Home » Articles » பெற்றோர் பக்கம்…

 
பெற்றோர் பக்கம்…


admin
Author:

அடங்காப்பிள்ளை!

மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு பேராசிரியர் ஒருவர் பரிசோதனைகளைப் பற்றி விளக்கிக்கொண்டிருந்தார்.

ஒரு கண்ணாடி ஜாடியில் சிறுநீரை வைத்து,

“மாணவர்களே! நீங்கள் ரொம்ப ரொம்ப கவனமாகச் செயல்பட வேண்டும்.

இந்தச் சிறுநீரைப் பாருங்கள்.

அதன் நிறம், வாசனை, அளவு போன்றவற்றை மிகத் தெளிவாக அறிந்திட வேண்டும். அதற்கு அடிப்படையாக நன்கு உன்னிப்பாக கவனிக்கும் மனப்பான்மை வேண்டும்” என்றார்.

இப்படிச்சொல்லிவிட்டு அந்த சிறுநீரில் விரலைவிட்டார்.

பிறகு வாயில் விரலை வைத்தார்.

அடுத்ததாக மாணவர்களிடம் அதே சிறுநீர் ஜாடியை பார்க்குமாறு வரிசையாக அனுப்பி வைத்தார்.

மாணவர்கள் நன்றாக உற்றுப் பார்த்தனர். பேராசிரியர் சிறுநீரில் ஒரு விரலை விட்டு, பிறகு நாக்கில் வைத்து சுவைத்தனர்.

அனைவரும் பார்த்து முடித்த பின்னர், சிறுநீர் ஜாடி பேராசிரியருக்கு வந்து சேர்ந்தது.

பேராசிரியர் சொன்னார்.

“மாணவர்களே உன்னிப்பாக கவனிக்கச் சொன்னேன். ஆனால் நீங்கள் கவனிக்கத் தவறி விட்டீர்கள்.

நான் என் ஆள்காட்டி விரலை சிறுநீர் ஜாடிக்குள் விட்டேன்; ஆனால் நடுவிரலைத் தான் வாயில் வைத்தேன்.

நீங்களோ, எல்லோரும் சிறுநீரில் நனைத்த விரலையே வாயில் வைத்து சுவைத்து விட்டீர்களே! என்றார்.

அதைப்போலவே பெரும்பாலான சமயங்களில் நம் பிள்ளைகளை உன்னிப்பாக கவனித்து வளர்ந்ததாலும் எதனால் அடங்காப் பிள்ளையாக செயல்படுகிறான் என்பதை அறியமுடியாமல் பல பெற்றோர்கள் தடுமாறுகிறார்கள்.

அடங்காப் பிள்ளைகளின் மனநிலைகளை ஆராய்ந்தால் உண்மை தெரியும்.

பிள்ளைகள் ஐந்து வகைகளில் அடங்காதவர்களாகிறார்கள்.

முதலாவது, தாம் இருக்கின்ற சூழ்நிலைகளில் திருப்தியின்மை, வீடு மற்றும் பிற சூழ்நிலைகளை விரும்பாதபோது வித்தியாசமாக செயல்படும் மனநிலை உண்டாகிறது.

இரண்டாவது, உடலில் பாதிப்பு, ஏதாவது சில உடல் பாதிப்பின் விளைவாக அடங்காத செயல்கள் உண்டாகும்.

மூன்றாவது, மனநிலை பாதிப்பு, காலை எழுந்தது முதல் இரவு படுக்கும்ரை அவர்களுடைய மனநிலையல் எண்ணற்ற சிந்தனைகள் உண்டாகன்றன. யாரெல்லாம் சரியான சிந்தனையும் செயலும் இல்லாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு வித்தியாசமான மனநிலை உண்டாகும்.

நான்காவது, மன உறுதியில்லாமை, எளிதில் கோபம், வெறுப்பு, மனதிற்குள் கொந்தளித்தல் போன்ற செயல்பாடுகள் வெளிப்படும்.

ஐந்தாவது, ஆன்மீக நெறிகளில்லாமை, தான் பிறரிடம் எதிர்பார்ப்பதை முதலில் தாமே செய்ய வேண்டும். நான் செயகின்ற நன்மைக்கு நல்லதே அமையும்; தீமக்கும தீயதே அமையும் போன்ற நெறிமுறைகளை உணராதவர்கள் அடங்கப் பிள்ளையாகிவிடுவார்கள்.

பிள்ளைகள் முன்னுக்குப்பின் முரணாக செயல்படும்போது, அதன் காரணங்களை இதன் அடிப்படையில் ஆய்ந்து அதை நிவர்த்தி செய்தால் ஒத்துழைப்பு சரியாக கிட்டிவிடும்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2001

வணக்கம் தலைவரே
முயற்சிதான் மந்திரம் உழைப்புதான் தந்திரம்
நம்பிக்கையும் நானும்
மனித நேயத்திற்கு மகுடங்கள்!
எழுக! வெல்க!
நிறுவனர் பக்கம்
துணிவோடிரு!
உறவுகள்….. உணர்வுகள்….
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கைமிக்க தமிழ் இளைஞர்கள்
சுய முன்னேற்றம்??
பெற்றோர் பக்கம்…
பொதுவாச்சொல்றேன்
வெற்றியின் மனமே
கேள்வி பதில்
வருதத்தின் பிடியில் வல்லரசு
மனித சக்தி மகத்தான சக்தி
உள்ளத்தோடு உள்ளம்