Home » Articles » பொதுவாச் சொல்றேன்

 
பொதுவாச் சொல்றேன்


புருஷோத்தமன்
Author:

அன்னைக்கு பழைய நண்பர் ஒருத்தரை அகஸ்மாதா சந்திக்க சேர்ந்தது. பார்த்து ரொம்ப நாள் ஆகியிருந்ததா, பேச்சு வளர்ந்துகிட்டே போச்சு.

திடீர்னு அவரு கேட்டார். “ஏங்க! எங்க பார்த்தாலும் இப்ப தன்னம்பிக்கைச் சிந்தனைகள் பத்தி எழுதறாங்க, பேசறாங்க, ‘தன்னம்பிக்கை’ ன்னு பத்திரிகையே வருது. இதுமூலமா எல்லாம் மக்களுக்கு நிஜமாகவே தன்னம்பிக்கை வருதாம அப்படீன்னாரு.

நியாயமான கேள்விதானே! தன்னம்பிக்கை உள்ளேயிருந்து வெளிவே வர்றதா, வெளியிலிருந்து உள்ளே வர்றதாங்கறது பத்தி ற்கனவே பேசியிருக்கோம். இருந்தாலும் இதக் கேள்விக்குபதில் சொலனும்னா நீங்க ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்கன்னு கேட்டேன். ” என்ன கேள்வி” ன்னாரு.

“சாதாரணமான கேள்விதான், ஆனா அதுக்கு உங்க அறிவிலேயிருந்து பதில் சொல்லக்கூடாது. உடனடி அனுபவத்திலேயிருந்து பதில் சொல்லணும்”னு, பெரிய சஸ்பென்ஸ் எல்லாம் குடுத்துட்டு, அவரு கையிலே ஒரு கூலிங் கிளாஸைக் குடுத்து போட்டுக்கச் சொன்னேன். அப்புறமா ஒரு கோழி முட்டையைக் காமிச்சு “இது என்ன நிறம்” னு கேட்டேன்.

“பழுப்பு நிறம் மாதிரி தெரியுது” அப்படீன்னாரு. கண்ணாடியைக் கழட்டிப் பார்த்தா வித்தியாசம் தெரியுதுன்னும் ஒப்புக்கிட்டாரு.

நான் பொதுவாச் சொல்றேன்; வாழ்க்கை கூட அப்படித்தான். சில சம்பவங்களோட பாதிப்போட பார்த்தா வாழ்க்கை மங்கலாத் தெரியும். நின்னு நிதானமா கவனச்சா தெளிவாத்தெரியும். இதுதான் வித்தியாசம்.

பதட்டம், பயம், கோபம், தாழ்வு மனப்பான்மைன்னு கலர் கலரா ண்ணாடியைப் போட்டுகிட்டு, வாழ்க்கையை நிறையபேர் பார்த்திருக்காங்க. அவங்க எல்லோருமே, வாழ்க்கையோட நிறமே அதுதான்னு தப்பா நினைச்சுகிட்டே சோர்ந்து போயிருக்காங்க.

நான் பொதுவாச்சொல்றேன், நின்னு நிதானமா தங்களுடைய மனசைப்பார்த்து, அதில் கோபம் இருக்கு, கோபத்தோடு சில விஷயங்களை செய்யக்கூடாது. பயம் இருக்கு, அதை மெதுவா நகர்த்தியாகணும், பொறாமை இருக்கு, அதைப் பூண்டோட அழிச்சிடணும்னு பலபேர் நிதானமா யோசிச்சிருக்காங்க.

அவங்கதான் எந்த வண்ணமும் பூசாம இயல்பா வாழ்க்கையைப் பார்த்தவங்கன்னு சொல்ல்லாம்.

நான் பொதுவாச சொல்றேன். ஏட்டுப்படிப்பு வாழ்க்கைக்கு என்ன தந்துடப் போகுதுன்னு பலரும் கேட்கறாங்க. அது கண்டிப்பா தரும். எப்ப தரும் தெரியுமா? ஏட்டில் எழுதப்பட்ட விசயங்களும், வாழ்க்கையில் இருந்து வந்திருந்தா கண்டிப்பா தரும்.

ஏட்டுக்கல்வி வாழ்க்கைக்கு அந்நியமான தில்லை. வாழக்கையிலிருந்து சாறுபிழிஞ்சு எடுக்கிற சத்துமிக மூலிகை ரசம்னு இருந்தா மற்றவர்களுடைய சிந்தனைகளும், பேச்சுக்களும் நம்மடைய வாழ்க்கையை நிச்சயமா உயர்த்தும்.

படிப்பு என்பது வாழ்க்கையின் முகவரி. படிப்பின் வழியே வாழ்க்கையை நீ அறி.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2001

நம்பிக்கையும் நானும்
மனசு விட்டுப் பேசுங்க!
வணக்கம் தலைவரே
மனித சக்தி மகத்தான சக்தி
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்
பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
பார்க்க முடியாத போதும்.. படிப்பின் பலமே போதும்!
உள்ளத்தோடு உள்ளம்
சிரிப்போம் சிறப்போம்
வெற்றியின் மனமே
வாசகர் கடிதம்
உன் வாழ்வு மலரும்!
வாடிக்கையாளரே மன்னர்
உறவுகள் உணர்வுகள்…
உற்சாக நீரூற்று
நல்ல நண்பன் வாழ்வின் துணைவன்
நிறுவனர் பக்கம்
தொழில் முனைவோர்க்குத் தேவையான குணநலன்கள்