Home » Articles » பெற்றோர் பக்கம்

 
பெற்றோர் பக்கம்


admin
Author:

எதையும் எதிர்கொள்ளும் மனோபாவம்

சில பிள்ளைகளின் மனப்போக்கைப் பாருங்கள். பாடத்தைப் படிக்கும் போது சிரமமாயிருந்தால், அதை ஒதுக்கி விடுவார்கள். ‘முடியலையே’ என சிலர் அழுவார்கள்.

ஆசிரியர் கண்டிப்பானவராக இருந்தால் அவரை தவிர்த்துக்கொண்டே இருப்பார்கள். சில சமயங்களில் அந்த ஆசிரியரின் வகுப்பையே பெற்றோரிடம் சொல்லி மாற்றிக்கொள்வார்கள்.

புதிய மனிதர்களைச் சந்திக்க நேர்ந்தால் அவர்களைப் பற்றிய விவரத்தைக்கூட அறிய முற்படமாட்டார்கள்.

இப்படி, தம் விருப்பதிற்கு மாறான அல்லது புதிய சூழ்நிலைகளை ஒதுக்கி வாழும் மனிதர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

இப்படியே ஒதுங்கி ஒதுங்கி செயல்படுவோரை, ஒரு சிலர் விரட்டி பயமுறுத்தித் தொடங்கி விடுவர். குறிப்பாக திருமணத்திற்குப் பின் ஏற்படும் புதிய சூழ்நிலைகளுக்கு நம்மை மாற்ற முடியாமல் திணறுவார்கள்.

சில சமயங்களில் உறவினர்களோ, நண்பர்களோ அல்லது முன்பின் அறியத நபரோ கூட இந்த பிளாக் மெயில் வேலையைச் செய்வார்கள்.

அதுபோன்ற சூழ்நிலைகளில் அதைச் சமாளிக்கவோ, அல்லது வெளியில் சொல்லவோ முடியாமல் மனதிற்குள் போராடுவார்கள். மன உளைச்சல் அடைவார்கள்.

சிலர் எதையும் சமாளிக்க முடியாமல் கோழையாகி விடுவார்கள்.

இதற்கு என்ன செய்யலாம்?

சுவாமி விவேகானந்தர் ஒரு முறை காசிக்குச் சென்றார்.

ஓரிடத்தில் குரங்குப் பட்டாளம்.

அவரைப் பல குரங்குகள் துரத்தின.

அவரும் ஓடிக்கொண்டே இருந்தார்.

குரங்குகள் மேலும் மேலும் துரத்தின.

அதைப்பார்த்த காசியைச் சேர்ந்த ஒரு மனிதர் ‘ நீங்கள் பயந்து ஓடிக் கொண்டேயிருந்தால், அந்த குரங்குகள் துரத்திக்கிட்டேதான் இருக்கும். அதை எதிர்த்து நில்லுங்கள்’ என்றார்.

விவேகானந்தரும் குரங்குகளை எதிர்த்து நின்றார். அத்தனையும் திரும்பி ஓடி விட்டன.

இதிலிருந்து ஒரு உண்மையை அறியலாம்.

வாழ்க்கையின் எந்த பிரச்சனையையும் அதை எதிர்கொள்ளும் போதுதான் தீர்க்க முடியும்.

அடுத்ததாக, சவால்களை சமாளிக்கும மனோ தைரியம் அவசியமாக இருக்க வேண்டும்.

இவ்விரண்டையும் வளர்ப்பதில் பெற்றோரின் பங்குமிக முக்கியம்.

அதற்கு எதையெல்லாம் பயத்தினால் ஒதுக்குகிறார்களோ அவைகளை அறிந்து, அதை எதிர்கொள்ளச் செய்வதே சிறந்த மனோபாவத்தை உருவாக்கும்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2001

சிரிப்போம் சிறப்போம்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்
வெற்றிப்பாதை
பெற்றோர் பக்கம்
சிந்தனைத்துளி
டாக்டர் ருத்ரன் பதில்கள்
நிறுவனர் பக்கம்
நம்பிக்கையும் நானும்
வாசகர் கடிதம்
மனித சக்தி மகத்தான சக்தி
உறவுகள் உணர்வுகள்
பொதுவாச் சொல்றேன்
வணக்கம் தலைவரே!
சிந்தனைத்துளி
மனசுவிட்டுப் பேசுங்க….
வெற்றியின் மனமே
உள்ளத்தோடு உள்ளம்