Home » Articles » ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்.

 
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்.


admin
Author:

ஆயிரக்கணக்கானவர்களை நம் வாழ்க்கைப் பயணத்தில் சந்திக்கிறோம். அத்துணை பேரும் நம் நெஞ்சத்தில், நினைவில் நிலைத்து நிற்பதில்லை. நமது சிந்தையில் எப்போதும் நிலைத்து நிற்பவர்கள் ஒரு சிலரே.

ஆஸ்திரேலியாவில் சந்தித்த இளைஞர்களில் எமது நினைவில் நீங்காது நிறைந்திருக்கும் இளைஞர் பழனி.

நாம் எப்போதாவது பிறருக்கு உதவி செய்வோம். எப்போதும் பிறர்க்கு உதவுவதற்கென்றே இருப்பவர்கள் மிகச்சிலர். அந்த மிகச்சிலரில் பழனியும் ஒருவர்.

ஒருநாள் மாலை, சூரிய அஸ்தமன வேளை. பிரிஸ்பனில் சர்பிரைடு கர்னல்டிரைவ் சாலையில் நான் தங்கியிருந்த லேண்டன் இல்லத்திற்கு வந்து எம்மை சந்தித்தார் பழனி. துடிப்புமிக்க இளைஞர். பேச்சில் இனிமை, செயலில் வேகம் – விவேகம். மனிதநேயம், முடியாதவர்க்கு முந்திச்சென்று உதவுகின்ற உள்ளம், இவற்றின் மொத்த வடிவம்தான் பிரிஸ்பன் பழனி. குவீன்ஸ்லாந்து தமிழ்சங்கத்தின் தலைவர்.

பழனியின் பூர்வீகம் மதுரை மாவட்டம் பட்டப்படிப்பை தமிழகதில் முடித்துவிட்டு பிறக குஜராத்தில் Peace Course படித்தார். அப்போது உடன் படித்த ஆஸ்திரேலிய ஆரணங்கு ஒருவரைக் காதலித்து பெற்றோரின் சம்மத்துடன் மணம்புரிந்து கொண்டார். பின்பு துணைவியாருடன் ஆஸ்திரேலியா வந்தார். பிரிஸ்பன் நகரில் கொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார்.

முதுமையால் முடியாதவர்கள், முடமானதால் முடியாதவர்கள் என்று அல்ல்ல்படுகிற ஆதரவற்றர்களுக்கு அன்பு காட்டி அவர்களுடன் உரைராணவும், அவர்களை வெளியில் அழைத்துச் சென்று மகிழ்ச்சியாக பொழுது போக்கி, வேண்டிய உதவிகள் செய்து மீண்டும் அவர்தம் இருப்பிடம் கொண்டு சேர்ப்பதே இவர் பணி.

நமது நாட்டைப் போன்ற பந்த பாசங்கள் நிறைந்த குடும்ப அமைப்பு அங்கே இல்லை. இளமையைக் கட்டுப்பாடற்ற காமத்தில் தொலைத்து விடுகிறார்கள். பள்ளிப்படிப்பை முடிதும் முடிக்காத நிலையில் பெற்றோரை விட்டு இறகு முளத்த கிள்ளைகளாய் பறந்து விடுகிறார்கள்.

ஒருவனுக்கு ஒருத்தி என்கிற நெறிகளெல்லாம் அங்கே இல்லாததால், விரும்பும் வரை விரும்புகிறவரோடு சேர்ந்து வாழ்கிறார்கள். பிறகு பழையது புளித்ததும் புதியதைத் தேடுகிறார்கள்.

பழையன கழிதலும் புதியன புகுதலும் அவர்களின் அகவாழ்வில் அடிக்கடி நடக்கிறது. இதனால் பலரும் முதுமையில் அல்லல்படுகிறார்கள்.

அவர்களிடம் அன்பு காட்டவும் ஆதரவு நல்கும், பரிவுகாட்டும் பாசம் பொழியவும் ஒருரும் அருகில் இருப்பதில்லை. முதியோர் இல்லங்கள் அவர்தம் சரணாலயங்கள் ஆகின்றன.

உதவிக்கரம் தேவைப்படும் அத்தகையவர்களுக்கு நமது பழனியின் கரங்கள் நீளும். தொண்டு செய்வதையே முழுநேரப் பணியாக ஆற்றி வரும் பழனியின் பணி மகத்தானது.

ஆஸ்திலிய மங்கையைக் கரம்பிடித்து ஆசைகளோடும், நம்பிக்கைகளோடும் ஆஸ்திரேலியா வந்த பழனிக்கு சில திங்களில் அதிர்ச்சி காத்திருந்தது.

உருகி உருகி காதலித்து பழனியை மணந்த பிரிஸ்பன்பெண்மணி ஒரு பெண்குழந்தைக்குத் தாயானாள். காலம் உருண்டது. வளர்ந்த நாட்டுப் பெண்களின் வழக்கம் அவரை விடவில்லை. இனிமையாய் சென்று கொண்டிருந்த இவர் தம் இல்லறம் இடையிலே முறிந்து போனது.

நம்பிக்கையோடு வந்தவனை நட்டாற்றில் விட்டுப்பறந்தாரே என்று பழனி ஒன்றும் உருக்குழைந்து போய்விடவில்லை. தன்னம்பிக்கையோடு தொண்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

தாயிடம் வளர்கிற தன் மகளை விடுமுறை நாள்களில் அழைத்து வந்து அன்பையும் பண்பையும் பழனி ஊட்டி வருகிறார். அந்த்க் குழந்தைக்கு தமிழ் பயிற்றுவிக்கிறார்.

தமிழ் நாட்டில் வாழ்கிற தமிழர் பலர் தங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு என்று கற்பித்து தமிழை ஒரு மொழிப்பாடமாகக்கூட கற்பிக்காத அவலநிலை இங்கே. தமிழை ஒரு மொழிப்பாடமாக தன்பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பதைவிட பிரெஞ்சு, இந்தி என்று எடுத்து படித்தால் மதிப்பெண் கூடுதலாக வரும் என்று பெற்றோர்கள் எண்ணுகிறார்கள்.

வெறும் மதிப்பெண் பெறுவது மட்டுமே இவர்களது நோக்கமாக இருக்கிறது. அதிக மதிப்பெண் பெற்று தொழிற் கல்லூரிகளில் இடம் பிடித்து உயர்ந்த பதவிகளுகுச்சென்றுபொருளீட்டுது மட்டுமே வாழ்க்கையில்வெற்றியைத் தந்துவிடுமா?

வெற்றிகரமான வாழ்க்கை என்றால் பட்டமும் பதவியும் பெறுவது மட்டுமல்ல. உயர்ந்த பண்புகளைப் பெறுவது உன்னதமான ஒழுக்கத்தையும், உயர்ந்த பண்புகளையும், மனிதநேயத்தையும் அறிவியல் பாட்ங்களில் பெறமுடியுமா?

பெற்றோர்களே பிள்ளைகளின் வாழ்வை வளப்படுத்துவதாக தவறாக எண்ணி குடும்பங்களில், அலுவலகங்களில், சமுதாயத்தின்எந்தப் பகுதியில் பார்த்தாலும் அமைதியின்மை தென்படுகிறதே? இப்போதாவது நாம் விழித்துக் கொள்ள வேண்டாமா?

தயவு செய்து உங்கள் குழந்தைகளுக்கு தமிழ் பயிற்றுவிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. தமிழை ஒரு மொழிப்பாடமாகவாவது படிக்க வாய்ப்புக் கொடுங்கள். அதில்தான் நமது பெற்றோர்களை, சுற்றத்தை, உற்றாரை, உறவினரை நேசிக்க வேண்டும்,பெரியோரை மதிக்க வேண்டும், உயிர்களிடத்தில் அன்புகாட்ட வேண்டும் என்றெல்லாம் அவர்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பு இருக்கும்.

அப்படி அவர்கள் வளர்க்கப்பட்டால்தான் நாளை உங்களிடம் அன்புசெலுத்த, முதுமையில் உங்களுக்கு ஆதரவு நல்க உங்கள் பிள்ளைகள், உங்கள் பிள்ளைகளாக இருப்பார்கள். இல்லையென்றால் ஆஸ்திரேலியாவில் உள்ளது போல அன்பையும் ஆதரவையும் பெறமுடியாமல் ஏங்கவேண்டியிருக்கும்.

இப்பொழுதே அங்கும் இங்குமாக நம் நாட்டில் முதியோர் இல்லங்கள் முளைக்கத் தொடங்கிவிட்டன. எனவே இப்போதாவது நாம் விழித்துக் கொள்ள வேண்டும். மாறாக மாற்று மொழி மோகத்தில் மயக்கத்தில் இருக்கும் பலருக்கு நமது பழனி ஓர் மாற்று மருந்து. ஆங்கிலேய நாட்டில் தன் மகளுக்கு தமிழ் பயிற்றுவிக்கிறார் பழனி என்பது பாராட்டுக்குரியது.

அயல்நாட்டில் ஆதரவற்று விடப்பட்டாலும், எந்தச் சூழலிலும் தளர்ந்து விடாது தன்னம்பிக்கையோடு நிமிர்ந்து நிற்பதோடு, ஆதரவற்றவர்களுக்கு அரவணைப்பு தந்து ஓர் ஆலமரமாக வளர்ந்து நிற்கும் பழனி வளரும்தமிழ் இளைஞர்களுக்கு ஓர் உதாரணம்.

அங்கிருந்து புறப்பட்டு கிழக்கு வங்கத்தச் சேர்ந்த (டாக்டர்) ஓர் இசுலாமியர் வீட்டிற்கு இரவு விருந்துக்கு பழனி எம்மை அழைத்துச் சென்றார்.

அந்த வீட்டில் அக்காவும் தம்பியும் வசித்து வருகிறார்கள். அக்கா ‘ஷேக்கான்’ டாக்காவில் விலங்கியல் எம்.எஸ்.சி. படித்துவிட்டு இங்கு வந்து அக்கவுண்டன்சி படிக்கிறார். பகுதி நேரப் பணியாற்றுகிறார்.

அவர் தம்பி ‘முகம்மது’ அவரும் பள்ளிப் படிப்பை டாக்காவில் படித்துவிட்டு அக்காவுடன் ஆஸ்திரேலியா வந்து Technical Further Education நிறுவனத்தில் படிக்கிறார். உணவு விடுதி (Hotel) ஒன்றில் சமையல் வேலை செய்கிறார்.

இவர் தம் தாய், தந்தை இருவரும் டாக்காவில் காலமாகிவிட்டனர். தாய் தந்தை இல்லை என்றாலும் தன்னம்பிக்கை இருக்கிறது.

அயல்நாட்டிற்கு வந்து, தங்கள் சொந்தக்காலில் நின்று, படித்தும், பணியாற்றியும் முன்னேற முடியும் என்ற மனத்தின்மையுடன் வந்திருக்கிறோம் என்று அந்த் இசுலாமிய இளசுகள் சொன்னது கேட்டு உடல் சிலிர்த்துக் கொண்டது.

தாயும் தந்தையும் இல்லை. சொந்த ஊரல்ல. பல்லாயிரக்கணக்கான மைல் தொலைவுக்கு அப்பால் உள்ள ஒரு வேற்று நாட்டில், தாங்களே உழைத்துச் சம்பாதித்து, படித்து பட்டம் பெற முயற்சித்து வரும் இந்தத் தன்னம்பிக்கைச் சிட்டுகளை வணங்கி வாழ்த்த் தோன்றுகிறதல்லவா?

பழனியுடன் நானும் வருவதறிந்து எனக்காக சைவ உணவும் தயாரித்திருந்தார்கள். எதிர்காலம் தம்முடையதுதான் என்ற நம்பிக்கையோடு துளியும் கவலை இன்றி வாழ்ந்து வருகிறார்கள்.

கலகலப்பாக உரையாடிக்கொண்டே உணவு முடித்து விடைபெறும்போது என் கடைக்கண்களின் ஓரத்தில் ஈரம் கசிந்திருந்தது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பூங்குன்றனின் சங்க இலக்கிய வரி என் நினைவில் மின்னிச் சென்றது.

தொடரும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2001

மனித சக்தி மகத்தான சக்தி
உன்னால் முடியும் தம்பி
சிந்தனைத்துளி
பொதுவாச் சொல்றேன்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்.
விழுந்தாலும் எழுவேன்
உள்ளத்தோடு உள்ளம்
வெற்றியின் மனமே….
பெற்றோர் பக்கம்
நம்பிக்கையும் நானும்
தன்னம்பிக்கை பாதையில் நட!
மனசு விட்டுப் பேசுங்க!
நிறுவனர் பக்கம்
சிரிப்போம் சிறப்போம்
வாழ்க்கை
விட்டு விடுதலையாவோம்
உறவுகள் உணர்வுகள்….