Home » Articles » நம்பிக்கையும் நானும்

 
நம்பிக்கையும் நானும்


admin
Author:

(நவீன உலகம் உருவம் பெறும் முன்பே, அது குறித்துச் சிந்தித்து ஆயத்தக் குரல்கொடுத்த அறிவாளர் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி. இன்றைய “தன்னம்பிக்கை உலகின்பிதாமகர்”. எண்ணம், சொல் என்கிற எல்லைகளில் நின்று விடாமல் நலப்பணிகளில் நம்பிக்கையடு ஆயரக்கணக்கான இளைஞர்களை ஈடுபடித்தி வரும் களப்பணியாளர. “தன்னம்பிக்கை” வாசகர்களோடு இதோ… இந்த இலட்சிய மனிதர் உரையாடுகிறார்.

உங்கள் பிறப்பு, வளர்ப்பு பற்றியெல்லாம் என்னைச் செதுக்கிய எண்ணங்கள்” என்கிற நூலில் விரிவாக எழுதியிருக்கிறீர்கள். விளநகர் கிராமத்திலிருந்து சென்னை மாநகரம் – சென்னையிலிருந்து அயல் நாடுகள் – இந்தப் பயணங்கள் உங்கள் வாழ்க்கைப் பயணத்தின் அடையாளங்கள் இல்லையா?

நிச்சயமாக. ஆரம்பத்தில்கும்பகோணம் கல்லூரியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது சன்னைக்கு வருவதற்கே மிகவும் யோசித்தேன். இது ஜேப்படி நடக்கிற ஊர், வீடு கிடைக்காது. என்றெல்லாம் எண்ணினேன்.

அப்போது, தினமணிக்கு மாதம் ஒரு கதை அனுப்புவேன். வெளியிடுவார்கள். அந்த நாடிக்ளில் அது மிக அரிஆன விஈம். சென்னை வந்தபின்,தினமணி ஆசிரியர் திரு. துமிலனைப் போய் பார்த்தேன். அப்போது அவர் என் கலவிக் தகுதியெல்லாம் பார்த்துவிட்டு, விஞ்ஞானம் எழுதத்தான் ஆளிலை, ஒரு தொடர் கட்டுரை எழுதுங்களேன்” என்றார். எழுதினேன் நல்ல வரவேற்பு இருந்தது..

அப்போதுதான், கிண்டி பொறியியல்கல்லூரியில் பாலிடக்னிக் பிரிவு தொடங்கினார்கள். அங்கே வேலை கொடுத்ததோடு நிறையபொறுப்புகளும் கொடுத்தார்கள்.

பிரபல தொழில் அதிபர்களாக இன்று திகழும் திரு. ஏ.சி. முத்தையா, திரு. ராம்மோகன் போன்றவர்கள் என்னிடம் டியூசன் பயில வந்தார்கள். இந்த நேரத்தில் கல்கியிலும், என் தொடர் வெளிவந்தது. அதுவும் நல்ல வரவேற்பு பெற்றது.

கிராமத்திற்கும் பெருநகரங்களுக்கும் இருக்கிற கலாச்சார இடைவெளியைப் பார்த்து இளைஞரகள் அச்சமோ, தயக்கமோ, கொள்ள வேண்டாம் என்பதற்கு நானே உதாரணம். வரும்போது எல்லாம் புதிதாகத் தெரியும். போகப் போக பழகிவிடும்.

புதிய ஊர்கள், பகுதிகள், பிரதேசங்கள் பற்றிய அச்ச உணர்வை அகற்றுவதற்கான முயற்சி தொடக்கக் கல்வியிலிருந்தே தொடங்க வேடும். சரித்திரப் பாடங்கள் படித்தால் போதாது. அந்த இடங்களுக்கு மாணவர்கள் போய் வருதற்கு வழி வேண்டும்.

நான் கிண்டி பொறியியல் கல்லூரியில் பிபுரிந்போது அப்ளைடு கெமிஆடிரி பாடம் நடத்துவேன். அதில் வாட்டர் டெக்னாலஜி, ஃபூயல் டெக்னாலஜி போன்றவை சொலித் தரப்படும் போது அந்தந்த தொழிற்சாலைகளுக்கு, நேரடியாகவே மாணவர்களை அழைத்துச் செல்வது என் வழக்கம். அதுபோன்ற முயற்சிகள் தான் தேவையில்லாத மிரட்சியையும், அச்சதையும் தடுக்கும். அயல்நாடுகளில், இதற்குத்தான் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

வெளிநாட்டு மாணவர்களை நம் நாட்டிற்கும், நம் நாட்டு மணாவர்களை வெளிநாடுகளுக்கும் பரிவர்த்தனை முறையில் போய்வரச் செய்வது போல, கிராம இளைஞர்களை, நகரங்களுக்கு அனுப்புதும் முக்கியம் என்று கருதுகிறேன்.

நான் முதல் முறையாக அமெரிக்கா போயிருந்தபோது, எந்த வீட்டில் நான்தங்க வேண்டுமோ, அவர்களே வந்து என்னை அழைத்துச்சென்றனர். பெரிய பெரிய விருந்துகளுக்கும், கூட்டிச்செல்வார்கள். பக்கத்திலேயே இருந்து அந்த வாழ்க்கை முறையைப் பழக்கப் பயன்படுத்துவார்கள். இதுபோன்ற ஆதரவு நகரங்களில் வசிப்பவர்களால், கிராம இளைஞர்களுக்கும் காட்டப்பட வேண்டும்.

தமிழில் வருகிற தன்னம்பிக்கை நூல்கள் பல மேற்கத்திய சிந்தனைகளின் தாக்கமே தவிர, அவற்றில் நமது மண்மணம் இல்லை என்ற பொதுவன குற்றச்சாட்டு இருக்கிறதே?

இங்கே பலர் மேற்கத்திய நூல்ளை தொடர்ந்த மொழி பெயர்த்ததால் வந்த வினை இது. நான் அமெரிக்காவில் இருந்தபோது இங்கே “தன்னம்பிக்கை” சார்ந்த நூல்கள் அதிகம் இல்லை. அங்கே நடந்து கொண்டருந்த பல விஷங்களை, இந்தியாவுக்குத் தகுந்த முறையில் எழுதினேன்.

உளவியல் மருத்துவரைப் பார்ப்பதென்பது அப்போது இந்தயாஇல் அவமானகரமான விஈயமாய்,கருதப்பட்டது. அது பைத்தியகார ஆஸ்பத்திரிக்குப் போவது என்று பேசிக் கொண்டிருந்தார்கள். உளவியல் என்பது, தனியான துறை என்பதை நான் எழுதி தெளிவுபடுத்தினேன்.

மேற்கே என்ன நடந்தது என்றால், 10 வருட ஆராய்ச்சிக்குப் பிறகுதான், மனித மனத்தன் தன்மைகளுகு பொது உளவியல் கிடையாது என்பதைக் கண்டுபிடித்தனர். அந்தந்த மனதனின் பழக்கவழக்கங்களைக் கொண்துதான் உளவியல் தன்மைகளை மதிப்பீடு செய்ய முடியும். அப்படிப் பார்கிறபோது இந்தியாவின் தொன்மையான வழிபாட்டு முறைகள், வாழ்க்கை முறைகளை எல்லாமே உளவியல் அடிப்படையில் உருவானவைதான்.

இதெல்லாம் கல்வித் திட்டத்தில் இல்லை. சமாகிருதத்தை எடுத்து விட்டார்கள். தேவாரம், திருவாசகம் போன்றவற்றைப் படித்தாலே உள்மனதின் தன்மைகளை உணர முடியும். அதன் பிறகு மனதின் தன்மைகளை உணர முடியும். அதன் பிறகு நம் மூலமாக யாரோ எழுதுவது போல “தனதுரை எனதுரையாகி” என்கிற நிலை ஏற்படும்.

இந்தியாவின் தொன்மையான வாழ்க்கை முறையிலேயே தன்னம்பிக்கைக்கான கூறுகள் இருப்பதாக சொல்கிறீர்களா?

நிச்சயமாக! எல்லோருக்கும் இலட்சியங்கள் தேவை. இதை பழங்காலத்தில் “சங்கல்பம்” என்று சொன்னார்கள். தலையில் குட்டிக்கொண்டு உறுதி மேற்கொள்ளுதல். இது, மேலை நாடுகளில் கிடையாது. மன உறுதி, மனதை ஒருமுகப்படுத்துதல் போன்றவற்றிற்கு ஏற்பட்ட பழங்கால முறை இது. இதை நம் கல்வி முறையிலிருந்து எடுத்து விட்டார்கள்.

இன்று நடக்கும் தன்னம்பிக்கை பயிற்சி அரங்குகளிலும் இந்த விஷயங்களை கவனிக்கத் தவறிவிட்டார்கள். நான் இது குறித்து நான்கு ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தேன். உள்ளுணர்வு, கற்பனை சக்தி போன்றவற்றை மேம்படுத்துவதற்கான வழிகள் நம் தன்மையான ஆன்மீகத்திலேயே உள்ளன. தியானம் மூச்சுப்பயிற்சி போன்றவை எண்ணங்களில்லாத நிலையை ஏற்படுத்த வல்லவை.

இங்கு, “கற்பு” என்கிற தன்மையில் ஒரு பெண் உறுதியாக இருப்பது “வைராக்கியம்” என்கிற மன உறிதக் கோட்பாட்டின் அடையாளம்.

“மனம்” என்கிற ஒன்றன் கடைசி நிலை வரை கண்டு சொல்கிறார் பதஞ்சலி முனிவர். இந்த ஆழத்தில் யாரும் சொன்னதில்லை. சித்தர்கின் நெறியை வெறும் சித்த மருத்தவம் என்றுதான் பெரும்பாலனவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், எது நல்லது எது கெட்டது என்கிற தெளிவை நமகுக்குள்ளேயே ஏற்படுத்தும் சித்தர்நெறிதான் தன்னம்பிக்கை நெறி.

எனவே, தன்னம்பிக் சிந்தனைகளை, நம் மண்ணுக்குரிய மேன்மைகளை மறந்துவிட்டு மேற்கத்திய தாக்கத்திலேயே வளர்த்துக் கொண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை.

நல்லாட்சி நடக்க வேண்டுமேயானால் நிலையற்ற அரசுதான் தேவை என்று சில ஆண்டுகளுக்கு முன் சொல்லியிருந்தீர்கள். இது குறித்து தன்னம்பிக்கை இதழில் கூட வாசகர் விவாதம் ஒன்று நடைபெற்றது. கொஞ்ச காலமாக நிலையில்லாத ஆட்சிதான் இந்தியாவில். இன்னும் உங்கள் கருத்தில் உறுதியாக இருக்கிறீர்களா?

ஒரு மோசமான நிலை தொடர்கிற போதுதான் லட்சியம் பற்றிய விழிப்புணர்வு எல்லருக்கும் ஏற்படும்.மாறி மாறி இரண்டு பேர் மட்டும் அதிகாரத்திற்கு வந்து திருடிக் கொண்டேயிருந்தால் அந்த நாடு வளராது. ஆட்சி நிலையற்றதாக இருக்கும் போதுதான் நல்லவர்களை அழைக்க முடியும்.

மக்கள் பங்கேற்கத மக்களாட்சியால் எந்தப் பயனும் இல்லை. பலரும் பங்கேற்கும்போதுதான் ஒரு விதத்தில் தெளிவு ஏற்படும். அமெரிகாவில் இதைத்தான் முதன் முதலாக “Brainstorming Session” என்று அழைத்தார்கள். நெருக்கடி, குழப்பம் நிலவும் போதுதான் ஆட்சி ரீதியில் அச்சம் இருக்கும். ஊழல் குறையும். ப்ரான்ஸ் நாட்டில் இதுதான் நடந்தது.

தன்னம்பிக்கை நூல்களால் ஊக்கம் பெற்று உந்தப்பட்டு பலர் தொழில் தொடங்குகிறார்கள். கால நடையில் தாக்குப் பிடிக்க முடியாமல் திணறுகிறார்கள். இது ஏன்?

நீங்கள் சொல்வது உண்மைதான். பலர் தன்னம்பிக்கை நூல்கள் பொறியியல் கல்லூரிகளில் பாடமாக வைக்கச்சொல்வார்கள். ஏனென்றால், கலைக்கல்லூரிகளில் படித்துவிட்டு தொழில் தொடங்குவது சிரமம் என்று சிலர் ஒரு உற்சாகத்தில் தங்களத் தகுதிப்படுத்திக் கொள்ளாமல் தொழில்தொடங்கி விடுவார்கள். பிறகு திணறுவார்கள்.

தொழில் தொடங்குவதுதென்பது உங்கள் எல்லா திறமைகளையும் வெளிக்கொணர ஒரு வாய்ப்பு. அதற்கு அனுபவம் வேண்டும். படிப்பறிவு போலவே பட்டறிவும் முக்கியம். ஒரு நிறுவனத்தில் குறைந்தது இரண்டு வருடங்கள் என்கிற அளவில் ஐந்தாறு வருடங்களில் மூன்று நிறுவனங்களிலாவது வேலை பார்த்தால் நல்ல அனுபவம் கிடைக்கும். எல்லாவற்றையும்விட கீழ்படிய கற்றுக்கொள்ள முடியும்.

என்னிடம் ஒருவர் வந்து உணவகம் தொடங்கியதாகவும், சரிவராமல், மூடிவிட்டதாகும் சொன்னார். “முன் அனுபவம் உண்டா?” என்று கேட்டேன். தன் மனைவியின் சமையல் நன்றாயிருக்கும் என்பதால் தொடங்கியதாகச் சொன்னார். நான் அரிடம் “உங்கள் மனைவயின் சமையல் உங்களுக்குப் பிடித்திருக்கலாம். அது ஊருக்கே பிடித்திருக்க வேண்டிய அவசியமென்ன” என்றேன். இப்படித்தான் பலர் அவசரப்பட்டு தொழில் தொடங்கி சிரமப்படுகிறார்கள்.

இதையெல்லாம் பார்த்துதான் “சிந்தனை தொழில் செல்வம்” என்ற நூலை எழுதினேன். கோவையில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சிவராஜ் என்பவர் “எம்.எஸ். உதயமூர்த்தி தொழிற்பேட்டை” என்ற ஒன்றைத் தொடங்கினார். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அதனை இரு மடங்காக விரிவுபடுத்தினார்.

எனவே, பட்டறிவு, படிப்பறிவு, எதிர்பாராத சிக்கல்களை எதிர்கொள்ளும் ஆற்றல், சீரான நிதிநிர்வாகம் இவையெல்லாம் இருந்தால்தான் தொழிலில் வெற்றி பெற முடியும்.

அயல் நாட்டில் விழுந்து கொண்டிருந்த ஒரு நிறுவனத்தை நிமிர்ந்து நிற்கவைக்கும் பணியில் நான் ஈடுபட்டேன். நன்கு வளரவேண்டிய பல நிறுவனங்கள் கண்ணெதிரே வீழ்ச்சியடைவதையும் பார்த்திருக்கிறேன். தொழில் தொடங்க தன்னம்பிக்கை அவசியம்தான். ஆனால் அது மட்டுமே போதுமானதில்லை.

(இளைஞர்களின் நேர விரயம், மக்கள் சக்தி இயக்கத்தின் இன்றைய நிலை, சில தொழிலதிபர்களின் மனப்போக்கு, இந்திய இளைஞர்களின் எதிர்காலம் இவை குறித்தெல்லாம் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி அவர்களின் பேட்டி அடுத்த இதழிலும் தொடர்கிறது.)

 

2 Comments

 1. வாழ்கையில் முன்னேற விரும்பும் ஒவ்வொரு தமிழரும் படிக்கவேண்டிய அற்புதமான தகவல்கள். இன்னும் பல நூற்றாண்டு கடக்க வாழ்த்துக்கள்..

  மஸாகி
  01092009

 2. Siddharkadu dhinakar says:

  Aatchiyaalarkalum makkalum sinthikka vaendiya uyarntha vishayankal.

  we are very grateful to “Thannambikkai” team for providing this information free of cost in the internet.

  More marketing should be done in all districts of Tamil Nadu by youths themselves through word of mouth publicity to grow thannambikkai magazine as the best magazine in Tamil

  thank you

Post a Comment


 

 


October 2001

வணக்கம் தலைவரே
முயற்சிதான் மந்திரம் உழைப்புதான் தந்திரம்
நம்பிக்கையும் நானும்
மனித நேயத்திற்கு மகுடங்கள்!
எழுக! வெல்க!
நிறுவனர் பக்கம்
துணிவோடிரு!
உறவுகள்….. உணர்வுகள்….
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கைமிக்க தமிழ் இளைஞர்கள்
சுய முன்னேற்றம்??
பெற்றோர் பக்கம்…
பொதுவாச்சொல்றேன்
வெற்றியின் மனமே
கேள்வி பதில்
வருதத்தின் பிடியில் வல்லரசு
மனித சக்தி மகத்தான சக்தி
உள்ளத்தோடு உள்ளம்