Home » Articles » மனித சக்தி மகத்தான சக்தி

 
மனித சக்தி மகத்தான சக்தி


ஜக்கி வாசுதேவ்
Author:

சக்தி என்கிற சொல் மனித ஆற்றலைக் குறிக்கிறது. பொருள் தன்மை சார்ந்து பார்க்கிறபோது அதுசெயலாக வெளிப்படுகிறது. அது மட்டுமே சக்தி அல்ல.

உள்நிலையில் மனிதனுக்கென்று ஒரு சக்தி நிலை உள்ளது. அந்த சக்தி நிலையை மேம்படுத்துவதற்கென்று தான், யோக, தியானம் என்ற ஆன்ம பயிற்சிகள் உள்ளன. ஆனால், யோகா மற்றும் தியானத்தின் மூல நோக்கமே இந்த சக்தியை மேம்படுத்துவதல்ல. அது ஒரு பக்க விளைவு.

தன் மூலத்தை மனிதன் உணர்வதற்காகத்தான் யோகா, தியானம் போன்றவை. இதில் இரண்டு கேள்விகளை பலர் எழுப்புகிறார்கள். ஒன்று, ஆன்மீக நிலையிபல பயிற்சிகள் மேற்கொண்டு சக்தி நிலையை உயர்த்த முற்படுவது செயல்கள் மூலம் வெளிப்பட வேண்டுமா?

இன்னொன்று, இன்றைய அறிவியல் உலகில், அதிகார வேட்டை போன்றவை நிறைந்திருக்கிற உலகில், வாழ்க்கையிலிருந்து மனிதனை விலகிப் போகிற மனநிலையை ஆன்மீகம் ஏற்படுத்துமா?

முதலில், சக்திநலை மேம்பாடு செயலாக வெளிப்படுமா என்கிற கேள்வியைப்பார்க்கலாம். ஆன்மீகப் பயிற்சிகளை அடிப்படையில் உள்நிலை அறிவியலாக நீங்கள் அணுக வேண்டும். இன்று புற நிலை அறிவியலுக்குத் தரப்படுகிற முக்கியத்துவம் அதிகமாக இருக்கிறது. ஆனால் புறநிலை அறிவியலுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுகிற சமூகத்தில் பொருளாதாரம் மேம்படுகிறதே தவிர வாழ்க்கை அவ்வளவு சுலபமாயில்லை.

மனிதர்களின் சுவாசக் காற்றில் கூட விஷத்தைக் கலக்கும் அளவிற்கு, வெளிநிலை அறிவியல் வளர்ச்சி எல்லைத் தாண்டி போய் விட்டது. எனவே, மனிதன் உள்நிலையில் கொண்டு வருகிற வளர்ச்சி இந்த சமூகத்திற்கு செயல்களாக வெளிப்பட வேண்டும் என்று கருதுகிறார்கள்.

தனக்கு எது கிடைத்தாலும் அதனை வெளிப்படுத்துவது என்கிற மனநிலை, தன்னை மையப்படுத்திக் கொள்கிற ஒரு அகங்காரத்தின் வெளிப்பாடே தவிர அது ஆன்மீகம் அல்ல. குறிப்பாக, ஆன்மீகப் பாதையில் உண்மையாகவே நடையிடுகிற ஆர்வமுள்ளவர்கள் தங்கள் சக்தி நிலை உயர உயர சில சக்திகள் கைவரப்பெறுவார்கள். ஒன்று, ஆன்மீகப் பயணத்தின் பாதையிலேயே இது வரலாம். அல்லது சில நல்ல இடங்களில் ஆன்மகப் பயிற்சியை மேற்கொண்டு பாதியில் கைவிடப்பட்டவருக்கும் இது அரைகுறையக் கிடைக்கலாம்.

உடனே, தங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த அரைகுறை நிலைகளை வைத்துக்கொண்டு, அவற்றைப் பெரிதாக விளம்பரம் செய்ய முற்படுகிறார்கள்.

ஒரு மனிதன் சக்தி நிலையை மேம்படுத்துவது என்பது தன்னைத்தானே மேம்படுத்துவதற்குத் தானே தவிர, இன்னொரு மனிதரின் எதிர்காலத்தை கணித்துச் செல்வதற்கோ, அவர்களுக்கு ஆலோசனைகள் சொல்வதற்கோ அல்ல.

எல்லைகள் கடந்த ஒரு விடுதலை நோக்கித் தான் ஆத்ம சாதனைகள் தொடங்குகின்றன. சிறிது உள்ளுணர்வு மேம்பட்டவுடனேயே மற்றவர்களிடம் சென்று, திருமணத்திற்கு நாள் குறிப்பது, “இங்கே தண்ணீர் இருக்கிறது தோண்டுங்கள்” என்று சொல்வது என்றெல்லாம் சிலபேர் செய்தார்கள்.

ஆன்மீகப் பயிற்சி பெறுபவர்கள் இத்தகைய சித்திகளைப்பெற நேர்ந்தால் அவற்றை உள்நிலை நோக்கி திருப்பி விட வேண்டும். தங்கள் சக்தி நிலையை ஒரு கண்காட்சிபொருளாக மக்கள் மாற்றுவதில் பயனில்லை. மற்றவர்களால் செய்ய முடியாததை செய்து காட்டுவதற்கு ஆன்மீகம் தேவை இல்லை.

இது பல வகைகளிலும் மனிதர்களை சிறைப்படுத்திவிடும். இந்தியாவில் கூட கோயிலுக்குப் போகிற வழியெங்கும் கடைகள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அந்த கடைகளில் ஈர்கப்பட்டால் கடைசியில் கோயிலுக்குள் போக நேரமிருக்காது. இதுவும் இப்படித்தான்.

உள்நிலையிலிருக்கிற இறைத்தன்மையை உணர்வதற்காகச் செல்கிற வழியில் சிலர் வணிக மனப்பான்மையோடு தங்கள் சக்தி நிலைகளை வீணடிக்கத் தொடங்கினால் அவர்களால் தங்களை உணர முடியாது. எனவே, ஏராளமான செயல்கள் மூலமோ,சித்து வேலைகள் மூலமோ தங்களை வெளிக் காட்டிக் கொள்கிற, பணியை ஆன்மீகப் பாதையில் நடையிடுபவர்கள் பெரும்பாலும் செய்வதில்லை.

வாழ்க்கையை வெறும் பொருள் தன்மை சார்ந்து உணர்ந்து வைத்திருப்பவர்கள் தான் ஒரு மனிதனை உடல் நோயிலிருந்தோ,பொருளாதரத் தொல்லையிலிருந்து விடுவிப்பது தான் மிகப் பெரிய சாதனை என்று கருதுவார்கள். பொருள் தன்மை சார்ந்த கண்ணோட்டத்திலிருந்து விடுபட்டு உள்நோக்கி வளர்வதற்கு பெயர்தான் விடுதலை என்பது.

அதேபோல, இன்று அதிகாரபலம் அதிகம் இருக்கிற சூழ்நிலையில், யோகம், தியானம் போன்றவை எந்த அளவிற்கு உதவும் என்ற கேள்வியும் எழுந்திருக்கறது. வெளிச் சூலி பொருளாதர பலமும், அதிகார லமும் வளர்ந்திருக்கிறது என்பது உண்மையானால் எப்போதும் இருந்ததை விட இப்போதுதான் ஆன்மீகத்திற்கான அவசியம் ஏற்பட்டிருக்கிறது. பணம், பதவி, அதிகாரம், போக வாழ்க்கை போன்றவற்றை எல்லாம் மனிதன் ஏன் தேடிப் போகிறான், என்றால் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்று அடிப்படையில் அவனுக்குள் ஒரு வேட்கையிருக்கிறது. அதற்கென்று பலவிதமான முயற்சிகளை மனிதன் மேற்கொள்கிறான்.

உலக இன்பங்களையே ஆனந்தம்ன்று ஒரு எல்லைவரைக் கருதிக்கொண்டிருக்கிறான்.சிலருக்கு பணம் சேர்ப்பது இன்பம். சிலருக்கு பெரிய அதிகாரத்தை அனுபவிப்பது இன்பம். சிலருகு களியாட்டங்களில் ஈடுபடுவது இன்பம். ஒரு எல்லைவரை இதை ஆனந்தம் என்று மனிதன் தவறாகப் புரிந்துகொள்வான். ஆனால் அது ஆனந்தம் இல்லை என்பது காலம் கடந்து புரிகறபோது வருத்தத்தில் ஆழ்ந்து வடுகிறான்.

எப்போது நிறைய அதிகாரமும்,பொருளாதாரமும் மனினிடம் இருகிறதோ அப்போது அற்வற்றை உரிய முறையில்கையாளுகிற முதிர்ச்சியை அவனுக்குத்தரவேண்டம். அத்தகைய மதிர்ச்சியைத் தருபவைதான் யோகா, தியானம் போன்றவை. அதனால்தான் சொன்னேன் உள்ளபடியே அதிகாரமான சூல் இருக்குமானால், அந்த சமூகத்தில் தான் ஆன்மீகத் தேடலுக்கான அவசியம் அதிகரிக்கிறது என்று.

அதிகாரங்களை மன முதிர்ச்சியோடு கையாளத் தெரியாத மனிதர்கள் தாங்களும் துன்பமடைந்து மற்றவர்களையும், துன்பத்திற்கு ஆளாக்குவார்கள்.

சமூகம் சார்ந்த பொறுப்புணர்வை தியானம் ஏற்படுத்துகிறது. செயல்களைக் கடந்து கண்மூடி அமைதியாக இருப்பதென்பது சோம்பேறித் தனத்தினால் அல்ல. அது அளவுகடந்த பொறுப்புணர்ச்சியின் அடையாளம்.

மற்றவர்கள் மேல், ஆதிக்கம் செலுத்துகிற சூழ்நிலையில் இருப்பவர்கள் மிக நிச்சயமாக தங்கள் உள் நிலையை சம்ச்சீராக வைத்துக் கொள்வது அவசியம். அதிகார போதையின் உச்சத்தில் இருந்த ஒரு மனிதரை நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

முசோலினி பெரிய சர்வாதிகாரி. அவரது ஆட்சியில் ஒரு காரியம் செய்தார் அதனை சாதனை என்று அவர் கருதினார். இத்தாலயில் அப்போது ரயில்களெல்லாம் தாமதமாக வந்து கொண்டிருந்தன. இது முசோலினிக்குப் பிடிக்கவில்லை. எனவே, சில என்ஜின் ஓட்டுநர்களைப் பிடித்து சுட்டுக் கொன்று “தாமதமாக ரயில்கள் வந்தால் உங்களுக்கு இதுதான் கதி” என்று எச்சரிக்கை விடுத்தார். முசோலினி. அன்று தொடங்கி இத்தாலியில் ரயில்கள் சரியான நேரத்திற்கு ஓடத் தொடங்கின.

இது மாதிரியான சம்பவம் அதுவரை வரலாற்றில் நிகழ்ந்ததேயில்லை. ஆனால், அன்று அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டது. இதை ஒரு பெரிய சாதனை என்று நம்பி, முசோலினி ஏகத்திற்கு மகிழ்ச்சியடைந்தார். அந்த சாதனையைக் கொண்டாடும் விதமாக, தன் உருவத்தை ஒரு அஞ்சல் தலையாக வெளியிட முடிவு செய்தார். இத்தாலியில் ரயில்கள் சரியான நேரத்திற்கு ஓடுவதையொட்டி முசோலியின் உருவத்தோடு ஒரு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

இந்த அஞ்சல் தலையை வெளியிட்டு கொஞ்சகாலம் கழிந்தது. இதில் ஒரு சிக்கல் இருப்பதை எல்லோரும் உணரத் தொடங்கினார்கள். எப்போதெல்லாம் இந்த அஞ்சல் தலை ஒட்டப்படுகிறதோ, அப்போதெல்லாம் சீக்கிரம் அந்த அஞ்சல் தலைகள் உறையிலிருந்து விழுந்து விடுவதை, கவனிக்கத் தொடங்கினார்கள்.

அஞ்சல் துறையின் கவனத்திற்கு சென்ற இந்த சிக்கல், முசோலியின் கவனத்திற்கும் கொண்டு போகப்பட்டது. இதற்கு மத்தியில் ஏன் இவ்வாறு நிகழ்கிறது என்று, தகவல் துறையினர் ஒரு ஆய்வு செய்தனர். அதற்குள் கோபமடைந்த முசோலினி அஞ்சலக அலுவலர்களை அழைத்தான். “ஏன் சரியான பசைகளை நீங்கள் பயன்படுத்துவதில்லை. அஞ்சல் தலைகள் உதிர்ந்து தபால்காரரின் பைக்குள் நிறைய அஞ்சல் தலைகள் விழுந்து விடுகிறதாமே ஏன் இப்படி?” என்று கடிந்து கொண்டான்.

அந்தத் தலைமை தபால், அதிகாரி மிகுந்த அச்சத்தோடும், தயக்கத்தோடும் முசோலினியிடம், “ஐயா, இருப்பதிலேயே தலைசிறந்த தரத்தில் தான் பசைகளை நாம் அஞ்சல் நிலையங்களில் பயன்படுத்துகிறோம். ஆனால் அஞ்சல் நிலையங்களில் வந்து இந்த அஞ்சல் தலையை வாங்கி ஒட்டுகிற பெரும்பாலானவ்கள், பசையைப் பயன்படுத்துவதில்லை. அதன் பின் புறத்தில் எச்சில் தடவித்தான் ஒட்ட விரும்புகிறார்கள். அதனால்தான் இந்த அஞ்சல் தலைகள் மட்டும் தபாலில் தங்குவதில்லை. உதிர்ந்து விடுகின்றன” என்று சொன்னாராம்.

தன்னைத் தானே வியந்து பாராட்டி அஞ்சல் தலை வெளியிடுமளவுக்கு முசோலியின் அதிகார போதை அவனை ஆட்டுவித்தது. ஆனால் அந்த சமுதாயமோ அவனை ஆட்டுவித்தது. ஆனால் அந்த சமுதாயமோ அந்த அஞ்சல் தலையில் எச்சில் துப்பி அவனை அவமானப் படுத்தத்தான் ஆசைகொண்டது. அதிகார வசதி கையிலிருக்கும் போது உள் நிலை சமச்சீராக இல்லாத மனிதர்கள், தீவிரவாதிகளாக மாறுகிறார்கள். எனவே, உள்நிலை அறிவியலாகக் கண்ட, தியானம், யோகா இன்றுதான் அதிகம் தேவைப்படுகிறது..

தொடரும்….


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2001

வணக்கம் தலைவரே
முயற்சிதான் மந்திரம் உழைப்புதான் தந்திரம்
நம்பிக்கையும் நானும்
மனித நேயத்திற்கு மகுடங்கள்!
எழுக! வெல்க!
நிறுவனர் பக்கம்
துணிவோடிரு!
உறவுகள்….. உணர்வுகள்….
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கைமிக்க தமிழ் இளைஞர்கள்
சுய முன்னேற்றம்??
பெற்றோர் பக்கம்…
பொதுவாச்சொல்றேன்
வெற்றியின் மனமே
கேள்வி பதில்
வருதத்தின் பிடியில் வல்லரசு
மனித சக்தி மகத்தான சக்தி
உள்ளத்தோடு உள்ளம்