Home » Articles » பெற்றோர் பக்கம்

 
பெற்றோர் பக்கம்


இராமநாதன் கோ
Author:

சுயமதிப்பை வளர்ப்பது எப்படி?

தம்மை மதித்து நம்புபவர்களே வெற்றியாளர்களாக முடியும். அதன் அவசியத்தேவை சுயமதிப்பு.

சுயமதிப்பு இல்லாதவர்களின் நிலை என்ன?

தாழ்வு மனப்பான்மை உருவாகும்.

படிப்பின்மை, செயலில் ஆர்வமின்மை ஏற்படும். புதுமையாக சிந்திக்க முடியாது.

எந்த முடிவும் எடுக்கத் தெரியாது.

செயலற்றவர்களாக இருப்பார்கள்.

எடுப்பார் கைப்பிள்ளையாகி விடுவார்கள்.

எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையின்மை உண்டாகும்.

எந்தக் காரியத்தையும் முழுமையாக செய்யமாட்டார்கள்.

பிறர் அவரது நன்மைக்காக சொன்னாலும் அந்த வார்த்தைகள் தம்மை புண்படுத்துவதாக எடுத்துக்கொள்வார்கள்.

தம்மை யாருமே நேசிப்பதில்லை என்ற மனக்குறையில் வஞ்சகர்களிடம் அன்பு கிடைப்பதாக நினைத்து மாட்டிக் கொள்வார்கள்.

தமது முன்னேற்ற மின்மைக்கு இவர்கள் சொல்லும் காரணம். தன் பெற்றோர் சரியில்லை. தமக்கு வசதியில்லை. இந்த சமூகமே சரியில்லை என்பதுதான்.

சுயமதிப்பு எப்படி குறைகிறது?

பெற்றோர்களின் சில அணுகுமுறைகளும் செயல்களுமே இதற்குக் காரணம்.

“ஏன் தப்பு – தப்பா பண்றே?”

“ஒரு தடவ சொன்னா சரியா செய்யத் தெரியாதா?”

“அதை உடைச்சி தொலைச்சிட்டியா?”

“நீ கைய வைச்சா எதுதான் உருப்பட்டிச்சி?”

“உனக்கு அறிவே இல்லையா?”

“எப்பப்பார்த்தாலும் வீண் பண்ணிகிட்டே இருக்கிறயே!”

“சீ.. நீயெல்லாம் ஒரு பிள்ளையா?”

“உனக்கு ஒன்றுமே தெரியாது”

“என்னைக்கேக்காம எதையும் செய்யாதே.”

“அவங்க திறமை உனக்கிருக்குதா?”

“உன் செய்கை எதுவுமே பிடிக்கலை”.

“உன்னை கண்டாலே எரிச்சல் வருது”.

இதுபோன்ற வார்த்தைகள் பிள்ளைகளின் சுயமதிப்பை குறைத்துவிடும்.

சுயமதிப்பை உயர்த்துவதற்கு என்ன வழி?

பெற்றரின் நம்பிக்கையூட்டம் உற்சாகமான வாரத்தைகள்பெரிய பலனளிக்கும்.

“உன்னை நம்பறேன்.

உன்னை ரொம்பவும் நேசிக்கிறேன்.

உன்னால் அதைச் செய்ய முடியும். நல்லா முயற்சி பண்ணியிருக்கே. போன தடவைக்கு இது முன்னேற்றந்தான். அடுத்த முறை நிச்சயமாக உன்னால் வெற்றிடைய முடியும்.

நீ செஞ்சது தப்புதான். அதில் உடன்பாடு இல்லாவிட்டாலும் நான் உன்னை மிகவும் விரும்புகிறேன்.

உனக்கு சரின்னு படறதை செய். எனக்கு அதை தெரியப்ப்டுத்தினா போதும். எல்லாவற்றுக்கும் என்னை கேட்கணும்னு அவசியமில்லே.

மத்தவங்களுகு ஒரு செயலில் திறமையிருந்தா உனக்கு இன்னொரு செயலில் அதைவிட திறமை அதிகமாயிருக்கும்.

போட்டியில தோல்வி சகஜம்தான். அடுத்து எப்படி ஜெயிக்கிறதுன்னு இந்தத் தோல்வியிலிருந்து தெரிஞ்சுக்கோ”

இதைப்போன்று பிள்ளைகளின் உணர்வுகளை மதித்தல்,அவர்களிடம் குறைவில்லாத உணர்வுகளை அன்பு செலுத்துதல், அவர்கள் குறைகளை ஏற்று திறமைகளை ஊக்குவித்தல் போன்றவைகளே பிள்ளைகளின் சுயமதிப்பை உயர்த்தும். இவைகளே அவர்களுடைய தன்னம்பிக்கையை வளர்த்து வெற்றியாளர்களாக்கும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2001

நம்பிக்கையும் நானும்
மனசு விட்டுப் பேசுங்க!
வணக்கம் தலைவரே
மனித சக்தி மகத்தான சக்தி
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்
பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
பார்க்க முடியாத போதும்.. படிப்பின் பலமே போதும்!
உள்ளத்தோடு உள்ளம்
சிரிப்போம் சிறப்போம்
வெற்றியின் மனமே
வாசகர் கடிதம்
உன் வாழ்வு மலரும்!
வாடிக்கையாளரே மன்னர்
உறவுகள் உணர்வுகள்…
உற்சாக நீரூற்று
நல்ல நண்பன் வாழ்வின் துணைவன்
நிறுவனர் பக்கம்
தொழில் முனைவோர்க்குத் தேவையான குணநலன்கள்