Home » Articles » பொதுவாச் சொல்றேன்

 
பொதுவாச் சொல்றேன்


புருஷோத்தமன்
Author:

செப்டம்பரில் – 5 ஆசிரியர் தினம் வருது. ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எப்போதுமே ஆதர்சமா இருக்கிறவங்கதான். அதுவும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மேலே, குழந்தகளுக்கு இருக்கிற பிரமிப்பு ரொம்பப் பெரிசு.

நான் பொதுவாச் சொல்றேன். ஆசிரியர்கள் இந்த சமூகத்தையும், சமூகம் ஆசிரியர்களையும் பார்க்கிற பார்வையிலே நிறைய மாற்றங்கள் வர்றது நல்லது.

பல வருடங்களுக்கு முன்னாலே, பூனாவைச் சேர்ந்த பேராசிரியர் உத்தம் பாய்தே அப்படீங்கறவர், இந்திய ஆசிரியர்கள் பற்றி ஒரு ஆய்வு செய்திருக்காரு . “Sociology of indian Intellectuals” அப்படீங்ற அந்த ஆய்வு ஆசிரியர்களுக்கு இன்னும் புதுமையான கண்ணோட்டம் வேணும், உலக நடப்புகள் பற்றிய பார்வை வேணும்னு பரிந்துரை செய்யுது.

நான் பொதுவாச் சொல்றேன். அந்த ஆய்வு வந்த பல வருடங்கள் ஆயாச்சு. இன்னைக்கு ஆசிரியர்கள் தரம் கண்டிப்பா உயந்திருக்கு. அறிவான பிள்ளைகள் உருவாகிறதில ஆசிரியர்கள் வகிக்கிற பங்குதான் அதிகம்.

இன்றைய கல்வித் திட்டத்திலே பாடங்களிலே பார்த்தா பெரிய முன்னேற்றம் இருக்கு. அதற்கேற்ப ஆசிரியர்களின் அறிவு வளமும் உயர்ந்திருக்கு. ஆனா, ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையிலே மன இடைவெளி அதிகமாயிருக்குமோன்னு தோணுது.

நான் பொதுவாச் சொல்றேன், பழைய காலத்திலே ஆசிரியர் மாணவர் மனநெருக்கம் இன்னும் ஆரோக்கியமாக இருந்தது. இன்னைக்கு தன்னுடைய வாழ்க்கைகுள்ளே பெற்றோர்களே வரக்கூடாதுன்னு நினைக்கிற இளைஞர்களின் மனப்போக்கு அதிகம். இதிலே ஒரு எல்லைக்கு மேல நாம தலையிட வேணாம்னு ஆசிரியர்கள் ஒதுங்கறதிலே ஆச்சர்யமில்லை.

குந்தை சரியாப் படிக்காதபோது கண்டிக்கிற ஆசிரியர் மேலே பெற்றோர்களே கோப்ப்படதும், தலைமையாசிரியர்கிட்டே புகார் தர்றதும் அடிக்கடி நடக்குது.

‘சிலபஸ்’ முடிச்சா போதும்னு ஆசிரியர்களும் ஒதுங்கிடறாங்க. தங்களுடைய பிள்ளைகள் மேலே ஆசிரியர்களுக்கும் அதிக அக்கறை இருக்கிறதை பெற்றோரும் உணரணும். குழந்தை அடம் பிடிக்கிறபோது டீச்சர்கிட்டே சொல்லுவேன். அப்படீன்னு மிரட்டறதும், டீச்சர் உள்ளபடியே கண்டிக்கற போது டீச்சரையே மிரட்டறதும் சிலபேர் செய்துகிட்டு வர்ற விஷயம்.

வாழ்க்கை என்பது ஒரு பள்ளிக்கூடம், அறிவுப் பெற, அனுபவம்பெற, தன்னை அறிய தன்முழு திறமைகளை வெளிப்படுத்த, தனக்கும் பிறருக்குமாக வாழ ஒரு வாய்ப்பைத் தரும் பயிற்சிக்கூடம் அது.

நான் பொதுவாச் சொல்றேன், வாழ்க்கையிலே நல்ல நிலைக்கு வந்த நிறையபேர், தங்கள் முன்னேறத்துக்குக் காரணமா பெற்றோரைவிட ஆசிரியரைத்தான் சொல்றாங்க.

“சிலபஸ்” முடிக்கறது மட்டும் ஆசிரியர் வேலை இல்லை. சிறந்த குடிமகன்களை உருவாக்கறதும் அவர்கள் கடமைதான். அதுக்கு இடம் குடுக்கிற கல்விச் சூழ்நிலை மறுபடியும் உருவாகறது ரொம்ப முக்கியம்.

ஆசிரியர் பணிக்கு புதிதா வருகிற ஒருசில இளைஞர்கள் இன்னும் பொறுப்பா நடந்துக்கலாம்கிறது சில பெற்றோர்களின் எதிர்பார்ப்பு. எவ்வளவு வாலிப வயசுல ஆசிரியர் பணிக்கு வந்தாலும் அதனுடைய பெருமையை உணர்ந்து நடந்துக்கிறது நல்லதுதானே!

இளைய தலைமுறை மேலே, இன்றும் ஓரளவு ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு ஆசிரியர்களுகுத்தான் அதிகம் இருக்கு. நாளைய இந்தியாவில் நடக்கணும்னு நாம் நினைக்கிறதை எல்லாமே இன்னைக்கு ஆசிரியர்களாலே செய்து முடிக்க முடியும்.

சின்னத்திரை, சினிமா, போதை, பொறுப்பின்மை, குறுக்குவழி நாட்டம் இதிலிருந்தெல்லாம் இளைஞர்களை விடுவிக்க ஆசிரியர்களைத்தான் அரசாங்கம் அதிகம் நம்ப வேண்டியிருக்கு.

பள்ளி கல்லூரிகளிலே பயிராகிற எதிர்கால இந்தியாவ கண்ணுங் கருத்துமா பார்த்துக்கணும்னு கேட்டுகிட்டு ஆசிரியர் தின வாழ்த்துக்களை எல்லா ஆசிரியப் பெருமக்களுக்கும் வாசகர்களோட சேர்ந்து நானும் தெரிவிச்சுக்கிறேன்.

ஆசிரியர்களின் நாளைய பாரதம் கயமைகள் களையக் கல்வியே ஆயுதம்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2001

சிரிப்போம் சிறப்போம்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்
வெற்றிப்பாதை
பெற்றோர் பக்கம்
சிந்தனைத்துளி
டாக்டர் ருத்ரன் பதில்கள்
நிறுவனர் பக்கம்
நம்பிக்கையும் நானும்
வாசகர் கடிதம்
மனித சக்தி மகத்தான சக்தி
உறவுகள் உணர்வுகள்
பொதுவாச் சொல்றேன்
வணக்கம் தலைவரே!
சிந்தனைத்துளி
மனசுவிட்டுப் பேசுங்க….
வெற்றியின் மனமே
உள்ளத்தோடு உள்ளம்