Home » Articles » சிரிப்போம் சிறப்போம்

 
சிரிப்போம் சிறப்போம்


ஞனசம்பந்தம் கு
Author:

விடிந்தால் தீபாவளி, அன்றைக்கு இரவு முழுவதும் விழித்திருக்க நாங்கள் முடிவு செய்தோம்.

விடிய விடிய விழித்திருக்க என்ன செய்ய வேண்டும். “எல்லாம் வீட்டுக் கதைவையும் தட்டுவோம்” என்றான் மண்ணாந்தை. “போடா தீபாவளிக்கு எவனும் தூங்க மாட்டான். கதைவையும் அடைக்கமாட்டான்ம. இது கோவிந்தன்.

“சரி, ரொட்டியில் ரோல் கோப்பை வச்சு நாய்க்கு குடுப்போம். டமாள் டமால்னு வெடிக்கும். நாய் சந்தோசமா குரைக்கும்” என்றான் தமிழ்ச்செல்வன்.

இந்த யோசனையும் யாருக்கும் பிடிக்கவில்லை. “பேசாம திருடன் போலீஸ் விளையாடலாம்” என்றேன். நான் முடிவாக எல்லோரும் சம்மதித்தார்கள். வேறு யோசனை யாருக்கும் தோன்றவில்லை. அதனால் நானும் மண்ணாந்தையும் சி.ஐ.டி. போலீஸ் மற்றவர்கள் திருடர்கள்.

“நீங்கள் இங்கேயே இருங்க, நாங்க ஓடிப்போய் ஒளிஞ்சுக்கறோம்” சொல்லிவிட்டு அவர்கள் ஓடிப்போனார்கள். “சுட்டா விழுந்திடணும்” – கத்தினான் மண்ணாந்தை. நல்ல திருட்டு. பெரிய அக்ரஹாரம். முதல் போக அறுவடை முடிந்து வீதி தோறும் வைக்கோல் போர்கள்.

“வரலாம்” எங்கிருந்தோ அசரீரீ கேட்டது. மண்ணாந்தையும் நானும் வேகமாக ஓடி, தேடத் தொடங்கினோம்.

எங்களைத் தொடர்து ஒரு தெரு நாய் ஓட வர நாங்கள் உயிரை வெறுத்து ஓடினோம். ஒரு பெரிய வீட்டுத்திண்ணை பலர் இருட்டில் படுத்திருந்தார்கள். நாங்கள் நின்றோம். நாயைக் காணவில்லை.

“இந்தத் திண்ணையில்தான் படுத்திருக்கணும்” சந்தோசமாகக் கத்திய மண்ணாந்தை ஓடிப்போய் ஒரு உருவத்தை உற்சாகமாக்க் காலால் எத்தினான்.

“எந்திரி, எந்திரி, எந்திரி” நானும் கேப் துப்பாக்கியோடு தயாராக இருந்தேன். ஓடினால் சுட வேண்டாமா?

அந்த உருவம் மெதுவாக எழுந்தது. “மச்சான் யாரோ ஒருத்தன் என்னையை எழுப்புறான்” என்று பயத்துடன் கூடிய ஒரு பெண் குரல்.

சரேலென ஐந்தாறு பேர் எழுந்தார்கள். “எவண்டா டேய்” பயங்கரச் சத்தம். எனக்கு உயிரே போய் விட்டது.

அது அறுவடக்குப் பிழைக்க வந்த கூட்டம். அதில் சிலர் பெண்கள். மணாந்தை விபரம் தெரியாமல் ஒரு பெண்ணை எழுப்பியிருக்கான். அடுத்த நொடி மண்ணாந்தை என்னைக் கீழே தள்ளி தெருவில் ஓட, நான் அவனைத் தாண்டி பயங்கமாக ஓட,

“திருடன், திருடன்” தெருவே, எழுந்து இருட்டில் ஆளுக்கொரு பக்கம் ஓடி யாரை யார் விரட்டுகிறார்கள் எனத் தெரியாமல் ல்லோரும் எல்லாத் தெருவிலும் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

நாங்கள் அவரவர் வீட்டற்கு ஓடிப் போனோம். தெருக்களில் முக்குக்கு முக்கு திருடனைப் பற்றிய பேச்சாக இருந்தது. நாங்கள் யாரும் வாயைத் திறக்கவில்லை. ஒரு வழியாக அந்த தீபாவளி இரவில் அந்தத் தெருவே விழித்திருந்தது.

எப்போது விடிந்தது. எனக்குத் தெரியவில்லை. எல்லோரும் வெடி விட்ட சத்தத்தில் நான் எழுந்தேன். வேமாக்க்குளித்தேன். புது உடை போட்டேன். சாப்பிட்டேன். தெருவுக்கு வந்தேன்.

“நேத்து ராத்திரி பயங்கரத் திருடங்க நாலு பேர் வந்து ஊரையே சூரையாடப் பார்த்தார்களாம்” – பேச்சியம்மா அளந்து விட்டுக் கொண்டிருந்தார்கள்.

நாங்கள் ஒன்றாகச் சேர்ந்தோம். எல்லோருக்கும் சிரிப்பு. ஒன்றும் சொல்லவில்லை. தெருவில் வெடி போட்டோம். “டேய் அந்த வீட்டில் போய் வெடி விடுவமா?” எனக் கேட்டான் கோவிந்தன்.

எங்கள் தெருவில் யார் என்ன செய்தாலும் கோபிக்கும் மனிதர் ஒருவர் உண்டு. அவர் பெயர் சுப்பிரமணி. சிறுவர்களைக் கண்டாலே பிடிக்காது. யார் போனாலும் திட்டுவார். விடுமுறை நாட்களில் தெருவில் பையன்களைக் கண்டால், காதைப் பிடத்துத் திருகி வீட்டில் கொண்டு போய்விடுவார்.

எங்களுக்கு அவரைக் கண்டால் ஆகாது. அவருக்கு எங்களைக் கண்டால் பயங்கரக் கோபம் வரும்.

எல்லோரும் அவர் வீட்டு வாசலுக்குப் போனோம். “எவனும் இந்தப் பக்கம் வரக்கூடாது. தீபாவளி அதுவுமா என்னடா வெடி விட்டுக்கிட்டு,போய் அம்மா அப்பா சொல்லைக் கேட்டு படியுங்கடா” அவர் கத்தினார்.

மண்ணாந்தை அவர் வீட்டு வாசலுக்கு துணிச்சலாய்ப் போனான். “என்னடா திமிரா, சொன்னாக் கேக்கலை” அவர் கத்திக் கொண்டே வந்தார்.

மண்ணாந்தை சட்டென்று ஒரு பொருளைக் கீழே வைத்து விட்டு ஓடி வந்தான். நாங்கள் காதைப் பொத்திக் கொண்டு ஓடினோம்.

சத்தம் போட்டுக் கொண்டே வெளியே வந்த சுப்பிரமணி அதே வேகத்தில் உள்ளே ஓடினார்.

வெடி வெடிக்கவில்லை. பத்து நிமிடம் கழிந்தது. அவர் மெதுவாக வெளியே வந்தார். மண்ணாந்தை வெடிக்கருவில் ஓடி ஏதோ செய்தான். பின் ஓடினான்.

நாங்கள் பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தோம். சுப்பிரமணி உள்ளே ஓடினான். வெடி வெடிக்கவில்லை.

ஏறத்தாழ இரண்டு மணி நேரம் இந்தப் போராட்டம் நிகழ்ந்தது. சுப்பிரமணியும் குடும்பமும் அன்றைக்கு எங்கேயும் போகவில்லை.

கடைசியாக நான் மண்ணாந்தையிடம் கேட்டேன். “அது என்ன வெடி”. “அது வெடியில்லை. பழைய பேட்டரிச் செல். சும்மா நான் ஓடிக்கிட்டே இருந்தேன்.” என்றான். மண்ணாந்தை அதைக் கண்டு பயந்து நாங்களும் ஓடிய வேகத்தை நினைத்துச் சிரிச்சோம்.

கடைசியில் சுப்பிரமணி வீட்டுக்கு வந்த, கண் தெரியாத பிச்சைக்காரன் அதைக் காலால் மிதித்து விட்டுச் சென்ற பின் சுப்பிரமணி வெளியே வந்து தெருவே அலறும்படி சத்தம் போட்டார்.

நாங்கள் எங்கள் வீடுகளில் இருந்து “இது தான் வாய் வெடி வாய் வெடி” என்று கத்தினோம்.

இப்போது நினைத்தாலும் அந்த நாட்கள் மகிழ்ச்சியாய் உள்ளன. வயது ஆக ஆக தீபாவளியில் புதிய அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை. குடும்பத்தோடு கொண்டாடும் தீபாவளியை நினைத்தாலே பயமாகத் தான் இருக்கிறது.

குழந்தை குட்டிகளோடு இருந்த நண்பரிடம் கேட்டேன். “இந்த் தீபாவளிக்கு என்ன வாங்கப் போறீங்க”.

“கடன்” என்றார் அவர்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2001

மனித சக்தி மகத்தான சக்தி
உன்னால் முடியும் தம்பி
சிந்தனைத்துளி
பொதுவாச் சொல்றேன்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்.
விழுந்தாலும் எழுவேன்
உள்ளத்தோடு உள்ளம்
வெற்றியின் மனமே….
பெற்றோர் பக்கம்
நம்பிக்கையும் நானும்
தன்னம்பிக்கை பாதையில் நட!
மனசு விட்டுப் பேசுங்க!
நிறுவனர் பக்கம்
சிரிப்போம் சிறப்போம்
வாழ்க்கை
விட்டு விடுதலையாவோம்
உறவுகள் உணர்வுகள்….