Home » Articles » நிறுவனர் பக்கம்

 
நிறுவனர் பக்கம்


கந்தசாமி இல.செ
Author:

வாழ்க்கை நமது குணநலன்களின் பிரதிபலிப்பு

வாழ்க்கை என்பது என்ன?

அது நமக்கும் அப்பாற்பட்டு தனியே இயங்கிக்கொண்டு இருப்பது அல்ல. வாழ்க்கை நம்மோடு நிழல்போல் தொடர்ந்து வருவது, நம்மை விட்டுத் தனத்துப் பிரித்துப் பார்க்க முடியாது.

நமது உருவம் பெரிதாக இருந்தால், அதற்கேற்ற நிழல் விழும். நாம் உயரமாக இருந்தால், அதற்கேற்ற நிழல் விழும். ஆக நம்மோடு என்றும் இணைந்து நடந்து நம்மை வெளிப்படுத்துவது வாழ்க்கை (Life is a Shadow).

நமது நிழலை நமது உருவத்திற்கு அப்பாற்பட்டு சிறிதாக்கவோ பெரிதாக்கவோ இயலாது. நம் உருவத்தின் பிரதிபிப்பாகவே அது இருக்கும் (Life is an echo). இந்த எடுத்துக்காட்டு வெளித்தோற்றத்திற்கு மட்டுமல்ல.

அதேபோல் ஒருவரின் பழக்க வழக்கங்களின் பிரதிபலிப்பே, குணநலன்களின் பாதிப்பே அவருடைய புகழாகவும் இகழாகவும் மதிப்பீடு செய்யப்படுகிறது.

இவர் நல்ல பழக்கவழக்கங்கள் உடையவர்என்பதை அவரது நீண்டகால வாழ்க்கை முறையைப்பார்த்து சொல்கின்றோம். சிலருடைய குணநலன்களைப் பார்த்து – இவர் நல்லவர், இவர் நல்லவர் அல்ல என்று குறிப்பிடுகின்றோம்.

ஆக, ஒவ்வொருவர் வாழ்க்கையும் அவரவர்களின் செயல்பாடுகளின் விளைவாகவே, செயல்பாடுகளின் பயனாகவே இருக்கிறது என்பதை நாம் உணர்ந்துகொண்டால், வளமான வெற்றியான வாழ்க்கையை நாம் அமைத்துக் கொள்ள முடியும்.

நாம் எதைச் செய்கிறோமோ அதற்கேற்ற பலனையே அனுபவிக்கின்றோம் என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

நீங்கள் யாரிடமாவது அன்பாகப் பேசினால் அவர்களும் உங்களிடம் அன்பாகப் பேசுகிறார்கள்.. வெறுப்பாகப் பேசுவதே தமது இயல்பாகக்கொண்டவர்கள் கூட, குறைந்தது நம்மிடமாவது அன்பாகப் பேசுகிறார்கள்.

நீங்கள் வெறுப்பாகப் பேசினால் எதிரில் இருப்பவர்கள் அதற்கு இணையான வெறுப்பை உமிழ்கிறார்கள். நெருப்பு நெருப்பை வளர்க்கும் என்பதுபோல் வெறுப்பு வெறுப்பைத்தான் வளர்க்கும்.

எங்கேயும் அன்பாகப் பேசினால் அன்பு அன்பை வளர்க்கும். வெறுப்பாகப் பேசுகின்றவர்கள் கூட அன்பாகப் பேசத் தொடங்குவார்கள். அன்பு தண்ணீர் போன்றது. வெறுப்பு நெருப்பு போன்றது. தண்ணீர்தான் நெருப்பை அணைக்கும்.

செயலால் பிறர்க்கு உதவி செய்வதை இலட்சியமாக்க் கொண்டா அது நமக்குத்தரும்ப ஏதேனும் ஒரு உருவத்தில், வடிவத்தில் உதவியாக வந்து சேர்ந்துவிடுகின்றது, என்பதையும் நாம் அனுபவத்ததில் காண்கிறோம். அனுபவிக்கின்றோம். நன்மை செய்வதே நமது இலட்சியம். இதுவே நமது தாரக மந்திரமாக அமைய வேண்டும்.

இதில் அடிப்படையாக்த்தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்று உண்டு. நம்மிடம் உதவி பெற்றவர்களே நன்றியாகத் திரும்ப நமக்கு ஏதேனும் செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பதனாலேயே சிக்கல்கள் எழுகின்றன்ன. பிர்க்கு உதும்மனம் கொண்ட நல்லவர்கள் கூட இந்த எதிர்பார்ப்பால் சலித்துக் கொள்கிறார்கள். நன்றி கெட்ட சமுதாயம் என்று குறைபட்டுக்கொள்கிறார்கள்.

உண்மையில் இவர்களும் நல்லவர்கள் அல்ல; இந்தச் சமுதாயம் அப்படி ஒன்றும் கெட்டதுவுமல்ல. இவர்கள் உதவியை வியாபாரம் போல எதிர்பார்த்துச் செய்வதால் விளையும் விளைவு அது.

ஒருவர்க்கு முடியாத நேரத்தில் நம்மால்முடிந்த அளவு உதவுவது கடமை என்பதோடு, பிரதிபலன் எதிர்பாராது செய்து முடித்துவிடுங்கள். உங்களால் முடிந்த அளவு செய்யுங்கள். உங்களை அழித்துக்கொண்டு, துன்புறுத்திக்கொண்டு செய்யாதீர்கள். அவ்வளவுதான் உங்கள் வேலை.

உங்களிடம் உதவி பெற்றவர் நன்றியாகத் திரும்ப உதவினால் நல்லதுதான். ஆனால் இவர் உதவாவிட்டாலும் யாரேனும் ஏன் முன்பின் அறியாதவர்கள் கூட உங்களுக்குத் தேவை நேர்ந்தபோது உதவி செய்வார்கள். காரணம் இது பாவ புண்ணிய கணக்கு அல்ல. நல்லது செய்ததன் விளைவு இதுதான்.

ஒரு புதிய இடத்தில் ஒரு சிக்கலான் சூழ்நிலையில், ஒரு விபத்து நேர்ந்தபோது பலருக்கு எப்படி உதவி கிடைத்தது என்று எண்ணிப்பாருங்கள். உண்மை விளங்கும்.

நீங்கள் எப்போதும் உதவும் எண்ணம் உடையவராக இருந்தால், உங்களைப்பற்றி மற்றவர்கள் பேசிக்கொள்ளும் போதெல்லாம் கடைசியாக ஒரு வார்த்தையில் உங்கள் மதிப்பிட்டு விடுகிறார்கள். அவர் நல்லவர்,என்று கூறி முடிக்கிறார்கள். இந்தச் செய்தி மெல்ல மெல்லப் பரவுகிறது. நம்மை நேரில் பார்த்திராதவர்கள்கூட நம் தன்மையை அறிந்து இருக்கிறார்கள்.

ஏன் உங்களையே எடுத்துக்கொள்ளுங்களேன். ஒருவரைப் பற்றி மற்றொருவரோடு பேசும்போது நீங்கள் எப்படி பேசுகிறீர்கள் என்று இப்போது எண்ணிப்பாருங்கள்.

“அவர் நல்லவர், அவர் நல்லவர் போல் நடிப்பவர், அவர் சுயநலக்காரர், அவர் தாராளமாகப் பொய் பேசுவார். அவர் ஒரு மாதிரி என்று தொடர்ந்து பின்னர் “அவர்” என்ற வார்த்தையிலிருந்து மரியாதை குறைந்து அவனா? அவன் ரொம்பத் திமிர் பிடித்தவாயிற்றே! இப்படிக் கடினமாகச் சொல்லி இருக்கிறீர்களா இல்லையா என்று எண்ணிப்பாருங்கள்.

இவ்வளவிற்கும் அந்த மனிதருக்கும் நமக்கும் நேரடித் தொடர்புகூட இருந்திருக்காது. பிறரிடம அவர் நடந்து கொள்ளும் முறையை செவி வழியாக அறிந்து, நாம் அவரைக் கணித்து வைத்திருக்கிறோம். அதேபோல்தான் நம்மோடு நேரடித்தொடர்பு இல்லாத மற்றவர்கள் கூட நம்மைப் பற்றிய கணிப்பைக் கொண்டுள்ளார்கள்.

இதற்கு அடிப்படையான காரணம் இந்தச் சமுதாயத்தில் நாம்நடந்து கொள்கின்ற நடைமுறைகள்தாம்; நாம் செய்கின்ற செயல்கள் தாம்.

அதனால், நாம் செய்கின்ற நன்மைகள் நமக்கே வந்து சேருகின்றன. நமக்குத் தீமைகள் வந்து சேர்வதற்கும் நாமே காரணமாக அமைகின்றோம் என்பதையும் நாம் பிரிந்து கொண்டு செயல்பட்டால் நீண்டகால வாழ்க்கையில் நாம் பெரும் வெற்றியைப் பெறலாம்.

நம்மால் முடிந்த அளவு நன்மை செய்வதே நமது லட்சியமாக்க்கொள்வோம். காரணம் நாம்கொடுப்பதையே இந்தச் சமுதாயம் நமக்குத் திரும்பக் கொடுக்கிறது.

வாழ்க்கை எதிர் ஒலியைப் போன்றது. நீங்கள் வாழ்க என்று சொன்னால் அந்த எதிரொலி உங்களையே வாழ்த்துகிறது. இந்த உண்மையை உணர்வோம். இந்த உலகம் வாழ உழைப்போம். உலகம் நம்மை வாழவைக்கும்., உயர்நிலைக்கு அழைத்துச்செல்லும். முன்னேற்றத்திற்கு இதுவே வழி.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2001

வணக்கம் தலைவரே
முயற்சிதான் மந்திரம் உழைப்புதான் தந்திரம்
நம்பிக்கையும் நானும்
மனித நேயத்திற்கு மகுடங்கள்!
எழுக! வெல்க!
நிறுவனர் பக்கம்
துணிவோடிரு!
உறவுகள்….. உணர்வுகள்….
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கைமிக்க தமிழ் இளைஞர்கள்
சுய முன்னேற்றம்??
பெற்றோர் பக்கம்…
பொதுவாச்சொல்றேன்
வெற்றியின் மனமே
கேள்வி பதில்
வருதத்தின் பிடியில் வல்லரசு
மனித சக்தி மகத்தான சக்தி
உள்ளத்தோடு உள்ளம்