Home » Articles » எழுக! வெல்க!

 
எழுக! வெல்க!


admin
Author:

என் இளைய சமுதாயமே!
சின்ன சின்ன ஆசைகள்
சிதைந்து கண்டு பதறாதே!
சிரகொடிந்தது கண்டு வருந்தாதே!
முயற்சி செய்ய மறுக்காதே!

சுரங்கள் உன் வசப்படாது
சுயமாக நீ தான் தேடவேண்டும்!
சாய ஒரு தோளையோ,
துவள ஒரு மடியையோ
எதிர் பாராதே!
வாழ ஒரு லட்சியத்தை கடைபிடி!

சிறுவயதுதான் உனகு
சிகரங்களைத் தொடலாம்
காலம் இருக்கிறது நிறைய.

சிரசில் கை வைத்து
உட்காரதே!
சிகைக்குள் இருந்து சிந்தனைகளை
வெளிக்கொண்டு வா
நித்தமும் சித்தத்தில்
திடமாக இரு.

சிறுமை கண்டு பயப்படாதே!
புதுமை புரிந்திட மறக்காதே!
எள்ளி நகையாடுமே
இந்தச் சமூகம் என கலங்காதே!
திட்டித் தீர்க்குமா என திணறாதே!

முயற்சி, பயிற்சி, எழுச்சி
இவை உன் தாரக மந்திரமாகட்டும்
தன்னம்பிக்கை இருந்தால்
ஒருநாள் இந்தத் தரணிக்கே
நீ தலைவனாகலாம்!

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2001

வணக்கம் தலைவரே
முயற்சிதான் மந்திரம் உழைப்புதான் தந்திரம்
நம்பிக்கையும் நானும்
மனித நேயத்திற்கு மகுடங்கள்!
எழுக! வெல்க!
நிறுவனர் பக்கம்
துணிவோடிரு!
உறவுகள்….. உணர்வுகள்….
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கைமிக்க தமிழ் இளைஞர்கள்
சுய முன்னேற்றம்??
பெற்றோர் பக்கம்…
பொதுவாச்சொல்றேன்
வெற்றியின் மனமே
கேள்வி பதில்
வருதத்தின் பிடியில் வல்லரசு
மனித சக்தி மகத்தான சக்தி
உள்ளத்தோடு உள்ளம்