Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

அமெரிக்காவில் நடந்த தாக்குதலின் அதிர்ச்சி பூமி முழுவதும் பரவியிருக்கிறது. வல்லரசின் வலிக்காகக் கண்ணீர் வடிக்கிறது உலகம். தாக்கப்பட்ட கட்டடங்களில் வேலைக்கு வந்த அப்பாவிகள், விமானம் ஏறிய பயணிகள், விமானத்திலேயே கொல்லப்பட்ட விமானிகள், அனைவரின் உயிரும் தீவிரவாத்தின் தாகத்தைத் தணிப்பதற்கா?

அறவின் யுகமென்று இதயம் மகிழ்ந்து சொல்லும் இருப்பதோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மருண்டு நிற்கிறது மனித நேயம்.

இந்த அவலம் தொடர் கதையாகாமல் தடுக்க உலக மானுடம் ஒன்று சேர வேண்டும். உச்சி மாநாடுகள், அமைதிக்கூட்டங்கள் எல்லாம் சடங்குகளாக மாறாமல் சக்திமிக்க அதிர்வுகளைப் பரப்பி இதயங்களை இணைக்க வேண்டும்.

உலகின் மிக மமுக்கிய மையங்களைக் குறி வைத்துக் தாக்கும் அளவு வன்மம் கொண்ட தீவிரவாதிகளை மாற்றும் ஆற்றல் மனித நேயத்திற்கு மட்டுமே உண்டு.

இதனை அகில உலகத்திற்கம் அறிவிக்க, அமைதி நோக்கிய பயணத்தை மேற்கொள்ள, அகிம்சை தேசமாகிய இந்தியாவை விட இன்னொரு தேசத்திற்குத் தகுதியுண்டா என்ன?

அன்னை மண்ணே.. அன்பின் அதிர்வுகள் எழுப்பு! அகில உலகிற்கும் பரப்பு. அமெரிக்க காயத்திற்கு மருந்து பூசு. மனித நேயத்தின் மகத்துவம் பேசு. உலக மானுட ஜாதி உருவாக வழி கிடைக்கும்.பாரதி சொன்னது போல், இதை “இந்தியா உலகுக்கு அளிக்கும். ஆம் இந்தியா உலகுக்கு அளிக்கும்”.

நம்பிக்கையுடன்
ஆசிரியர் குழு


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


October 2001

வணக்கம் தலைவரே
முயற்சிதான் மந்திரம் உழைப்புதான் தந்திரம்
நம்பிக்கையும் நானும்
மனித நேயத்திற்கு மகுடங்கள்!
எழுக! வெல்க!
நிறுவனர் பக்கம்
துணிவோடிரு!
உறவுகள்….. உணர்வுகள்….
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கைமிக்க தமிழ் இளைஞர்கள்
சுய முன்னேற்றம்??
பெற்றோர் பக்கம்…
பொதுவாச்சொல்றேன்
வெற்றியின் மனமே
கேள்வி பதில்
வருதத்தின் பிடியில் வல்லரசு
மனித சக்தி மகத்தான சக்தி
உள்ளத்தோடு உள்ளம்