Home » Articles » முயற்சிதான் மந்திரம் உழைப்புதான் தந்திரம்

 
முயற்சிதான் மந்திரம் உழைப்புதான் தந்திரம்


admin
Author:

“விட்டு விடுதலையாவோம்” தொடர் நிகழ்ச்சியின் பத்தாவது கூட்டத்தில் பிரபல கார்ட்டூனிஸ்ட், மற்றும் எழுத்தாளர் ஹாய் மதன் சென்னைத் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநர் திரு. ஏ. நடரஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

பத்து கூட்டங்களாய் நியதி, ஒழுங்கு தவறாமல தன்முன்னேற்ற ஆர்வத்துடன் பங்கேற்கும் வாசகர்களின் கட்டுப்பாட்டுக்கு வருகிற பேச்சாளர்கள் தரும் பாராட்டு மழை தமிழ்நாடு முழுவும் பரவுவதாக வரவேற்புரையில் குறிப்பிட்டார் தன்னம்பிக்கை இதழின் இணையாசிரியர் மரபின் மைந்தன் ம. முத்தைய.

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குநர் திரு. கிருஷ்ணன் தலைமை வகித்தார். முதல்ல் சென்னைத் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குனர் திரு எ. நடராஜன் பேசினார்.

“நான் படித்த, பார்த்த, அனுபவித்த, கேள்விப்பட்ட விஷயங்களை மட்டுமே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அறிவுரை சொல்வது என் வேலைஇல்லை” என்று தொடங்கினார்.

“விட்டு விடுதலையாவோம் என்கிறீர்கள். விடுதலையாவோம் என்றால் ஒன்றை விட்டு விட வேண்டும் என்று தெரிகிறது. எதை விடுவது? எதிலிருந்து விடுதலயாவது? அரசியல்வாதிகள் அடிமைத்தனத்தை விடச் சொல்வார்கள் ஆன்மீகாதிகள் பற்றுக்களை விடச் சொல்வார்கள். அறிவியலாளர்கள் அச்சத்தை விடச் சொல்வார்கள். சீர்திருத்தவாதிகள், ஏழ்மை, வறுமையை விட்டுவிடுதலையாகச் சொல்வார்கள்.”

வெட்டிப் பேச்சை விட்டால் ச்ச்சரவு குறையும், சோம்பலை விட்டால் இளைஞர்கள் வளம் பெறலாம். தலைவர்கள் சுயநலத்தை விட்டால் நாம் சுபிட்சம் பெறலாம்.

தன்னம்பிக்கைக்கு 3 விஷயங்கள் முக்கியம். முதலில் படிப்பு . அது குடும்பச் சூழல் மற்றும் ஆர்வத்தைப்பொறுத்து. அடுத்து தன்னம்பிக்கை நூல்ளைப்படிப்பது. தமிழில் முதலாவதாக அப்துற்ரஹீம் எழுதினார். சென்ற ஆண்டு அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோவில் ஒரு புத்தக்க்கடை பிரம்மாண்டமான கட்டிடம் அது. அங்கே ஆயிரக்கணக்கான சுயமுன்னேற்ற நூல்கள். ஸ்டீபன் கபே எழுதிய First Things First டெனிஸ் லைட்லியின் Winner in you ஆலன் பார்மிடம் எழுதிய Positive Thinker நார்மன் வின்சென்ட் Enthusiasm makes the Difference எழுதிய போன்ற புத்தகங்கள் முக்கியமானவை. அப்போது ஒரு வார இதழில் புத்தகங்கள் பற்றி எழுதினேன். 26 வாரங்களுக்கு 26 புத்தகங்கள் பற்றிய குறிப்புகள் எழுதினேன். இப்படித் தேர்வு செய்து படிக்கலாம்.

இரண்டாவது உடல் நலம். விளையாட்டு. உடல் நலம் சார்ந்த விழிப்புணர்வு முக்கியம். இன்று பல பத்திரிகைகள் அரசியலுக்கும் சினிமாவுக்கும் தருகிற முக்கியத்துவத்தை உடல் நலனுக்கும் தருகின்றன. ஒரு தேசத்தின் ஆரோக்கியம் அதன் விளையாட்டுகளில் தெரியும். உடல்நலம் பேணுவது, விளையாட்டுக்களில் ஈடுபடுவது மிகவும் முக்கியம்.

மூன்றாவதாக, “நாம் யார்” என்கிற தேடல். நாம் மனிதனாகி விட்டோமா என்கிற சுய ஆய்வு வேண்டும். ஒரு மனிதன் தன் ஆயுட்காலத்தை செலவிடும் முறை பற்றி அமெரிக்கப் புள்ளி விவரம் சொல்கிறது. ஒரு மனிதனின் சராசரி வயது 70, என்றால் உறக்கம் 23 ஆண்டுகள், பணி புரிவது 16 ஆண்டுகள், பொழுதுபோக்கு 8 ஆண்டுகள், சாப்பிடுவது 6 ஆண்டுகள் பயணம் 6 ஆண்டுகள், சும்மா இருப்பது 4 ஆண்டுகள், ஆடை அலங்காரம் 2 ஆண்டுகள். மதம் தொடர்பானவை 6 மாதம். இந்தக் குறுகிய காலத்தை மனிதன் அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள வேண்டும்.

இதற்கு முயற்சி வேண்டும். முயற்சி தான் மந்திரம். உழைப்புதான் தந்திரம். இப்படி இருந்தால் யார் வேண்டுமானாலும் முன்னேறலாம். விஞ்ஞானி அப்துல் கலாமிடம் ஒருவர் கேட்டிருந்தார். “உங்களைப் பெரிதும் கவர்ந்த நூல்கள் எவை” என்று. அவர் இரண்டு புத்தகங்களைச் சொன்னார். த்த்துவ ஞானி, ஹென்றி டேவிட் தேரா எழுதிய “வால்டன்” என்கிற நூல். அந்த நூலில் “கனவுகாண வேண்டும். அதை நனவாக்க முயற்சிக்க வேண்டும். கனவு ஒரு நாள் நனவாகும்” என்றார்.

இரண்டாவதாக, டாக்டர் வெங்கட்ராமன் எழுதிய “Journey into light” சர்.சி.வி. இராமனின் வாழ்க்கை வரலாறு இது. இப்படி பொதுவான விஷயங்களைப்பறிப் பேசிய திரு. ஏ. நடராஜன் வாழ்க்கையில் உயர வசதியான சூழலி பிறந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று சொல்லிவிட்டு அதற்கான ஆதாரங்களையும் வழங்கினார்.

ரஷ்யாவின் புரட்சி வீரன் ஸ்டாலின், காலணி தயாரிப்பாளரின் மகன். பருத்தி நூற்பு இயந்திரத்தைக் கண்டுபிடித்த சர் ரிச்சர்ட் ஆர்க், முடிதிருத்தும் தொழிலாளியின் மகன். ஷேக்ஸ்பியரின் தந்தை கசாப்பு கடை வைத்திருந்தார். ஆப்பிரிக்காஐக் கண்டறிந்த லிவிங்ஸ்டன், திருவள்ளுவர், கபீர் தாஸர் இவர்களெல்லாம் நெசவுக் குடும்பத்தில் பிறந்தவர்கள். ஆறணாவுக்கு கூலி வேலை செய்து ஆந்திராவில் முதல்வரானார் அஞ்சையா. செங்கள் சூளை மேஸ்திரியாக இருந்து அமெரிக்காவின் பிரதமரானவர்ரூஸ் வெல்ட். தோட்டத் தொழிலாளியின் மகனாகப் பிறந்து மலேசியாவின் அமைச்சராய் இருப்பவர் டத்தோ சாமுவேலு, பள்ளிப்படிப்பு தடைபட்டும், கசாப்புக்கடை வைத்து, பிறகு முன்னேறியவர் மலேசியப் பிரதமர் திரு. மகாதீர் முகமது என்றார்.

தொடர்ந்து பேச வந்தார் திரு. “ஹாய் மதன்”. தனக்கே உரிய நகைச்சுவைத் தெறிப்போடு தொடங்கினார். அழைப்பிதழை முதலில் பார்த்ததும் “வீட்டு விடுதலையாவோம்ம என்று நினைத்தேன். கோவையில் எல்லோருக்கும் வீட்டில் அவ்வளவு பிரச்சினை போலிருக்கிறது என்று முதலில் கருதினேன். பிறகு பார்த்தால் “விட்டு விடுதலையாவோம்” என்று இருந்தது. இதற்குப் பொருள், ஒன்றிலிருந்து விடுதலையான பிறகு கூட அடிமை மனோபாவம் விலகாமல் இருப்பது.

வெள்ளைக்காரன் போன பிறகும் பலபேர் சிக்கித் திணறி தப்புத்தப்பாக ஆங்கிலம் பேசுவது நம் அடிமை மனோபாவத்தின் அடையாளம். முதலில் எனக்கு மேடைப்பேச்சு என்றால் பயம். மேடைப்பேண்ணு மட்டுமல்ல யாரையாவது பார்த்துப்பேசுவது என்றாலே பயம். நான் சிறியதாக இருக்கும் போது அயல்நாட்டுக் கடும்பம் ஒன்று எங்களுக்குக் பழக்கம். அவர்கள் வீட்டுக்கு அம்மா அழைத்துப் போனார் நான் உள்ளே வரமாட்டேன்என்று காரிலேலே இருந்து விட்டேன். அவர்கள் தங்கள் தேசத்தின பாரம்பரியப்படி வாசலில் வந்து வழியனுப்புவார்கள். அவர்கள் வருவதைப் பார்த்ததும் காருக்குள்ளேயே கீழே படுத்து ஒளிந்து கொண்டேன். பிறகு தன்னம்பிக்கை மெல்ல ஏற்பட்டது. அது உழைப்பின் காரணமாக எழுந்த தன்னம்பிக்கை.

ஏதென்ஸ் நாட்டில் டெமஸ்தனீஸ் என்கிற பேரரறிஞர் இன்றளவும் “சொற்பொழிவுக் கலையின் தந்தை” என்று பாராட்டப்படுவர். அவரது வாழ்க்கையின் ஆரம்பத்தில் திக்குவாய் இருந்தது. மிகவும் கூச்ச சுபாவம். முதலில் அவர் பேசிய போது அழுகிய தக்காளிகளும், முட்டைகளும் வீசப்பட்டன. அவர் பல ஆண்டுகள் வீட்டுக்கள்ளேயே இருந்து வாயில் கூழாங்கற்களைப் போட்டு பயிற்சி செய்தார்.

இளமைப் பருவ ஆசைகளால் அவர் பாதிக்கப்படவில்லை. சபலம் ஏற்படக்கூடாது என்று தலையின் ஒரு பக்கத்தை மழித்துக் கொண்டு கண்ணாடி முன் மாதக்கணக்கில் பேசிப் பழகினார்.

ஒரு முறை கடற்கரை ஓரமாக இவர் நிற்பதை நண்பர்கள் பார்த்தார்கள். ஏதோ தனியாகப் பேசிக் கொண்டிருந்தார். அருகில் போய்ப் பார்த்த போது “கடலிடம் பேசும்போது கூட்டம் ஆரவாரம் செய்வது கேட்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அந்த உணர்வுக்காக இங்கே பேசுகிறன்” என்றாராம் அவர்.

உழைப்புதான் உயர்த்தும். டென்னிஸ் கிருஷ்ணன் விம்பிள்டன் விளையாட பிரிட்டனுக்கு சென்றார். அது அதிகாலை நேரம் 4 மணி. நாம் பயிற்சி செய்ய மைதானத்திற்கு மற்றவர்களுக்கு முன் போவோம் என்று போனாராம். அப்போது அத்தனை விம்பிள்டன் வீரர்களும் அங்கே பயிற்சி செய்து கொண்டிருந்தார்களாம்.

இந்த உழைப்பும் நேர்மறை எண்ணங்களும் முக்கியம்.

எவரெஸ்ட் மீது எத்தனையோ பேர் ஏறினார்கள். சமீபத்தில் ஒருவர்ஏறியது உலக அளவில்பேசப்பட்டது. அவர் கண் பார்வை இழந்தவர். ஏறும்போது கடைசி இருநூறு மீட்டர் பனிச்சூறாவளி அதிவேகமாக இருந்ததால் 11/2 நாட்கள் ஏறமுடியவில்லை. உடனிருந்தவர்கள் உங்கள் இடுப்பில் கயிறு கட்டி இழுக்கலாமே என்ற போது அவர் மறுத்தார். இதற்கு என்னை உப்பு மூட்டை தூக்கிப் போய் நீங்கள் உட்கார வைத்திருக்கலாமே என்றார். எவரெஸ்ட்டிற்கு அழைத்துப் போகப்பட்ட முதல் ஆள் என்கிற பெயர் எனக்கு வேண்டாம் என்றார்.

பார்வையின்மை ஒரு குறையில்லை என்கிற உறுதி அவருக்கு அந்த அளவுக்கு இருந்தது.

 

1 Comment

  1. reko.rasu says:

    டாக்டர் எம். எஸ்.உதயமூர்த்தி அவர்களின் எண்ணங்கள் புத்தகத்தைப் படித்தது முதல் இன்று வரை தன்னம்பிக்கை உணர்வுகளோடு வாழ்ந்து வருகிறேன்.வாழ்கையில் வெற்றி பெறுவது,இன்று நினைத்து நாளை நடைபெறக்கூடிய ஒன்று அல்ல என்பதை உணர்ந்திருந்தாலும்,அது நிச்சயமாக நடந்தே தீரும் என்ற நம்பிக்கைதான் இன்றைக்கும் உற்சாகமாக வாழ்வதற்கான ஒரு அடிப்படையாக இருக்கிறது.
    உங்கள் சேவை தொடர வேண்டுகிறேன்,
    அன்புடன் ரெ.கோ.ராசு மலேசியா

Post a Comment


 

 


October 2001

வணக்கம் தலைவரே
முயற்சிதான் மந்திரம் உழைப்புதான் தந்திரம்
நம்பிக்கையும் நானும்
மனித நேயத்திற்கு மகுடங்கள்!
எழுக! வெல்க!
நிறுவனர் பக்கம்
துணிவோடிரு!
உறவுகள்….. உணர்வுகள்….
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கைமிக்க தமிழ் இளைஞர்கள்
சுய முன்னேற்றம்??
பெற்றோர் பக்கம்…
பொதுவாச்சொல்றேன்
வெற்றியின் மனமே
கேள்வி பதில்
வருதத்தின் பிடியில் வல்லரசு
மனித சக்தி மகத்தான சக்தி
உள்ளத்தோடு உள்ளம்