Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

விழாக்காலங்கள் நெருங்கிவரும் வேலை இது. புராண்ங்களில் பதிவான பழைய வெற்றிகளை, வருடந்தோறும் கொண்டாடும் வழக்கம், யுகம் யுகமாய் தொடர்கிறது.

நீண்ட காலத் தவம், தவத்தின் உச்சியில் வரம் என்பதாகத்தான் எல்லாக் கதைகளும் சொல்கின்றன. நிகழ்காலத்தில் “தவம்” என்பது காடுகளுக்குள் சென்று கடவுகளை நோக்கி செய்வதல்ல. வாழ்க்கைக்குள் சென்று தனக்குள் இருக்கும் ஆற்றலை தீவிரப்படுத்துவதே தவம்.

ஒவ்வொரு தனி மனிதனும் தனக்குள் இருக்கும் பலங்கள், பலவீனங்கள் இரண்டயும் கணக்கிலெடுத்து பலங்களின் துணைகொண்டு பலவீனங்களை வெற்றி கொள்ளத் தொடங்கினாலே வாழ்க்கை விழாக்கோலம் பூணுகிறது.

அன்றாட வாழ்வின் முயற்சியை தவம் என்று அர்த்தப்படுத்துவோம். அதில் வரும் வெற்றிகளை வரம் என்று அர்த்தப்படுத்துவோம்.

தன்னம்பிக்கை என்கிற ஆயுத்த்தால் தனக்குள் இருக்கும் அரக்கனை வீழ்த்தும் ஒவ்வொரு மனிதனும் உயர்வுகள் காண்கிறான்.

அத்தகைய உயர்வுகள் ஒவ்வொருவருக்கும் வரட்டும். வாழ்க்கையின் நோக்கம் வெற்றிபெறட்டும்.

வாழ்த்துக்களுடன்,
ஆசிரியர் குழு.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


November 2001

மனித சக்தி மகத்தான சக்தி
உன்னால் முடியும் தம்பி
சிந்தனைத்துளி
பொதுவாச் சொல்றேன்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்.
விழுந்தாலும் எழுவேன்
உள்ளத்தோடு உள்ளம்
வெற்றியின் மனமே….
பெற்றோர் பக்கம்
நம்பிக்கையும் நானும்
தன்னம்பிக்கை பாதையில் நட!
மனசு விட்டுப் பேசுங்க!
நிறுவனர் பக்கம்
சிரிப்போம் சிறப்போம்
வாழ்க்கை
விட்டு விடுதலையாவோம்
உறவுகள் உணர்வுகள்….