Home » Articles » மனித நேயத்திற்கு மகுடங்கள்!

 
மனித நேயத்திற்கு மகுடங்கள்!


admin
Author:

ஈரோடு ஜூனியர் சேம்பரின் எழுச்சி விழா!

அந்த ஏழை விவசாயி எப்போதும் போல வீட்டில் இருந்தார். அவர் பெயர் அய்யாசாமி. அப்பிச்சிப்பாளையம் கிராம்ம் அவருக்கு. பக்கத்து வீட்டு ரேடியோவில் யாரோ ஒருவர் மரங்களின் பயன்கள் பற்ற இபேசிக் கொண்டிருந்தார். நாமும் மக்கள் நலனுக்காக மரம் வளர்த்தால் என்ன? என்று இந்த மனிதருக்குத் தோன்றியது. உடனே, மரம் நடத்தொடங்கினார். நான்கே வருடங்களில் 3000க்கு அதிகமான மரங்களை நட்டார். அத்தனை மரங்களும் அவருக்குப் பிள்ளைகள்போல. இந்த எளிய மனிதர் பலத்த கரவொலிக்கு நடுவில் மேடைக்கு அழைக்கப்பட்டார். ஈரோடு ஜூனியர் சேம்பரின் தன்னிகரற்ற சமூகப் sபணியாளர் விருதை பெறுவதற்காக!

டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தியின் கரங்களால், அந்த விருதைப்பெற திரு அய்யாசாமி மேடைக்கு வந்தபோது சபைக் கூச்சத்தால் அவரது உடல் நடங்கிக்கொண்டிருந்தது. அதுகூட ஒரு மரம் காற்றில் அசைவது மாதிரியே இருந்தது.

தொழிலில் மட்டுமன்றி, அறப்பணிகளிலும் சிறந்து விளங்குபவர்களுகு தரப்படும் கமல் பத்ரா விருது, சக்திமசாலா நிறவன்களின் இயக்குநர் திருமதி. சாந்தி துரைசாமிக்கு தரப்பட்டது. தன் வெற்றிகளுக்கு தன்னுடைய கணவரே காரணம் என்று கூறியவர் கணவரையும் மேடைக்கு வரச்சொல்லி பிறகுதான் விருதைப் பெற்றுக்கொண்டார்.

தன்னிகரற்ற இளைஞருகுக்கான விருது பெற்ற எஸ்.கே. எம் நிறுவனங்களின் இயக்கனர் திரு. மயிலானந்தம் அவர்களும் ஜூனியர் சேம்பரின் இதே விருதினை பல்லாண்டுகளுக்க முன்பு பெற்றதை நினைவு கூர்ந்தார். டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி தலைமை விருந்தினராகவும், தன்னம்பிக்கையின் இணை ஆசிரியர் மரபின் மைந்தன் ம. முத்தையா சிறப்புப் பேச்சாளராகவும், ஜேசிஸ் இயக்கத்தின் தேசிய முன்னாள் தலைவர்கள் திரு வல்லபதாஸ், திரு. நாகராஜ் ஆகியோர் வாழ்துரையாளர்கள் ஆகவும் பங்கேற்றனர்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2001

வணக்கம் தலைவரே
முயற்சிதான் மந்திரம் உழைப்புதான் தந்திரம்
நம்பிக்கையும் நானும்
மனித நேயத்திற்கு மகுடங்கள்!
எழுக! வெல்க!
நிறுவனர் பக்கம்
துணிவோடிரு!
உறவுகள்….. உணர்வுகள்….
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கைமிக்க தமிழ் இளைஞர்கள்
சுய முன்னேற்றம்??
பெற்றோர் பக்கம்…
பொதுவாச்சொல்றேன்
வெற்றியின் மனமே
கேள்வி பதில்
வருதத்தின் பிடியில் வல்லரசு
மனித சக்தி மகத்தான சக்தி
உள்ளத்தோடு உள்ளம்