![]() |
Author: கனகசுப்புரத்தினம் இரா
|
வாழ்க்கை என்பது என்ன செய்து கொண்டிருக்கிறோமோ அதுவே வாழ்கை; என்ன அனுபவித்துக் கொண்டிருக்கிறோமோ, அதுவே வாழ்க்கை. மற்றவை அனைத்தும் கனவுகள்; கற்பனைகள்; மனம் தயாரித்து வழங்கும் திரைப்படங்கள்.
‘ஒரு பொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல’ – 337
என்கிறது வள்ளுவம்
பொதுவாய் உண்மையை ரசிக்கும் நிறம் இழந்த மக்களே திரைப்படங்களை – நிழல்களை விரும்புவார்கள்.
சரி, இன்றைய வாழ்க்கை அனுபவங்கள் எங்கிருந்து வருகின்றன?
நேற்றைய நம் வலுவான எண்ணங்களால் வடிவமைக்கப்பெற்று வருகின்றன.
முதல்தேதி பிறந்தவுடன் வீட்டு வாடகை கொடுக்கிறோம். பால் பாக்கியை அடைக்கிறோம். மின்கட்டணம் கட்டுகிறோம். இப்படிப் பல.
முன்பு அனுபவித்தோம். இன்று அவற்றிற்குரிய விலையைக் கொடுக்கிறோம். இவை, பொருள்நிலையில் அனுபவித்தவை.
இதுபோல் – எண்ணமாக, சொல்லாக, செயலாக, வினையாக முன்பு நாம் அனுபவித்தவற்றுக்கும் இன்று பதில் சொல்லியாக வேண்டும். விலை கொடுத்தாக வேண்டும்.
அந்த விலையை – இன்றைய வினையாகவும், செயலாகவும், நிகழ்ச்சியாகவும், நேர்ச்சியாகவும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
தினை விதைத்ததற்குத் திணை அறுக்கிறோம். வினை விதைத்ததற்கு வினை அறுக்கின்றோம்.
ஒன்று பொருள் வடிவமைக்கும் மூன்று அம்சங்களில், ‘முயற்சி’ என்ற அம்சத்தின் நடைமுறை விதி – Process இது.
இந்த விதியைப் புரிந்து கொண்டு, இன்றைய நிகழ்வுகளை விழுப்புணர்வுடன், கவனித்து அனுபவித்தால், நாளைய நிகழ்வுகளை வடிவமைக்கும் ஆற்றல் நமக்கு வரும்.
எனவே, கையில் கிடைத்துள்ள இன்றைய நாளை வரவேற்போம்; வாழ்த்துவோம். வழங்கும் அனுபவங்களை மனப்பூர்வமாகய் ஏற்றுக்கொள்வோம். அது, துன்பமாய் இருந்தாலும் சரி, இன்பமாய் இருந்தாலும் சரி. கணப்பொழுதையும் வீணாக்காமல் ஆழ்ந்து அனுபவிக்கத் தொடங்குவோம்.
ஒரு தவம்போல் இன்றைய அனுபவங்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தைப்பெற்றால், அதன்வழி நாளைய நிகழ்வுகளை வடிவமைக்கும் ஆற்றலைப் பெறலாம்.
இன்றைய நிகழ்வுகளை அனுபவிப்போம்! நாளைய நிகழ்வுகளை வடிவமைப்போம்!

November 2001

















1 Comment
Dear sir,
Please note my cell no. 98947 62492 and give me your phone no. and mail me because discuss the brain activities.
Thanking you.
(D.Palanivel)