Home » Articles » வணக்கம் தலைவரே

 
வணக்கம் தலைவரே


முத்தையா ம
Author:

தலைமைப் பொறுப்பில் இருக்கும் எல்லோருமே, ஏதாவதுதொரு தருணத்தில் தவிர்க்க முடியாமல் எதிர்கொள்ள வேண்டிய ஒன்று. பின்னடைவு. இந்தத் தற்காலிகத் தடுமாற்றம் தலைவர்களுக்குப் பலவிதங்களி ஏற்படும்.

ஒரு மனிதன் கண்ணார் வடிக்க எவ்வளவோ காரணங்கள் உண்டல்லவா? அது போலத்தான்.

கவியரசு கண்ணாதாசன் ஒருமுறை சொன்னார்.

“கண்வழி சொரியும் உப்பு
கடவுளால் வருவதல்ல;
பெண்வழி வரலாம் – செய்த
பிழைவழி வரலாம் – பெற்ற
மகன்வழி வரலாம் – ஆனால்
நண்பர்கள் வழியிலேதான்
நான் கண்ட கண்ணீர் உப்பு” என்று

அதுபோல, தலைமைக்குப் பின்னடைவு என்பது, தன்னாலேயே வரலாம், தொண்டர்களால் வரலாம், எதிரிகளால் வரலாம்.

பின்னடைவு என்று ஒன்று ஏற்படும்போது, ஒரு சராசரி மனிதர், தன் பழைய பெருமைகளையெல்லாம் நினைத்துப் பார்த்து “ஐயோ! எனக்கா இந்த கதி” என்று, மேலும் உடைந்துபோனார்.

அதாவது, அவர் விழுந்த குழியின் ஆழம் பத்தடி என்றால், அதனை அழுது அழுது இருபதடி ஆக்குவார்.

ஒரு நல்ல தலைவர், அந்தப் பினடைவிலிருந்த என்று… எப்படி மீள்வது என்பதாய் வியூகம் வகுக்கத் தொடங்குவார்.

“இந்தக் குழி பத்தடி ஆழம் தெரியுமா?” என்று யாராது சொன்னால்

“இல்லை! நாலே நாலு அடிதான்” என்பார்.

எப்படி?

“நான் ஆறு அடி உயரம்! பத்தடியில் ஆறடியை ஏற்கனவே கடந்து விட்டதாகத்தான் அர்த்தம். மீதமென்னவோ நாலு அடிதானே” என்பார்.

பலபேர் வியக்கும் அளவு உயரத்திற்கு வந்துவிட்டு, ஒரு சின்னச் சறுக்கல் ஏற்பட்டால் கூட அவமானம் அள்ளிக் கொண்டுபோகும் என்று கருதுபவர்கள் தலைமைக்குத் தகுதியானவர்கள் அல்ல.

பின்னடைவுகள் வரும் என்கிற தெளிவும், வந்ததைக் கையாள்கிற வலிவுமே தலைவர்களுக்கு அழகு.

தலைமைப்பண்பின் இருபத்து நான்காவது விதி.

விழாமல் இருப்பதல்ல தலைமை – விழுந்தாலும் தாழாமல் இருப்பது தான் தலைமை.

மேலைநாட்டுச் சிந்தனையாளர்களில் புகழ் பெற்றவர் டாக்டர். ஆண்டனி கம்போலோ. சிற்ந்த எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் இளங்கிய இவரின் எழுச்சி வாசகம் ஒன்று எல்லார் மத்தியிலும் மிகவும் பிரபலம்.

“வெள்ளிக்கிழமைகள் நமக்கு வரும். ஆனால் ஞாயிற்றுக் கிழமை நலம் தரும்” என்பதுதான் அந்த வாசகம்.

அது என்ன வெள்ளிக்கிழமை? ஞாயிற்றுக்கிழமை?

ஏசுநாதர் மீது வீண்பழி சுமத்தி, அவர் உடலை வருத்தி, சிலுவையில் அறைந்தது வெள்ளிக்கிழமை. ஆனால் அவர் உயிர்த்தெழுந்தது ஞாயிற்றுக்கிழமை.

வாழ்க்கை நம்மை வருத்தியெடுத்து சோதனைகளைப் பெரிசாய்க் கொடுத்து வீழ்த்தினாலும் கூட உயிர்த்தெழும் வாய்ப்பு உண்டு என்பதுதான் அவரது சிந்தனையின் சாரம்.

சோர்ந்து விழும்போதே, நிமிர்ந்து எழுவோம் என்கிற நம்பிக்கை தலைவர்களுக்கு ஏற்பட்டால்தான் அந்த இயக்கத்த்தற்கு எதிர்காலம் உண்டு.

அப்படியானால் பின்னடைவுகளை எப்படி எடுத்துக்கொள்வது?

“ஒவ்வொரு பின்னடைவிலும் புதியதாய் ஒளிவிடக்கூடிய விதை ஒன்று இருக்கிறது” என்றார் ஒருவர். விபரம் தெரிந்தவர்கள் அந்த விதையை அடையாளம் கண்டு, அதை மண்ணில் விதைத்து, நீர்வார்த்து, வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.

தோல்விகள் வந்ததும் தொண்டர்களோடு சேர்ந்து கதறிக் கண்ணீர்விடும் தலைவர்கள் காலத்தின் அமிலச் சோதனையைக் கடந்து வருவது அரிது.

தோல்விகள் ஒரு மனிதனின் வாழ்வில் வந்து போகக்கூடும். ஆனால், அந்த்த் தோல்விகளால் அந்த மனிதனயே தோற்கடித்து விடமுடியாது.

இதற்கு என்ன பொருள்?

சில இயக்கங்கள் மேற்கொள்ளும் பணிகள் உடனடி மாற்றங்களை ஏற்படுத்தும் சிலோ நீண்டகால மாற்றங்களை மெதுவாகக் கொண்டு வந்து சேர்க்கும்.

வெற்றிகரமான இயக்கத்திற்கு உடனடி மாற்றங்களை ஏற்படுதும் சில பணிகளும் உண்டு. நீண்ட காலமாற்றங்களை நிகழ்த்துகிற பணிகளும் உண்டு.

கூட்டணி அமைப்பது, தேர்தலில் ஜெயிப்பது போன்றவை ஒரு இயக்கத்தின் உடனடி மாற்றங்கள் அல்லது வளர்ச்சிகள்.

அந்த இயக்கம் என்ன கொள்கைகளுக்காக ஏற்பட்டதோ, அவற்றின் வெற்றிக்காகப் பாடுபடுவதும் அதற்கான பணிகளில் ஈடுபடுவதும் நீண்டகால மாற்றங்களுக்கான களங்கள்.

பதவி, செல்வாக்கு போன்ற புறவழிச் சாலைகள், சென்றடைய வேண்டிய ஊராகிய கொள்கைகளை விட்டு வேறெங்கோ அழைத்துச் செல்வதுண்டு.

அத்தகைய சூழல்களில் ஒரு தலைவரின் கடமைகள் என்ன?

அடுத்த இதழில்….


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


December 2001

நம்பிக்கையும் நானும்
மனசு விட்டுப் பேசுங்க!
வணக்கம் தலைவரே
மனித சக்தி மகத்தான சக்தி
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்
பெற்றோர் பக்கம்
பொதுவாச் சொல்றேன்
பார்க்க முடியாத போதும்.. படிப்பின் பலமே போதும்!
உள்ளத்தோடு உள்ளம்
சிரிப்போம் சிறப்போம்
வெற்றியின் மனமே
வாசகர் கடிதம்
உன் வாழ்வு மலரும்!
வாடிக்கையாளரே மன்னர்
உறவுகள் உணர்வுகள்…
உற்சாக நீரூற்று
நல்ல நண்பன் வாழ்வின் துணைவன்
நிறுவனர் பக்கம்
தொழில் முனைவோர்க்குத் தேவையான குணநலன்கள்