![]() |
Author: ராஜா யு.எம்.டி
|
தன்னம்பிக்கை அலுவலகத்திற்கு ஒரு இளைஞர் வந்தார்.
“என் பேரு யு.எம்.டி. ராஜாங்க” என்றார்.
“அது என்ன யு.எம்.டி. ராஜா?”
“உன்னால் முடியும் தம்பி ராஜா” என்று விளக்கம் தந்தார்.
சற்றே நிமிர்ந்து உட்கார்ந்தோம்.
“அப்படியா? உங்களால் என்னென்ன முடியும்?” என்றோம். தயக்கமிலாமல் “எல்லாம் முடியும்ங்க! முய்சி செய்தால் முடியாதது ஏதும் இருக்கா என்ன? என்றார் யு.எம்.டி. சரியான தன்னம்பிக்கை பார்ட்டி.
ஒன்றைச் சாதிக்க நினைத்துவிட்டால், அதற்கான தேதியை டைரியில் குறித்து, அதுகுறித்த உறுதிமொழிகளையும், இடையறாமல் எழுதிப் பார்க்கும் தன் மொழிப் பயிற்சி இவரது வெற்றிகளுக்கு வழி வகுத்திருக்கிறது.
இதோ இவரது சாதனைகளில் சில.
ஊசி நுனியில் ஒட்டகம் வரைவது, அரிசியில் ஓவியம், ஒரு துளி தங்கத்தில் கலைப்படைப்பு என்று பலவும் செய்யும் ராஜா, தான் செய்த பிள்ளையார் சிலைகளை நம்மிடம் காட்டினார்.
ஏதோ குறைகிறதே என்று தேடிப்பார்த்தால் பிள்ளையாரின் தொப்பை மிஸ்ஸிங்!
நம் குழப்பத்தைப் பார்த்து விட்டு விளக்கம் கொடுத்தார்.
“இவர் யோகா பிள்ளையாருங்க! யோகா செய்தால் உடம்பைக் குறைக்கலாம் அப்படீன்னு புதுமையா சொல்ல எனக்குப் பிளையார் கைகொடுத்தார்” என்கிறார்.
இந்தியர்கள் விழிப்புணர்வும் கல்வியுணர்வும் பெற வேண்டும். வெறும் பெருவிரல் ரேகைப் பதிப்பவர்களாகவே இருந்துவிடக்கூடாது. இதற்காக, பாடுபட்ட விவேகானந்தர், வ.உ.சி., பாரதியார், அம்பேத்கார், திலகர் போன்வர்களின் உரவப் படங்களை விரல் ரேகை பதித்தே வரைந்திருக்கிறார் யு.எம்.டி. ராஜா.
மண்ணுக்காகப் பாடுபட்ட மகாத்மா காந்தியின் உருவத்தை மண்ணாலேயே வரைவது, புரட்சிகனல் பாரிதிதாசனின் உருவத்தை நெருப்பிலேயே வரைவது இவையெல்லாம் யு.எம்.டி. ராஜாவின் புதுமையான படைப்புகள்.
பாட்டிலின் உள்புறத்துக்குள் ஓவியம் வரைய முடியுமா என்ன? “முடியும்” என்கிறார் யு.எம்.டி. ராஜா.
வள்ளுவர், விவேகானந்தர், பாரதியார் போன்றவர்களை தன் தூரிகைத் திறமையால் பாட்டிலுக்குள் போட்டுப் பூட்டியிருக்கிறார்.
இவர், தனது பெயரை “உன்னால் முடியும் தம்பி” என்று வைத்துக்கொண்டிருப்பதில் ஆச்சரியமென்ன?
Share

November 2001

















No comments
Be the first one to leave a comment.