியில் ஏறுவது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன்.

புதிய நாடு, புதிய ஊர், முன்பின் அறிந்தவர் ஒருவருமில்லாத ஒரு பெரு நகரத்தில் அங்கும் இங்கும் அலைகழிக்கப்பட்டது ஒருபுறம். சரவணன் வீட்டில் இல்லை. வரச்சொன்னவர், வழிகாட்டி வரவேற்று அழைத்துச் செல்ல இல்லை என்ற எண்ணம் ஒருபுறம். அவர் வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு எப்படி அங்கு வருவது என்று கேட்டால் தெரியவில்லை என பதில்.

உள்ளத்தின் ஆழத்திலிருந்து உந்தி எழும்பி வந்த தன்னம்பிக்கை மட்டும் என்னை தளரவிடாமல் ஊக்கிக் கொண்டிருந்தது. எந்தச் சூழ்நிலை ஏற்பட்டாலும் எதிர்கொள்ளும் மனவலிமை மட்டும் மலையளவு இருந்தது. என்ன செய்யலாம் என சிந்திதுக் கொண்டிருந்தேன்.

யாராவது ‘ஓபன்’ செல்ல வழி சொல்லமாட்டார்களா என்று தவிப்புடன் நின்று கொண்டிருந்தபோது ஒரு தமிழ்முகம் தென்பட்டது அவரை அணுகி ஓபனுக்கு வழி கேட்டேன். வாருங்கள் நானும் அங்குதான் செல்கிறேன் என்றார். ஓபன் செல்லும் இரயில் ஓடிக்கொண்டிருந்தது. அவரிடம் நான் அறிமுகம் செய்து கொண்டேன்.

தன்னுடைய பெயர் ஜெகதீசன் என்றும், தான் ஓர் ஈழத் தமிழர் என்றும் கூறினார். எம் கையிலிருந்த “மண்ணின் காயங்கள்” என்ற எமது கவிதை நூலை வாங்கிப் படித்தார். அதிலிருந்த கவிதைகள் அவரை மிகவும் கவர்ந்துவிட்டன.

வண்டி ஓபன் சென்றடைவதற்குள் என்னை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஓபன் சென்றடைந்ததும் சரவணனுக்கு போன் செய்து பேசுவோம் என்றும், அவர் வீட்டைக் கண்டறிய உதவுவதாகவும் கூறினார்.

சிறிது நேரத்தில் வண்டி ஓபன் சென்றடைந்தது. இரயில் நிலையத்தைவிட்டு வெளியே வந்து சரவணன் வீட்டிற்குத் தொடர்பு கொள்ள முயற்சித்தோம். டெலி போன் மணி ஒலித்தது. ஆனால் மறுமொழி இல்லை. இனி அங்கு செல்வது சரியில்லை என்று முடிவு செய்தேன்.

பிரபா ஈழமுரசு இதழுக்காக எடுத்த பேட்டி முடிந்த போது மாலை 4 மணி. டாக்டர் சுந்தர்ராஜா வரும் நேரம். இடம் தெரியாமல் தேடுகிறாரோ என்று தங்கியிருந்த குடியிருப்பிலிருந்து நாங்கள் வரவும் டாக்டர் சுந்தரராஜாவின் வண்டி வந்து நிற்கவும் சரியாக இருந்தது. ஜெகதீசன் அவர்தம் நினைவாக எனக்கு டை (tie) ஒன்று பரிசளித்தார். உடனே அவரும் மெல்பர்ன் புறப்பட்டார்.

பிரபா, ஜெகதீசன் ஆகிய இரண்டு தமிழ் இளைஞர்களின் பெற்றோர்களும் யாழ்பாணத்தில் இருக்கிறார்கள். இவர்கள் இனக்கலவரங்களில் உயிர்தப்பி ஆஸ்திரேலியா வந்து படித்துக் கொண்டும் பணியாற்றிக் கொண்டும் இருக்கிறார்கள்.

எங்கள் பெற்றோர்களைப் பார்த்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. என்றாவது ஒருநாள் எங்கள் தாயகம் செல்வோம். தாய் மண்ணை மிதிப்போம். தாய் தந்தை உற்றார் உறவுகளை மீண்டும் சந்திப்போம் என்கிற தன்னம்பிக்கையோடு இருக்கிறோம் என்று சொன்னார்கள்.

வெறுங்கையோடு புலம் பெயர்ந்து வந்த இந்தத் தமிழ் இளைஞர்கள் சேர்த்து வைத்திருக்கிற மூலதனமே தன்னம்பிக்கைதான். நாளை விடியலில் ஓலை வரும். அந்த வேளை வரும். வெற்றி மாலை வரும் என்று தன்னம்பிக்கை குன்றாமல் இருக்கிறார்கள்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2001

நம்பிக்கையும் நானும்
மனசு விட்டுப் பேசுங்க!
வணக்கம் தலைவரே
மனித சக்தி மகத்தான சக்தி
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்
பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
பார்க்க முடியாத போதும்.. படிப்பின் பலமே போதும்!
உள்ளத்தோடு உள்ளம்
சிரிப்போம் சிறப்போம்
வெற்றியின் மனமே
வாசகர் கடிதம்
உன் வாழ்வு மலரும்!
வாடிக்கையாளரே மன்னர்
உறவுகள் உணர்வுகள்…
உற்சாக நீரூற்று
நல்ல நண்பன் வாழ்வின் துணைவன்
நிறுவனர் பக்கம்
தொழில் முனைவோர்க்குத் தேவையான குணநலன்கள்