Home » Editorial » உள்ளத்தோடு உள்ளம்

 
உள்ளத்தோடு உள்ளம்


admin
Author:

ஆண்டுக்கு ஆண்டு ‘திருநாள்’ கொண்டாட்டங்கள் தமிழகத்தில் வளர்கின்றன. விடுதலைத் திருநாள், குடியரசுத் திருநாள் போன்றவற்றில் கார்கில் போருக்குப் பிறகு கூடுதல் உற்சாகம் செலுத்துகின்றனர் இந்தியர்கள்.

காதலர் தினம், சகோதரத்துவ தினம், நண்பர்கள் தினம் என்று இவளர்கிற கொண்டாட்டங்கள் அதிகம்.

ஒவ்வொரு விடியலும் கண்டாத்துக்கு உரியதுதான். அன்றைய பிணிகள் பற்றிய தெளிவான திட்டங்ள், சுறுசுறுப்பு, சோர்வில்லாத முயற்சி, வெற்றியில் தன்னை இழந்துவிடாத நிதானம் இத்தனையும் இருக்கும்போது மகிழ்ச்சிக்கு எல்லைதான் ஏது?

வைகறையின் வெளிச்சம் கொண்டாட்டங்களை நம்பிக்கையுடன் தொடங்கி வைக்கிறது. அப்போது நம்மில் பலர் போர்வைக்குள். நிலாவும் நட்சத்திரங்களும், இவை தீபமேற்றிக் கொண்டாடுகின்றன. அப்போதும் நம்மில் பலர் போர்வைக்குள்!

நிறைவாகவும், தெளிவாகவும் நிமிடங்களை நாம் செலவிடும்போது வெற்றிகளை வரவில் வைக்க முடியும்.

அப்படியானால் ஒவ்வொரு நாளும் நம் கொண்டாட்டத்துக்கு உரியது. நமக்கினிமேல், தினம் தினமும், ‘தன்னம்பிக்கை’ தினம்!

வாழ்த்துக்களுடன்
ஆசிரியர் குழு.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2001

சிரிப்போம் சிறப்போம்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்
வெற்றிப்பாதை
பெற்றோர் பக்கம்
சிந்தனைத்துளி
டாக்டர் ருத்ரன் பதில்கள்
நிறுவனர் பக்கம்
நம்பிக்கையும் நானும்
வாசகர் கடிதம்
மனித சக்தி மகத்தான சக்தி
உறவுகள் உணர்வுகள்
பொதுவாச் சொல்றேன்
வணக்கம் தலைவரே!
சிந்தனைத்துளி
மனசுவிட்டுப் பேசுங்க….
வெற்றியின் மனமே
உள்ளத்தோடு உள்ளம்