Home » Articles » மனசு விட்டுப் பேசுங்க!

 
மனசு விட்டுப் பேசுங்க!


admin
Author:

உலக நாடுகள் ஆயுதங்கள் வாங்க செலவழிக்கிற பணமும், போதை பொருள்களில் புரளுகிற பணமும் வருடதிற்கு 60 லட்சம் கோடி. ஆனால் இந்தியாவில் இரண்டு லட்சத்து நான்காயிரம் கோடிக்குத்தான் பட்ஜெட் போடுகிறார்கள்.

இவ்வளவு குறைவான செல்வ்வளம் உள்ள இந்தியாவில் என்ன திறமை இருந்தாலும் முன்னேற இயலாது. தாங்கள் சொல்கிற சுயமுன்னேற்றம், உழைப்பு, தன்னம்பிக்கை என்பதெல்லாம் வெறும் ஏட்டு சுரைக்காய்.

நாட்டின் செல்வ வளத்தை எப்படிப் பெருக்குவது? இந்தியன் எப்படி முன்னேறுவது? தங்களுடைய நிலை, பதிலை பரந்த கண்ணோட்டத்தோடு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

(கே. கணேசன், இரத்தினபுரி)

இந்திய அரசின் பட்ஜெட்தான் இந்தியாவின் செல்வவளம் என்று முடிவு கட்டிவிடாதீர்கள். தனியார் துறைகளில் அதைவிட பன்மடங்கு அதிகமாக பட்ஜெட் போடுகிறார்கள்.

என்ன திறமை இருந்தாலும் முன்னேற முடியாது என்ற வாதம், சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிக்கவே முடியாது, பின்லேடனை பிடிக்கவே முடியாது போன்ற ஒரு வாதத்தைப் போன்றதுதான்.

சுயமுன்னேற்றம் என்பது பணத்தை மட்டும் அளவு கோலாகவோ அல்லது பிற நாட்டினரை ஒப்பிட்டு அதிகமாக பணம் சேர்ப்பதோ அல்ல.

ஒவ்வொரு தனி மனிதனும் தன்னுடைய கடந்த வாழ்க்கை நிலையை விட சிறப்பாக தம்மை உயர்த்திக் கொள்வதே முன்னேறம். அதன் அளவு ஒவ்வொரு மனிதனுக்கும் வித்தியாசப்படும்.

நீங்கள் முடியும் என்றால் அதுவும் சரிதான். முடியாது என்றால் அதுவும் சரிதான் என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.

அதாவது முன்னேற முடியும் என்ற கோணத்தில் சிந்தித்தால் நிச்சயமாக பல வழிகள் கிடைகும். முன்னேறவும் முடியும்.

அதைப்போல முன்னேற முடியாது என்று முடிவு செய்தால் அதற்குப்பல காரணங்களைச் சொல்ல்லாம். அதுவும் நியாயமாகவே இருக்கும். அதுவும் சரியாகவே தோன்றும்.

ஆகவே, ஒருவருடைய சிந்தனை பாஸிடிவ் அல்லது நெகடிவ் எதுவாயினும் அதுவாகவே வாழ்க்கை அமையும்!

இந்தியாவிலும் முன்னேற எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன. செல்வ்வளங்களும் உள்ளன.

நம்பிக்கையோடு உயர திட்டமிட்டு கடினமாக உழைத்தால் நிச்சயமாக முன்னேற முடியும். இது நிச்சயம்.


Share
 

1 Comment

  1. niranjani says:

    தன்நம்பிக்கை நிதி உதவி

Post a Comment


 

 


December 2001

நம்பிக்கையும் நானும்
மனசு விட்டுப் பேசுங்க!
வணக்கம் தலைவரே
மனித சக்தி மகத்தான சக்தி
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்
பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
பார்க்க முடியாத போதும்.. படிப்பின் பலமே போதும்!
உள்ளத்தோடு உள்ளம்
சிரிப்போம் சிறப்போம்
வெற்றியின் மனமே
வாசகர் கடிதம்
உன் வாழ்வு மலரும்!
வாடிக்கையாளரே மன்னர்
உறவுகள் உணர்வுகள்…
உற்சாக நீரூற்று
நல்ல நண்பன் வாழ்வின் துணைவன்
நிறுவனர் பக்கம்
தொழில் முனைவோர்க்குத் தேவையான குணநலன்கள்