Home » Cover Story » வருதத்தின் பிடியில் வல்லரசு

 
வருதத்தின் பிடியில் வல்லரசு


கலைக்கண்ணன் க
Author:

அமெரிக்காவிலிருந்து தன்னம்பிக்கை ஆசிரியர் திரு. கலைக்கண்ணன்

பிரார்த்தனையோடும், நாட்டுப்பற்றோடும் ஒரு தேசம் ஒன்று சேர்ந்திருக்கிறது. செப்டம்பர் 11க்குப் பிறகு வாஷிங்கடன்னில் வாழ்வதும், பணிபுரிவதும் எப்படியிருக்கும். இந்தக் கேள்விக்கு விடை இவ்வளவு சீக்கிரம் கிடைக்காது என்றாலும் அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் மெல்ல, மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்புவதோடு, வரும் நாட்களில் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பது பற்றி ஓரளவு அனுமானிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

அமெரிக்கா வரலாற்றில் கறுப்புக் கறை படிந்த அந்த நாளை நேரடியாகப் பார்க்க எனக்கு நேர்ந்தது. செப்டம்பர் 11 அன்று வாஷிங்கடன் DC -யில் இருக்கும் என் அலுவலகத்திற்கு செல்ல நான் தங்கியிருக்கும் அப்பார்ட்மெண்ட்டிலிருந்து, ஒரு மைல் தொலைவில் இருக்கும் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டேன். அலுவலகத்தில் வழக்கமான பணிகள் நடந்து கொண்டிருந்தன.

திடீரென்று காலை 9, 9 1/4 மணிக்கு உலக வர்த்தக்க் கழகமும்,பெண்டகனும் தற்கொலைப்படையினரால் தாக்கப்பட்ட செய்தியில் எங்கும்,பதட்டமும், அதிர்ச்சியும், கலவரும் நிலவியது. உடனே, பெண்டகனிலிருந்து ஒரு மைல் தொலைவில் நாங்கள் தங்கியிருந்ததால் என் மனவியை அழைத்து அவர் பத்தரமாயிருக்கிறாரா என்பதை அறிந்து கொள்ள தொலைபேசியில் அழைத்தேன். நல்ல வேளை நான் தொலைபேசியில் அழைத்து சில நிமிடங்களுக்குள்ளாகவே, எல்லா இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன. தாமதமாக, ஆனால் பத்திரமாக உயிர் திரும்பினேன்.

நானும், என் மனைவியும் பெண்டகன் நோக்கி நடந்தோம். அன்று கண்ட காட்சி என் இதயத்தை விட்டு என்றுமே அகலாது. தங்கள் பிரியமான குடும்பத்தினர்களைத் தேடி அலைகிற மனிதர்கள், தீயணைப்பு வீரர்கள், நெருப்பை அணைக்கப் பாடுபடும் கப்பல் படைவீரர்கள், ஒரே புழுதி, உஷ்ணம் இவற்றிற்கு மத்தியில் உயிர் வாழ்பவர்களை தேடி ஓடும், உள்ளங்கள். இந்த பெரும் அபாயமான நேரத்தில் பல உயிரைக் காப்பாற்ற முயன்று தங்கள் உயிரத் துறந்த தீயணைப்பு வீர்ர்கள். அவர்கள் தான் நிஜமான தியாகிகள்.இவர்களை எல்லாம் எங்கும் காண முடிந்தது. மக்களின் வருத்தத்தை காண சகியாமல் கனத்த இதயத்தோடு வீடு திரும்பினோம்.

செப்டம்பர் 14 -ல் தங்கள் தேசத்து மக்களுக்காக துக்கப்பட்டுக்கொண்டே அமெரிக்கா தன் அன்றாடப் பணிகளுக்குத் திரும்பியது. எல்லோர் இதயத்திலும் இந்த எண்ணம்தான் தோன்றியது. “எதிர்காலத்தில் அபாயமான நேரங்களில் அபத்தம் நிறைந்த இடங்களில் நான் “இருக்கக் கூடும். ஒரு தீவிரவாதியோ, யாரோ ஒரு கோழையோ, ஆயிரக்கண்க்கானவர்களைக் கொன்றதுபோலவே என்னையும் கொல்லக்கூடும். ஆனால் என்னுடைய சுதந்திரத்தை எந்த தீவிரவாதியும் தட்டிப் பறித்துவிடமுடியாது. நான் மறுபடியும் வெளியே விருந்துகளுக்குச் செல்லலாம். இனி உலக வர்த்தகக் கழகத்திலும், பெண்டகனிலும் தாக்கிய நினைவு வராமல் என்னால் விமானத்தில் ஏற முடியாது. ஆனால் எபடியும் விமானத்தில் மறுபடியும் ஏறுவேன். நம்மை அச்சுறுத்துவதற்காக நிகழ்ந்த தாக்குதலில், உயிர் நீத்தவர்களுக்காவது என் வாழ்கையைத் தொடருவேன். நான் அச்சத்திலிருக்கலாம்.. ஆனால் என் வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டும். அதை தாவிரவாதிகளுக்கு என்னால் தந்துவிடமுடியாது. என் வாழ்க்கையை நான் முழுமையாக வாழப்போகிறேன். இது தீவிரவாதிகளுக்குத் தெரிய வேண்டும்” இந்த உணர்வுதான் அமெரிக்கர்களுக்கும் இருக்கிறது.

செப்டம்பர் 16 காலை மணியோசை முழங்கியது. மழை அமெரிக்க பூமியை ஆற்றாமையோடு அணைத்துக்கொண்டிருக்கிறது. முக்கியத்தலைவர்களும், மக்களும் தேசிய கத்தோலிக்க ஆலயத்தில் ஒன்று கூடியிருந்தார்கள். அருட் தந்த பில்லிகிரகாம் ஆயிரக்கணக்கானவர்களுக்குச் சொன்னார். “ஆம்! நம் தேசம் தாக்கப்பட்டிருக்கிறது. இப்போது தான் நம் தேர்வு செய்யவேண்டும். ஒருதேசத்தின்மக்கள் இந்த நேரத்தில் சோகம் தாளாமல் தனித்தனியாக பிரிந்து போய்விடலாமா? அல்லது எதிர்கொள்ள இருக்கும் எல்லாப் போராட்டங்களிலும் ஒன்று கூடி நிற்கலாமா என்பதை இப்போது முடிவு செய்ய வேண்டும் என்றார்.

அந்த நாளைத்தான் அந்தப் பெரும் சோகத்தில் உயிர் நீத்தவர்களுக்கான பிரார்த்தனை மற்றும் நினைவு அஞ்சலிக்காக அதிபர்புஷ் ஒதுக்கியிருந்தார்.

அமெரிக்காவின் சிறு சிறு நகரங்களிலிருந்து பெரும் நகரங்கள் வரையில் எல்லா இடங்களிலும் முதல் முறையாக அந்தத் தாக்குதலுக்கு பிறகு அமெரிக்கர்கள் ஒன்று கூடினார்கள். ஆலயங்கள், மசூதிகள், பூங்காக்கள் பொதுச்சதுக்கங்கள் எல்லா இடத்திலும் மக்கள் ஒன்றுகூடி, அஞ்சலி செலுத்தவும், ஆறுதல் தேடவும் முற்பட்டார்கள். அமைதியான தியானத்தில் அதே நேரம் தேசிய ஆவேசத்தில், கூடி அமைச்சர்கள் உரையைக் கேட்டு மெழுகுவர்த்திகள் ஏற்றி, கொடிகளை அசைத்து அன்னியர்களையும் அரவணைத்து உணர்வுகளை பகிர்ந்து கொண்டார்கள்.

அப்போது நாங்கள் பென்டகன் வழியாக நடந்து கொண்டிருந்தோம். கப்பல் படை வீர்ர்களை நோக்கி ஆயிரக்கணக்கில்மகள்கொடிகளை அசைத்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் அந்த தேசத்தின் குடிமக்களாக இல்லாபோதும் அமெரிக்கர்கள் வந்து எங்களுக்கு மெழுகுவர்த்திகள் தந்து, கொடிகளையும் கொடுத்து, அவர்களில் ஒருவராக எங்களையும் கருதி, அந்த அஞ்சலியில் பங்கேற்கச் செய்தார்கள். அப்போது என் மனதில் நிழலாடியதெல்லாம், என் தாய் மண்ணைப் பற்றிய நினைவுகள்தான். எப்போது என் தேசம் ஜாதி, மத பேதங்களால் சண்டையிட்டுக் கொள்ளாமல் ஒன்று சேர்ந்து தீமையை எதிர்த்துப் போராடும் என்கிற ஏக்கம், எனக்குள் எழுந்தது. ஒன்று சேர்வது என்கிற சக்தியை என் தேசம் எப்போது உணரும் என்கிற ஏக்கம் எனக்குள் படர்ந்தது. தீவிரவாதிகளை தோற்கடிக்கவும், புதிய தேசத்தை புணர வைக்கவும், நம் அன்பான வாழ்த்துக்களை அமெரிக்கர்களுக்குச் சொல்லுவோம்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2001

வணக்கம் தலைவரே
முயற்சிதான் மந்திரம் உழைப்புதான் தந்திரம்
நம்பிக்கையும் நானும்
மனித நேயத்திற்கு மகுடங்கள்!
எழுக! வெல்க!
நிறுவனர் பக்கம்
துணிவோடிரு!
உறவுகள்….. உணர்வுகள்….
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கைமிக்க தமிழ் இளைஞர்கள்
சுய முன்னேற்றம்??
பெற்றோர் பக்கம்…
பொதுவாச்சொல்றேன்
வெற்றியின் மனமே
கேள்வி பதில்
வருதத்தின் பிடியில் வல்லரசு
மனித சக்தி மகத்தான சக்தி
உள்ளத்தோடு உள்ளம்