Home » Cover Story » விட்டு விடுதலையாவோம்

 
விட்டு விடுதலையாவோம்


வைரமுத்து
Author:

தன்னம்பிக்கை இதழும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் விட்டு விடுதலையாவோம் தொடர் பயிலரங்கில் 8.7.2001 நிகழ்ச்சியில் பங்கேற்ற வாசகர்களின் கேள்விகளுக்கு அரங்கில் கவிப்பேரரசு அளித்த பதில்கள் உங்களுக்காக….

நான் கறுப்பு நிறம். இதனால் பல இடங்களில் வெறுத்து ஒதுக்கப்பட்டிருக்கிறேன். அவ்வாறன நேரங்களில் இவ்வாறு பிறந்தது தவறா என நொந்து போயிருக்கிறேன். நீங்களும் கறுப்பு நிறம்தான். உங்களால் சந்தோஷமாக இருக்க முடிகிறதா? முடிகிறது என்றால் எவ்வாறு சந்தோஷமாக இருக்க முடிகிறது?

தம்பி கறுப்பு நிறத்தால் நீ சந்தோஷமாக இருக்கிறாயா என்பது முக்கியமல்ல.உன் கறுப்பு நிறத்தால் எத்தனைபேரை சந்தோஷமாக வைத்திருக்கிறாய் என்பதுதான் முக்கியம்.

இந்த கருப்பு என்பது ஒரு ஒப்பீடுதான். ஒரு மேடையில் சாலமன் பாப்பையாவுடன் உட்கார்ந்திருந்தேன்.

நான் பேசும்போது சொன்னேன். “சாலமன் பாப்பையாவின் தமிழ் மீது கொண்டிருந்த காதலால் மட்டும் அவர் பக்கத்தில் அமரவில்லை. அவர் அருகில் இருந்தால் நான் சிவப்பாகத் தெரிவேன்” என்று.

எனவே, கறுப்பு என்பது ஒரு ஒப்பீடுதான். தம்பி! நீ நைஜீரியாவுக்கு போ. அங்கே நீதான்ன் வெள்ளைக்காரன்.

நீங்கள் ஒரு கவிஞராக பெரு வெற்றி பெற்றிருக்கிறீர்கள். ஒரு தொழில் முறைவோராக வெற்றி பெற்ற செய்யவேண்டியது முயற்சிக்கும், கவிஞராக வற்றி பெற செய்ய வேண்டிய முயற்சிக்கும் வித்தாயசம் உள்ளதா?

எல்லா விஷயத்திற்கும் ஒரே ஒரு சூத்திரம்தான். எந்தக் தொழிலில் நீ ஈடுபடுகிறாயோ அதில் நீ பயிற்சிகொள், முயற்சிகொள், தேர்ச்சி கொள்.

டால்ஸ்டாய் சொன்னார் “கடவுளை சரியாக நினைத்து, மனதை ஒரு முனைபடுத்துபவனும் செருப்பு தைக்கும் போது ஊசிக்கும் நூலுக்கும் இடையில் தன் மனதைச் செலுத்துகிறவனும் ஒரே தொழிலைச் செயகிறான்” என்று.

அதற்கு அவன் சொன்னான் “என்னைப் போல், இசையும், நானும் தவிர வேறொன்றும் இல்லை என்று 12 வருடங்களாய் பயிற்சி செய்தால் கழுதைகூட என்னைப்போல் இசையமைக்கும்” என்று.

அதுதான் உண்மையும் கூட, எனவே, பயிற்சிகள் கொள், முயற்சிகொள், ஈடுபாடு கொள். தேர்ச்சி கொள் இதைத்தவிர வேறில்லை.

நீங்கள் சமீபத்தில் எழுதிய “கள்ளிக்காட்டு இதிகாசத்தில்” தன்னம்பிக்கையின் வடிவமாகவே “பேயத் தேவரை” சித்தரித்திருக்கிறீர்கள். ஆனால் கடைசியில் அவருக்கு ஒரு சோக முடிவு. இது நியாயம்தானா?

இது ஒரு முக்கிய விஷயம். கண்ணீர் எல்லாமே தோல்விதானா? சோகம் எல்லாமே தோல்வியா?

ராவணன் செத்துப்போனான். தோற்றுப் போனவன் இல்லை.

நான் சொல்கிறேன் “ஒரு மனிதன் அவநம்பிக்கையை பற்றி எழுதுகிறான் என்று கருதக் கூடாது. நாவலை படித்து விட்டு என்ன தோன்றுகிறது என்பதுதான் முக்கியம். நாவலைப் படித்துவிட்டு வாழ்வின் கடை நிலையில் இருக்கிற, சோகத்தை நோக்கியே வாழ்வு நகர்ந்து கொண்டிருக்கிற ஒரு மனிதன் கடைசி வரைக்கும் போராடினான் அல்லவா அதுதான் வாழ்க்கை”.

போராட்டம்தான் வாழ்க்கை. எல்லாப் போராட்டங்களும் வெற்றியில்தான முடியும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

போராட்டங்கள் வெற்றியைய்மு சந்திக்கலாம் தோல்வியையும் சந்திக்கலாம்ம். போராடுது தான் முக்கியமே தவிர, வெற்றியோ தோல்வியோ முக்கியமானது அல்ல என்பதுதான் “கள்ளிக் காட்டு இதிகாசத்தின்” உள்ளடக்கமாக நான் கருதுகிறேன்.

நம் வாழ்க்கையில் வெற்றி உள்ளதா? அல்லது வெற்றியில் வாழ்க்கை உள்ளதா?

வெற்றி என்பது வெளியே இல்லை. ரத்த ஓட்டம் மாதிரி உனக்கு உள்ளேதான் இருக்கிறது. நீ பார்க்க முடியாது. அதுதான் உண்மை.

வெற்றியை நோக்கி வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறேன். என சிலபேர் சொல்லும் போது ஒரு கதையை சொல்வார்கள்.

ஒரு கழுதை இருந்தது. அந்தக் கழுதை நகரமாட்டேன் என்று சொல்கிறது. நடக்க முடியவில்லை அதனால்.

கழுதை மேலிருக்கும் சவாரியாளன் என்ன செய்கிறான். ஒரு களியில் கேரட் ஒன்றைக் கட்டி கழுதைக்கு முன்னால் நீட்டுகிறான். கழுதையின் வாய்கும் கேரட்டுக்கும் உள்ள இடைவெளி ஒரு மூன்றடி இருக்குமாறு பார்த்துக்கொள்கிறான்.

அந்தக் கேரட்டை தொட்டுவிட வேண்டும் என்ற ஆசையில் நடக்கமாட்டாத கழுதை நடக்கிறது. பயணம் முடிகிறதுபோது கேரட் கழுதைக்கு சொந்தமாகிறது. வெற்றி கேரட். நாமெல்லாம் கழுதைகள்.

ஒரு வெற்றியை அடைய எத்தனை தோல்விகளை சந்திக்கலாம்?

முதல் தோல்வி மட்டும் தான் தோல்வி. இரண்டாவது தோல்வியே வெற்றிதான். எப்படி என்றால், இமயமலையில் ஏறியவர்கள் எத்தனையோ பேர். ஹிலாரி, டென்சிங் இருவர் மட்டும்தான் வெற்றிபெற்றார்கள்.

அவர்கள் சிரித்துக் கொண்டே சொன்னார்கள் “இமயமலையின் உச்சிக்குப்போனால் அது இமயமலையை வெற்றி கொண்டதாகப் பொருள். பாதி போய் திரும்பினால் அந்த அனுபவமே எங்களுக்கு வெற்றி” என்று.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment