திருமணம்மென்றால் எல்லாப் பெற்றோர்களும் முதன் முதலாக எதிர்பார்ப்பது என்ன?
மணமக்களுக்கு பொருத்தம் சரியாக இருக்கிறதா? என்பதை பல்வேறு கோணங்களில் பார்க்கிறோம்.
அதிலும் ஜாதகத்தில் 10 பொருத்தங்களும் சரியாக இருக்கிறதா? என்பதை பலர் முக்கியமாக கருதுகிறார்கள்.
இதை பாரம்பரியமாக செய்து வருகிறோம். இது சரியா? இதை நம்பலாமா என்ற ஆராய்ச்சி நமக்கு வேண்டாம்.
இன்று, அறிவியல், உலகில் உள்ளோம். முன்னொரு காலத்தில் உருகாமையிலுள்ள பக்கத்து கிராமத்திற்கு சென்றால் கூட அங்கே சென்றவர் திரும்பி வந்த பிறகே அவர் பாதுகாப்பாக திரும்பி வந்துவிட்டார் என்பதை அறியமுடியும்.
ஏனெனில், போனா, உடனடி தபாலோ, இன்றை இன்டர்நெட்டோ எதுவுமில்லாத காலம் அது.
ஆனால், இன்றோ உலகையே ஒரே நாளில் சுற்றிவர முடியும். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் உடனடியாகப் பேச முடியும்.
இந்த அறிவியல் வளர்ச்சி, நம்மைச் சேர்ந்தவர்களெல்லாம் ஓரிடத்திலேலே வாழ வேண்டும் என்ற பந்த பிணைப்பின் அளவு கோலை உடைத்துவிட்டதென்றால் அது மிகையாகாது.
சரி இந்த காலகட்டத்தில் திருமணமென்றால் எத்தகைய பொருத்தங்களைப பார்க்கலாம்?
முதலாவது பொருத்தம் மணமக்களுக்கு ஒருவரை ஒருவர் ஏற்புடையவர் என்ற பிணைப்பு வேண்டும். அதை பார்த்தவுடனே சொல்ல முடியுமா?
இருந்தாலும் First impression is the best impression என்பதற் கேற்ப ஒருவர்மீது ஒருவருக்குப் பிடிப்பு உண்டாக வேண்டும்.
இரண்டாவது, குணநலன். இதை எப்படி அறிவது? ஒருவர் படிக்கின்ற இடத்தில், வாழ்கின்ற இடத்தில் நடந்துகொள்கின்ற விதங்களை ஆராய்ந்தால் அவருடைய குணத்தை அறிய முடியும்.
மூன்றாவது, உயர்ந்த குறிக்கோள் உள்ளவராக இருக்க வேண்டும். ஒருவர் பெரிய லட்சியவாதியாக இல்லாவிட்டாலும் தன்னால் சுயமாக செயல்பட முடியும் என்ற அடிப்படை நம்பிக்கையாவது வேண்டும்.
நான்காவது, மரியாதை தெரிந்தவராக இருக்க வேண்டும். எவ்வளவுதான் அறிவாளியாக ஒருவர் இருந்தாலும் அடிப்படையாக மனித நேயம் உள்ளவராக இருக்க வேண்டும்.
அவர் பிறரிடம் எப்படி மரியாதையுடன் பழகுகிறார். அவரை ஏற்கின்ற பெரியோர்கள் நால்வராவது இருக்க வேண்டும் திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படும்போது அந்த நால்வரின் பங்கு பயனளிக்கும்.
ஐந்தாவது, படிப்பறிவு வேண்டும். நான் சொல்கிற படிப்பறிவு கல்லூரியில் பெறப்படும்.பட்டமல்ல. அதுவும் அவசியம்தான். ஆனால் ஒரு மனிதர் பட்டங்களைப் பெற்றுள்ளாரோ இல்லையோ அவருக்கு ஷிவ்கேரா சொன்ன நல்ல பண்பு, சொல்வதைச் செய்யும் மன உறதி, நல்லதைத் தீர்மானிக்கும் ஆற்றல், மரியாதை இவை இருந்தால் அவரை படிப்பறிவு கொண்டவராகக் கருதலாம்.
ஆறாவது, தொழில் தன்னுடைய நேரத்தை உபயோகமாக செலவிடவும், வாழ்க்கைக்குத் தேவையான பொருள் ஈட்டவும் அடிப்படையாக ஏதாவது ஒரு நியாயமான தொழில் வேண்டும்.
ஏழாவது, பாரம்பரியம் ஒருவருடைய பெற்றோர்கள் மற்றும் மூதாதையர்களின் குணங்கள்தான் பெரும்பாலும் ஒவ்வொரு மனிதனின் செயல்பாட்டில் அடிப்படையை நிர்ணயிக்கின்றன என்பதால் நல்ல பாரம் பரியத்தில் இருப்பவராக தேர்வு செய்தல் வேண்டும்.
எட்டாவது, தோற்றம். மணமக்கள் இருவரும் தோற்றத்தில், உருவ அமைப்பில் ஏற்புடையவர்களாக இருக்க வேண்டும். யானையும் பூனையும் கொண்ட தோற்றங்கள் பல சிக்கல்களை உருவாக்கும்.
ஒன்பதாவது, நடைமுறை சாத்தியங்கள். மேற்கண்ட விவரங்களின் அடிப்படையிலும் மணமக்கள் இருவரின் விருப்பு வெறுப்பு அடிப்படையிலும இருவரும் இணைந்து வாழ்வதிலுள்ள சாத்தியங்களை அறிய வேண்டும்.
பத்தாவது, உடல் நலம் மற்றும் மரபியல் பொறுத்தம்.
இதில் ரத்தத்தின் வகை, பாரம்பரிய நோய்கள் பற்றிய விவரங்கள், எய்ட்ஸ் பரிசோதனை, ஆண்களுக்கு ஆண்மைத்தகுதி, பெண்களுக்கு தாய்மை தகுதி போன்றவைகளைப் பற்றி நியாயமான மருத்துவ சான்றிதழே முக்கியம்.
இந்த பத்தாவது தகுதியை நடைமுறைப்படுத்த முடியுமா? சாத்தியமா? கேள்விக்குறிதான். ஆனால் இதை வலியுறுத்த வேண்டிய அவசியத்தில் நாமிருக்கிறோம். என்பதே உண்மை.
இன்று, உலகிலேயே எய்ட்ஸ் நோய் அதிகமுள்ள நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருபது இந்தியாதான். இந்தியாவிலும் மொத்த எய்ட்ஸ் நோயாளிகளில் ஐம்பது சதம் பேர் தமிழ்நாட்டில்தான் உள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் எய்ட்ஸ் பரிசோதனை அவசியம்தானே.
அடுத்து – ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு திருமணத்தை செய்யலாம்” என்று சொல்கிறார்கள். அது எப்படியிருந்தாலும் அடிப்படையில் ஆண்மைத்தகுதியும், பெண்மை தகுதியும் அவசியம் தானே!
மேலும் இரு தரப்பினரின் தன்மைகாகவே மரபியல் ஆலோசனை (Genetic Counselling) செய்தால் வருங்கால சந்ததி ஆரோக்கியமாக அமையுமல்லவா?
நம்முடைய திருப்திக்காக ஜோதிடத்தைப் பார்த்தாலும், வேறெந்த முறையைக் கையாண்டாலும் இந்த பத்து பொருத்தங்களின் அடிப்படையில் இயன்றவரை ஆய்வு செய்ய வேண்டியது பெற்றோரின் கடமையாகும்.
தொடரும்.

November 2001

















No comments
Be the first one to leave a comment.