Home » Articles » நம்பிக்கையும் நானும்

 
நம்பிக்கையும் நானும்


admin
Author:

இன்றைய இளைஞ்களிடம் பெரிய குறை என்று எதைச் சொல்லலாம்?

இளைஞர்களுக்கு மட்டுமல்ல. எல்லோருக்கும் பொதுவான ஒரு குறை நேர விரயம்.

பலரின் வாழ்க்கையே தொலைக்காட்சிப் பெட்டியின் முன் வீணாகிவிடுகிறது. இதை நான் வலியுறுத்தி சொல்லக்காரணம் மற்ற ஊடகங்களாவது மக்கள் அறிவக்கு வேலை கொடுக்கும்.

உதாரணத்திற்கு உங்கள் “தன்னம்பிக்கை” மாத இதழ் இருக்கிறது. இது, படிப்பவர்களை சிந்திக்க வைக்கிறது. ஆனால், தொலைக்காட்சி உங்களை சிந்திக்க இடாது. கண்கள், காதுகள், மனது, எல்லாவற்றையும் கட்டிப்போட்டுவிடும்.

குழந்தகளுக்கு, இந்த தொலைக்காட்சி ஒரு பெரிய பகை. இது பெற்றர்களுக்குத் தெரிவதில்லை. வன்முறை, பாலியல், இவை இரண்டும்தான் வாழக்கை என்பது போன்ற பிம்பத்தை இன்றைய பெரும்பாலான ஊடகங்கள், ஏற்படுத்தி வருகின்றன.

வியாபார நோக்கம் காரணமாக இவர்களிடம் சமுதாயப்பார்வை என்பதேயில்லை. இதன் விளைஉதான் “ஈவ்டீசிங்” போன்ற கலாச்சார சீரழிவுகள். பெறோர்தான் இதில் கவனமாக இருக்க வேண்டும்.

நான் அமெரிக்கா போனபோது, இளைஞர்கள் எதற்கெடுத்தாலும் துப்பாக்கி தூக்குவதைப்பார்த்து, குழந்தைகளை டி.வி. பார்க்க அனுமதிக்க கூடாது என்று கருத்து தெரிவித்தேன். ஆறேழு ஆண்டுகள் கழித்து இதையே ஆராய்ச்சி முடிவாக அறிவித்தார்கள்.

நம் நாட்டைப் பொருத்தவரை, இதற்கான, அக்கறையை நாம்தான் காட்ட வேண்டும். அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை தக்க வைத்துக் கொள்வதில்தான் ஆரவமாக இருக்கிறார்கள். நாடு பற்றிய சிதனையெல்லாம் அவர்களுக்கு ஏழாம் பட்சமோ, எட்டாம் பட்சமோதான்.

இன்றைய சூழலைப் பார்க்கும் போது, மக்கள் சக்தி இயக்கம்தான் நம் நாட்டிற்கு முன்பை விடவும் இப்போது தேவைப் தோன்றுகிறது. ஆனால், இயக்கத்தில் முன்னர் இருந்த பரபரப்பைக் காணோம்?

மக்கள் சக்தி இயக்கம், இப்போது மௌனமாக மக்கள் பணிகளை ஆற்றிக் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம், பரபரப்பாக அறிக்கைகள் கொடுத்துக் கொண்டிருப்போம். ப்போது அவற்றை நிறுத்திவிட்டு பணிகளில் மட்டும் கவனம் செலுத்துகிறோம்.

ந்திநீர் இணைப்பு, விவசாயிகளுக்கு விழிப்புண்வு ஊட்டுதல், புதிய கல்விமுறை உருவாக்கம், ஆகியவற்றில் மக்கள் சக்தி இயக்கம் இப்போது கவனம் செலுத்தி வருகிறது.

இந்தியாவில் 65% நிலம் விவசாய நிலம்தான். அபரிதமான நீர் வளம் மீது போதிய கவனம் செலுத்தப்படவில்லை. வளரும் தலைமுறைக்கு புதிய கல்விமுறை தேவைப்படுகிறது. இத்தகைய களங்களை நோக்கி மக்கள், சக்தி இயக்கம் இயங்கி வருகிறது.

சமீபத்தில் கூட செங்கல்பட்டு அருகில் ஒரு கிராமத்தில் பெண்கள் எங்கள் இயக்கத்தின் சார்பாக அணிதிரண்டு, காவல்துறை துணையோடு கள்ளச்சாராயம் காய்ச்சும் இடங்களை முற்றுகையிட்டு, அங்கிருந்த பானைகளை நொறுக்கி அடித்து , அங்கிருந்த ஆணகளைக் கொண்டு “இந்த ஊரில் மது விற்பதில்லை. குடிப்பதில்லை” என்று பலகை வைத்திருக்கிறார்கள்.

இந்தியாவில் தொழில்துறை முன்னேற உங்கள் ஆலோசனை என்ன?

நாங்கள் செய்யும் தொழிலில் எங்கே தவறு நடக்கிறது என்று ஆராய்ந்து அதை ‘திருத்திக் கொள்ளுகிற பக்குவமும், கூர்மையும் தொழிலதிபர்களுக்குத் தேவை.

எப்படியாவது பணம் சம்பாதிக்கலாம் என்றில்லாமல் தொழில் தர்மங்களை சரியாக்க் கடைபடிக்கும் மனப்பான்மை தொழிலதிபர்களுக்கு வரவேண்டும்.

அமெரிக்காவில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் “பிசினஸ் எத்திக்ஸ்” எனப்படும் தொழில் தர்ம்ம் பற்றியே அதிகம் போதிகப்படுகிறது.

ஒரு முறை ஜப்பானுக்கு, தூத்துக்குடியலிருந்து உப்பு அனுப்பப்பட்டது. ஒரு தனியார் தொழிலதிபர் அனுப்பியிருந்தார். அதில், கரி படிந்திருந்தது. ஜப்பான் நிறுவனத்தை சார்ந்தவர்கள் தொடர்பு கொண்டு அதனை திருப்பி அனுப்புவதாகச் சொன்னார்கள். இந்தத் தொழிலதிபரோ, மறுத்து விட்டார். அத்துடன் நிறுத்தவில்லை, அந்த உப்புக்கு உரிய பணத்தை அனுப்பும்படி வற்புறுத்தினார்.

அங்கே, எல்லாத் தொழிலதிபர்களுக்குள்ளும் ஒற்றுமை உண்டு. அனைவருக்கும் இந்தச் செய்தி பரவி, இந்தியாவிலிருந்து உப்பு இறக்குமதி செய்வதையே முழுதும் நிறுத்திவிட்டார்கள்.

ஒரு தனி மனிதர் செய்த தவறு காரணமாக நம் தேசத்திற்கே பெயர் கெட்டுவிட்டது. இது போன்ற அலட்சியப்போக்குகளால், தேவையில்லாத அச்சம் இவற்றைக் களைந்து தொழிலில் முன்னேற வேண்டும்.

இந்திய இளைஞர்களின் எதிர்காலம் பற்றி?

இந்தியாவில் எதிர்காலம், இளைஞர்களின் எதிர்காலம் இரண்டுமே, பிரகாசமாக உள்ளது. தங்கள், திறமையை வைத்துதான் முன்னேற முடியும் என்கிற தெளிவு இன்று இளைஞர்கள் மத்தியில் காணப்படுகிறது.

அரசியல் தலைவர்களை முன்னுதாரணமாக்க் கொள்கிற போக்கு மாற வேண்டும். நல்லது செய்கிற அரசியல்தலைவர்களுக்கு மட்டுமே முக்கயத்துவம் தரப்படுகிறது.

வாஜ்பாய், சந்திரபாபு நாயுடு போன்ற தலைவர்கள் மக்கள் நலன்பற்றி சிந்திக்கக் கூடியவர்கள். ஆனால் அவர்களுக்கும் சில நெருக்கடியிருக்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திராவிட இயக்க்களால் மக்களுகு நன்மை செய்யமுடியாது. இளைஞர்கள் சரியானவர்களை அடையாளம் கண்டு, தேவையில்லாதவர்களை புறக்கணித்து தங்கள் ஆற்றலை ஒருமுகப்படுத்தி வளர வேண்டும்.

“தன்னம்பிக்கை” இதழின் நிறுவனர் டாக்டர் இல.செ. கந்தசாமி எனக்கு நெருங்கிய நண்பர் . இன்னும் பல காலம் வாழ்ந்திருக்கக் வேண்டியவர். அவர் விட்டுச் சென்ற பணிகளை அவரது மகன் கலைக்கண்ணனும், தன்னம்பிக்கை ஆசிரியர் குழுவினரும் தொடர்ந்து செய்வது பாராட்டுக்குரியது.

தன்னம்பிக்கை பத்திரிகை குழுவிற்கும், வாசகர்களுக்கும், என்னுடைய வாழ்த்துக்கள்.

 

1 Comment

  1. veeran says:

    தன்னம்பிக்கை பத்திரிக்கை குழுவினரும், பாரதத்தின் ரத்தினம் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களும் மேன்மேலும் வெற்றியுடன் வாழ்க வளமுடன்!

Post a Comment


 

 


November 2001

மனித சக்தி மகத்தான சக்தி
உன்னால் முடியும் தம்பி
சிந்தனைத்துளி
பொதுவாச் சொல்றேன்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்.
விழுந்தாலும் எழுவேன்
உள்ளத்தோடு உள்ளம்
வெற்றியின் மனமே….
பெற்றோர் பக்கம்
நம்பிக்கையும் நானும்
தன்னம்பிக்கை பாதையில் நட!
மனசு விட்டுப் பேசுங்க!
நிறுவனர் பக்கம்
சிரிப்போம் சிறப்போம்
வாழ்க்கை
விட்டு விடுதலையாவோம்
உறவுகள் உணர்வுகள்….