Home » Articles » டாக்டர் ருத்ரன் பதில்கள்

 
டாக்டர் ருத்ரன் பதில்கள்


admin
Author:

(தன்னம்பிக்கை மாத இதழும் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்தும் “விட்டு விடுதலையாவோம்” தொடர் பயிலரங்கில் 27-5-2001 நிகழ்ச்சியில் பங்கேற்ற வாசகர்களின் கேள்விகளுக்கு டாக்டர் ருத்ரன் அளித்த பதில்கள் உங்களுக்காக…)

மனதில் வெளி மனம், உள்மனம், ஆழ்மனம் என்ற பிரிவுகள் உண்டா?

படைப்பாற்றல் (Creatiity) என்பது நாம் பெற்ற அனுபவங்களின் வாயிலாக ஏற்படுகிறதா? அல்லது ஆழ்மனத்தின் வெளிப்பாடா?

மனதில், அம்மாதிரியான பிரிவுகள் உண்டு. இதற்கு இதுதான் பெயர் என்று கூறமுடியாது. ஆனால் மனம் நம் பார்வைக்குப் படாத விஷயம். இது ஒரு அனுபவ பூர்வமான விஷயம் என்பதால் இந்த நிலைகளும் அனுபவ பூர்வமாகத்தான் உணர முடியும்.

படைப்பாற்றல் அனுபவங்களின் மூலம் வெளிப்படுவது அல்ல. என்னைப் பொருத்தவரையில் படைப்பாற்றல் என்பது மரபு வழியாக (ஜூன்கள் மூலம் ) வருவது. அது சிலருக்கு இயற்கையாகவே அமைந்திருக்கிறது. ஆற்றல் என்பது வேறு, படைப்பாற்றல் என்பது வேறு. பயிற்சி, உழைப்பு, முனைப்பு ஆகியவற்றின் மூலம் ஆற்றலை நாம் அற்புதமாக வளர்த்துக் கொள்ள முடியும்.

எல்லோருக்குள்ளும் ஒரு படைபாற்றல் திறன் இருக்கிறது. ஆனால், எல்லோருக்கும் ஒரே மாதிரியான படைப்பாற்றல் திறன் இருக்காது. ஆற்றலை வளர்த்துக் கொள்ள முடியாது. அதனை ஊக்குவிக்க முடியும். படைப்பாற்றலை ஊக்குவிக்க நமது சூழலை நாம் தயார்படுத்த வேண்டும்.

முன்னேற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் கோல் செட்டிங் வைத்துக்கொள்ள ஒரு இமேஜ் செட்டிங் தேவைப்படுகிறது. கோல் செட்டிங் வைத்துக்கொள்ள இமேஜ் செட்டிங் உதவும் என நான் கருதுகிறேன். விளக்கம் தரவும்.

முன்னேற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. என் குடும்பத்தினரும் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களிடம் இது குறித்துப் பேசும்போது கருத்து வேறுபட்டு தோன்றுகிறது. இதற்கு என்ன செய்வது? அவர்களிடம் நாம் நமது எண்ணங்களை எப்படி வெளிப்படுத்துவது?

கோல் செட்டிங் என்பது வேறு. இமேஜ் செட்டிங் என்பது வேறு. இமேஜ் செட்டிங் என்பது மனதிறகுள் நான் இந்த மாதிரி மனிதன் என்று நினைத்து உருவகப்படுத்திக் கொள்வது. கோல் செட்டிங் என்பது இனி இந்த இந்த காரியங்களை முடிப்பது என வரையறை செய்வது.

கோல் செட்டிங்கில் காலவரையரையையும் நிர்ணயித்துக் கொள்ளலாம். என்னுடைய 25 ஆவது வயதிற்குள் நான் இதை முடித்திருக்க வேண்டும். 30 ஆவது வயதில் இதை முடித்திருக்க வேண்டும் என்று. அதற்கு நான் என்னை எப்படியெல்லாம் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். என்னுடைய ஆற்றலை வளர்ப்பது, மக்களுடன் பழகும் நேர்த்தியை வளர்ப்பது போன்றவை இதற்கு உதவும்.

இமேஜ் செட்டிங் நமக்கு நாமே ஒரு வரையறையை ஏற்படுத்திக் கொள்ளும். நாம் பிறருடன் பழக, பிறருடன் ஒத்துப்போக இடையூராகத்தான் இமேஜ் செட்டிங் இருக்கும்.

பெரும்பாலான கருத்து வேறுபாடுகள் விருப்பங்கள் மாறுபடும்பொழுது ஏற்படுகின்றன. கருத்து வேறுபாடுகள் இல்லாத உறவுகள் இருக்காது. அப்படி இருந்தாலும் ஒரு கட்டத்தில் அது வெறுப்பைத் தரும்.

கருத்து வேறுபாடு தோன்றும்போது அதை சரி செய்ய சம்பந்தபட்ட இருவருக்கும் விருப்பம்/ பக்குவம் இருக்க வேண்டும். ஒருவர் மட்டும் அறிவப்பூர்வமாக அணுகிப் பேசினால் அது பலனைத் தராது. நீங்கள் சொலவதைக்கேட்க அவர்களும் தயாராக இருக்க வேண்டும். யாராவது ஒருவர் அறிவுப்பூர்வமாக அணுகி பேச முற்பட்டால் நல்லது ஆனால் அவர்கள நீங்கள் சொல்வதைக் கேட்க தயாராக இல்லாத சூழ்நிலையில் உங்கள் முடிவுகளை அவர்கள் மேல் திணிக்கக்கூடாது.

பலர் முன்னிலையில் ஒரு செயலைச் செய்யும்போது அல்லது பேசும்போது பயம், பதட்டம் ஏற்படுகிறது. இதனைப்போக்க என்ன செய்யலாம்?

பலர் முன்னிலையில் பேசும்போது, பாடும்போது அல்லது ஏதாவது ஒரு செயலைச் செய்யும்போது அதன் மீது நம் கவனம் இருக்கவேண்டும். நாம் எந்த ஒரு செயலைச் செய்தாலும் அது நன்றாக வரவேண்டும் என்றுதான் செய்கிறோம். ஆனால் நன்றாக வரவேண்டும் நன்றாக வரவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே முக்கியமான விஷயமாகிவிட்டால் செயல் சிறப்பாக இருக்காது.

இதுதான் பகவத் கீதையில் சொன்ன அடிப்படை விஷயம். நீ கடமையைச் செய் பலனை எதிர்பராதே என்று. அதாவது நாம் செய்கிற வேலையை ஒழுங்காகச் செய்தால் அதற்குரிய பலன் தானாகவே கிடைக்கும். மாறாக, நாம் செய்யக்கூடிய காரியத்திற்காக பாராட்டு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு செய்யும்போது செயலில் கவனம் குறைந்து பாராட்டுக்களில் மனம் எதிர்பார்ப்போடு ஈடுபடும்போது செயல் சிறப்பாக அமையாது தோல்வி ஏற்படும். இதன் காரணமாகவே பயம் பதட்டம் ஏற்படுகிறது.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2001

சிரிப்போம் சிறப்போம்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்
வெற்றிப்பாதை
பெற்றோர் பக்கம்
சிந்தனைத்துளி
டாக்டர் ருத்ரன் பதில்கள்
நிறுவனர் பக்கம்
நம்பிக்கையும் நானும்
வாசகர் கடிதம்
மனித சக்தி மகத்தான சக்தி
உறவுகள் உணர்வுகள்
பொதுவாச் சொல்றேன்
வணக்கம் தலைவரே!
சிந்தனைத்துளி
மனசுவிட்டுப் பேசுங்க….
வெற்றியின் மனமே
உள்ளத்தோடு உள்ளம்