Home » Articles » வாசகர் கடிதம்

 
வாசகர் கடிதம்


admin
Author:

தன்னம்பிக்கை நாளுக்குநாள் மெருகேறி வருகிறது. வாழ்த்துக்கள். “விட்டு விடுதலையாவோம்” தொடர் “பயிலரங்கம்” எங்களிடம் நல்ல உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தொடரட்டும் உங்கள் பணி

ராஜசேகரன்,
கோவை – 18

ஆகஸ்ட் இதழில் “நான்கு பந்துகளுடன் நம் வாழ்க்கை” வைரமுத்து அவர்களின் வைர வார்த்தைகளில் மனமுருகிப் போனேன். தன்னம்பிக்கை இதழால் நான் மெருகேற்றப்படுகிறேன். எப்படி நன்றி சொல்ல.

ரமணா ராமகிருஷ்ணன்
தொட்டியம்.

“வெற்றியின் மனமே” உயிரோட்டமுள்ள தொடர். “பொதுவாச் சொல்றேன் புருஷோத்தமன்” “மனசுவிட்டுப் பேசுங்க” “சிரிப்போம் சிறப்போம” என அனைத்துப் பகுதிகளும் மிக அருமை. எல்லா ஊர்களிலும் அறிமுக விழா நடத்தி தன்னம்பிக்கையை தமிழகம் முழுவதும் கொண்டு சென்று இளைஞர்களை உற்சாகப்படுத்த வேண்டும்.

எஸ். ராமலிங்கம்.
கோவை.

தன்னம்பிக்கை இதழில் வரும் ஒவ்வொரு செய்திகளும் எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு உற்சாக டானிக்தான். குறிப்பாக “வணக்கம் தலைவரே” வெற்றியின் மனமே” போன்ற தொடர்களைக் குறிப்பிடலாம். மாணவர்களுக்கென்று தனியாக செய்திகளைத் தந்தால் பயனுள்ளதாக இருக்கும்.

தமிழ்பித்தன்,
சேலம்.

இதழில் வரும் ஒவ்வொரு செய்தியும் போற்றிப் பாதுகாக்க வேண்டிய செய்திகள். ஒவ்வொரு இதழைப் படிக்கும்போதும் தன்னம்பிக்கையின் அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. ஜக்கி அவர்களின் தொடர் ஒரு டானிக். “நிறுவனர் பக்கம்” மிக அருமை.

பா. வசந்த்

கோபி.

எங்கள் உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்கும் “உறவுகள்.. உணர்வுகள” தொடர் அப்பப்பா உண்மையிலேயே சூப்பர். சி. ஆர். செலின் அவர்களுக்கு நன்றி. இதழில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. வாழ்த்துக்கள்!

கே. சரஸ்வதி
ஈரோடு

கவிப்பேர்ரசு வைரமுத்து, பதினென் கவனகர் பேட்டி, திரு சுகிசிவம் பேசியது மூன்றும் முக்கனிகள் போன்றும், சத்குரு ஜக்கியின் கட்டுரை தேன் போன்றும் இருந்தது. மொத்தத்தில் கவிதை, நினைவாற்றல் பேச்சாற்றல், பக்தி நான்கும் சேர்ந்திருத்த முக்கனியுடன் தேன் கலந்து உண்டால் எப்படி தித்திப்பாக இருக்குமோ அதுபோல இருந்தது. ஆகஸ்ட் இதழ்.

ச. மல்லிகா,
கோவை.

தங்களின் அயற்சியற்ற “விட்டு விடுதலையாவோம்” முயற்சி தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள். உண்மையில் இப்பயன்மிகு கூட்டங்கள் தங்கள் மீதான அன்பு கலந்த மதிப்பை பன்மடங்காக பெருக்குவதோடு என்னைப் போன்ற இளைஞர்களை, எதிர்கால சாதனையாளர்களை ஊக்குவிப்பதில் வேறு இணை உண்டோ?

திருவுள நம்பி,
கோவை – 4


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2001

சிரிப்போம் சிறப்போம்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்
வெற்றிப்பாதை
பெற்றோர் பக்கம்
சிந்தனைத்துளி
டாக்டர் ருத்ரன் பதில்கள்
நிறுவனர் பக்கம்
நம்பிக்கையும் நானும்
வாசகர் கடிதம்
மனித சக்தி மகத்தான சக்தி
உறவுகள் உணர்வுகள்
பொதுவாச் சொல்றேன்
வணக்கம் தலைவரே!
சிந்தனைத்துளி
மனசுவிட்டுப் பேசுங்க….
வெற்றியின் மனமே
உள்ளத்தோடு உள்ளம்