Home » Articles » வணக்கம் தலைவரே!

 
வணக்கம் தலைவரே!


முத்தையா ம
Author:

இன்றைய சூழலில் தலைவர் என்கிற சொல்லின் அழுத்தமும் அடர்த்தியும், எல்லா நிலைகளிலும்மாறி வருகிறது.நிறுனங்கள் இயக்கங்கள் நாடு எல்லாவற்றிலுமே உணர்வு சார்ந்த தலைமைக்குத் தேவையான சூழல் இல்லை. அறிவு சார்ந்த நிர்வாக நுட்பத்தில் தேர்ந்த தனிமனிதர்களே தலைவர்களாகிறார்கள்.

நமது வசதிக்காக, தலைவர்களை நான்கு நிலைகளில் இப்போதைக்குப் பிரித்துக் கொள்வோம்.

1) அரசியல் தலைவர்கள் 2) இயக்கத் தலைவர்கள் 3) நிறுவனத் தலைவர்கள் 4) தொழிற்சங்கத் தலைவர்கள்.

அரசியல் தலைவர்கள்:

இன்று அதிகாரம் – ஆட்சிபீடம் போன்றவற்றை நோக்கி நகர்கிற யாருமே, தாங்கள்தனிப்பெலும் பதலைவர்களில்லை என்பதைத்தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

வெவ்வேறு விதமான கொள்களைகள் கொண்ட தலைவர்கள் உடன்பாட்டிற்கு வந்து, போட்டியிட்டு, வெற்றி பெறுகிறார்கள். இந்த எல்லை தாண்டி இன்று அரசியல் தலைவர்களால் வரமுடிவதில்லை. இதற்கு முக்கியக் காரணம், தனிப்பெரும் தலைமைக்கான சமூகச் சூழலோ, தேவையோ இல்லை.

நெருக்கடியான கால கட்டத்தில் தான் சமூகம் தன்னை வழி நடத்த ஒரு தலைவனைத் தேடுகிறது. சுதந்திரப்போராட்டம்தொடங்கி, மொழிப் போராட்டங்கள் உளிட்ட வெவ்வேறு சூழல்களில் தலைவர்கள் அப்படித்தான் உருவானார்கள்.

தங்கள் வேறுபாடுகளைக் கடந்து பொதுவானதொரு காரணத்தற்காகப் போராட வேண்டிய அவசியம் மக்களுக்கு இல்லை. அறிவியலில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சி, தன்முற்றேற்றச் சிந்தனைகளின் பெருக்கம் போன்வையெல்லாம்,சமூகம் ஒரு தலைவனைச் சார்ந்து வாழத் தேவையில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.

இன்று, ‘நல்ல தலைவர்’ என்றால் ‘தேர்ந்த நிர்வாகி’ என்று தான பொருள். அதைத்தாண்டி, கட்சி பேதமில்லாமல் பொது மக்கள் தங்கள் வீடுகளில் புகைப்படங்களை மாட்டி வைத்துத் தலைவர்களைக் கொண்டாடிய காலம் மலையேறிவிட்டது.

இன்று தலைவர்கள் தேவைப்படுவது தொண்டர்களுக்குத் தானே தவிர மக்களுக்கல்ல.

இயக்கத் தலைவர்கள்:

ஒரு பொதுவான நோக்கம் அல்லது இலட்சியத்தை முன்வைத்து தொடங்கப்படுபவை இயக்கங்கள். உதாரணத்திற்கு அரிமா சங்கம், சுழற்சங்கம் பசுமை இயக்கம் போன்றவற்றை சொல்லாம்.

இவற்றில் இயக்கத்தின் இலட்சியத்திற்கா முழு ஈடுபாட்டுடன் பாடுபடும் தலைவர்கள் நல்ல பெயரெடுக்கிறார்கள். இயக்கம் தாண்டி பொது மக்களின் நம்பிக்கையும் நன் மதிப்பையும் பெறுகிறார்கள். அதிலும் சுழற்சி முறையில் வருகிற தலைமைப் பொறுப்பு காரணமாய் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

ஒருவருக்கொருவர் ஆரோக்கியமாகப் போட்டிக் போட்டுக்கொண்டு செயல்படுவதால் இயக்கம் வலிமையடைகிறது. நாமும் தலைமை நோக்கி முன்னேற வேண்டும், நல்ல பெயரெடுக்க வேண்டும் என்கிற உத்வேகம் உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் உருவாகிறது.

தலைமைப் பொறுப்புக்கு வருபவர்கள் தாண்டிச் செல்ல முடியாத அளவு உறுதியான நெறிமுறைகளும் சட்ட திட்டங்களும் தெளிவான இலட்சியங்களும் உள்ள அமைப்புகள் சிறந்த தலைவர்களை வார்த்தெடுக்கின்றன.

நிறுவனத் தலைவர்கள்:

இது முழுக்க முழுக்க ஒரு நிறுவனத்தில் நிர்வாகம் சார்ந்தது. நிறுவனத்தின் செயல்பாட்டில் சரிவோ பின்னடைவோ ஏற்படும்போது ஒரு புதிய தலைவர் பொறுப்பேற்கிறார். அவரது திறமை, உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு போன்றவற்றால் நிறுவனத்தை சீர் செய்து முன்போல் இயங்க வைக்கிறார்.

இங்கே செயலாற்றலே தலைமைக்கான அளவு கோலாகிறது. மற்றவர்களுடன் கொள்ளும் இணக்கமான உறவு, கனிவும் கண்டிப்பும் சரியான விகித்த்தில் சேர்ந்திருத்தல், விரைவாகவும் தெளிவாகவும் முடிவெடுக்கும் ஆற்றல் போன்றவை நிறுவனத் தலைவர்களுக்கான நல்ல அடையாளங்கள்.

தொழிற்சங்கத் தலைவர்கள்:

உணர்வு சார்ந்த உறவும், நம்பிக்கையும், தலைவருக்கும் தொண்டருக்கும் நடுவில் இன்னும் மீதமிருக்கும் இடங்களில் தொழிற்சங்கங்களும் ஒன்று.

நிர்வாகத்தின் கடுமையான சட்டதிட்டங்கள், தொழிலாளர்களின் நடைமுறை சிக்கல்கள் இரண்டுக்கும் நடுவில் நின்று நியாயத்தை நிலை நாட்டப் போராடும் பொறுப்பு தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் உண்டு.

இரண்டு துருவங்களுக்கு நடுவே சம நிலையில் இருந்து பொறுப்புகளை செயல்படுத்த வேண்டியிருப்பது தொழிற்சங்கத் தலைவர்களுக்கு சவால் விடும் சூழ்நிலைதான். “மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி” என்கிற நிலையை லாவகமாக்கி கையாண்டால் சுகமான நாதம் வெளி வரும் வாய்ப்பு தொழிற்சங்கத் தலைமையிடமும் உண்டு.

இந்த நான்கு நிலைகளிலிருந்தும் நாம் புரிந்து கொள்வதே தலைமைப் பண்பின் பதினெட்டாவது விதியாகிறது.

நெருக்கடியான சூழ்நிலை தலைவர்களை விதைக்கிறது.

நிர்வாகத் திறமை, தலைவர்களை வளர்க்கிறது.

இதில், சூழ்நிலை உருவான பிறகு தலைவர்கள் உருவாகிறார்களா? தலைவர்கள் உருவான பிறகு சூழ்நிலை உருவாகிறதா? என்பது பட்டி மண்டபம் வைக்க வேண்டிய அளவு பலமான விஷயம் தான்.

நெருக்கடியான சூழ்நிலை சமுதாயத்தில் பொதுவாகத்தான் ஏற்படுகிறது. மனதர்களோடு மனிதர்களாக உலவும் தலைவர்கள், தங்களுக்கும் இருக்கும் தலைமைப் பண்பை சரியாக வெளிப்படுத்துகிறார்கள். அப்படியானால் தலைமைக்கான தேவை எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். ஒவ்வொருவரும் தங்களுக்குள் தலைமைப் பண்பை வளர்த்து வைத்திருந்தால் வாய்ப்பு வரும்போது வெளிப்படுத்தலாம். அப்படியானால், தலைமைப் பண்பைத் தளிர்க்க வைக்க என்னென்ன செய்யலாம்…? அடுத்த இதழில்.

(தொடரும்..)


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2001

சிரிப்போம் சிறப்போம்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்
வெற்றிப்பாதை
பெற்றோர் பக்கம்
சிந்தனைத்துளி
டாக்டர் ருத்ரன் பதில்கள்
நிறுவனர் பக்கம்
நம்பிக்கையும் நானும்
வாசகர் கடிதம்
மனித சக்தி மகத்தான சக்தி
உறவுகள் உணர்வுகள்
பொதுவாச் சொல்றேன்
வணக்கம் தலைவரே!
சிந்தனைத்துளி
மனசுவிட்டுப் பேசுங்க….
வெற்றியின் மனமே
உள்ளத்தோடு உள்ளம்