Home » Articles » உறவுகள் உணர்வுகள்

 
உறவுகள் உணர்வுகள்


செலின் சி.ஆர்
Author:

அம்மா,அப்பாவிற்கு அடுத்தபடியாக நம்மை அதிகம் பாதிப்பவர்கள் ஆசிரியர்கள்.

பெரும்பாலான சின்ன குழந்தைகளுக்கு ரோல் மாடல் ஹீரோவாக இருப்பது டீச்சர்கள்தான்.

டாக்டராக வேண்டும் என்ஜினியராக வேண்டும் என்பதற்கு அடுத்தபடியாக டீச்சராக வேண்டும என்றுதான் குழந்தைகள் அதிகம் விரும்புகின்றன.

காரணம் சிறுவயதில் அவர்கள் அதிகம் பார்ப்பது, பழகுவது, நேரம் செலவிடுவது டீச்சர்களுடன்தான்.

கையில் பிரம்புடன் ‘ஏஃபார் ஆப்பிள், பி ஃபார் பாய்’ என்று குழந்தைகள் டீச்சர்களாய் மாறி நம்மை மிரட்டுவதுகூட அதனால்தான்.

கல்லூரி வாழ்க்கை முடிந்த பிறகு கல்லூரி ஆசிரியர்களை எப்போதாவது வழியில் பார்க்க நேர்ந்தால் அப்படி ஒன்றும் நாம் கொஞ்சிக் குலாவுவதில்லை, மரியாதை செலுத்துவதில்லை.

ஆனால், ஆறாவது ஏழாது படித்தபோது இருந்த ஆசிரியர்களை நாம் மறக்கவே மாட்டோம். வழியில் பார்த்தாலும் மரியாதை செலுத்துவோம். அவர்கள் கூறிய விஷயங்கள் நம் வாழக்கைக்கு வழிகாட்டுபவையாக இருக்கும்.

எல்கேஜி, யுகேஜி ஆசிரியர்களை நமக்கு நினைவிருக்காது. மிகச்சிறுவயதில் பார்த்ததால் அவர்கள் முகங்கள் மறந்திருக்கும். ஆனால் அவர்கள் அன்பாக இருந்தார்களா இல்லையா, அடித்தார்களா இல்லையா போன்ற விஷயங்கள் ஆழ்மனத்தில் படிந்திருக்கும்.

ஒன்றாவது, இரண்டாவது வகுப்பாசிரியர்களை நமக்கு நினைவிருக்கும். ‘ஒரோன் ஒண்ணு, ஈரோன் ரெண்டு ‘ என்று படித்த கணக்கு வாய்ப்பாடு நினைவிருக்கும்.

‘அஆஇஈஉஊ’ என்று நாம் ஆரம்பத்தில் படித்த அரிச்சுவடி நாம் சாகும்வரை நினைவிருக்கும்.

அந்த எழுத்துக்களோடு சேர்ந்து டீச்சர்களின் குரலும் அந்த உணர்வுகளும் மறக்கவே மறக்காது.

கெட்ட உணர்வுகள், சிந்தனைகள் டீச்சருக்கு இருந்தால் அந்த உணர்வுகளும் நம் ஆழ் மனத்தில் பதிந்து விடும். தினத்தந்தி பேப்பர் படிக்கும் போது கூட ‘அஆஇஈ கஙசஞ’ எழுத்துக்கள் அந்த டீச்சரின் உணர்வுகளை ஞாபகப்படுத்தும். ஹிண்டு பேப்பரைப் படிக்கும் போது ‘ஏபிசிடி’ எழுத்துகள், அந்த டீச்சரின் கோப தாபங்களை நினைவுபடுத்தும்.

அதனால்தான் ‘ஏபிசிடி’ ஓர இனிமையான பாடல் போல ரைமாக சொல்லித்தரப்படுகிறது. இனிமையான இசையில் நல்ல உணர்வுகள்தான் பதிந்திருக்கும் என்பதால் வாழ்நாள் முழுவதும் ‘ஏபிசிடி’ எழுத்துகள் நல்ல உணர்வுகளையே நினைவுபடுத்தும்.

‘ஹம்ப்டி டம்படி சேட் ஆன் எ வால்’ என்ற நர்சரி பாடலில் ‘ஹம்ப்டி’ என்பவன் விழுந்து மண்டையை உடைத்துக் கொண்ட செய்தி சொல்லப்பட்டிருக்கிறது. ‘லண்டன் பிரிட்ஜ் இஸ் ஃபாலிங்கடவுன்’ பாடலில் லண்டன் பாலம் உடைந்த செய்தி சொல்லப்பட்டிருக்கிறது.

இவை போன்ற தவறான பாடல்களால் குழந்தைகளின் பிஞ்சு மனங்களில் நஞ்சு கலக்கப்படுகிறது.

நல்ல, கருத்துள்ள அழகான பாடல்களை இளம் வயதில் சொல்லித்தர வேண்டும்.

தேவாரம், திருவாசகம், ஆழ்வார் பாடல்களில் உள்ள இனிமையான இசையும், கருத்தும குழந்தைகளின் மனத்தை செம்மைப்படுத்தும் தன்மை கொண்டவை.

திருக்குறளைப் படிப்பதால் தர்மங்களை நியாயங்களைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது.

இளம் வயதில் சொல்லித்தரப்படும் வார்த்தைகள் கூட நல்ல விஷயங்கள் குறித்த வார்த்தைகளாக அதிகமாக சொல்லித்தரலாம்.

‘அணில், ஆடு, இலை, ஈக்கள்’ என்று உலகை, அதில் உள்ள பிராணிகளை, பொருட்களை அறிமுகப்படுத்துகிறோம்.

‘அன்பு, ஆசை, இனிமை, ஈகை’ என்று நல்ல உணர்வுகளைக் கூறும் வார்த்தைகளை அதிகமாக சொல்லித்தரலாம்.

யோகாசனம், பிராணயாமம், தியானம் போன்ற உடல், மனப் பயிற்சிகளை இளம் வயதிலேயே சொல்லித்தரலாம்.

குழந்தைகளுக்கு சொல்லித்தருகிறோமோ, இல்லையோ டீச்சர்களுக்கு தியானப்பயிற்சிகள் அவசியம் தேவை.

டீச்சர்கள் நல்ல மனநிலையில் இருந்தால்தான் அவர்கள் சொல்லித்தரும் பாடல்கள், பாடங்கள் நல்ல அதிர்வுகளோடு குழந்தைகளின் மனதில் பதியும்.

அந்தப் பாடல்களும், பாடங்களும் வாழ்நாள் முழுவதும் வழிகாட்டப் போவதால் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

இந்து கோவில்களை முஸ்லிம்கள் அழித்தனர். என்பது போன்ற விவரங்களைப் படிக்கும் குழந்தைகளின் மனதில் பகை உணர்ச்சிதான் ஏற்படும்.

பலர் செய்த நல்ல காரியங்களை விலாவரியாகப படிப்பதை விட்டுவிட்டு, கஜினி முகமது பலமுறை படையெடுத்தார் போன்ற விவரங்களை சரித்திரத்தில் படிப்பதால் பகைமை உணர்வுகள் வளரும்.

நம நாட்டின பெருமைகளை சரத்திரப் பாடத்தில் இடம் பெறச் செய்ய வேண்டும்.

இந்தியாவின் பாரம்பரியக் கலைகளான சித்தமருத்துவம், ஜோதிடம், வாஸ்துசாஸ்திரம் போன்றவற்றை பாடத்திட்டத்தில் இடம் பெறச் செய்யவேண்டும்.

இன்றைய இளைஞர்கள் தறிகெட்டு அலைவதும, போதைப் பொருட்களுக்கு அடிமையாவது நாட்டுப்பற்று இல்லாத மனநிலையால்தான் ஏற்படுகிறது.

ஆங்கிலேயர்களால் எழுதப்பட்ட சரித்திரத்தில தவறான விவரங்கள் தான் அதிகமாக காணப்படுகின்றன.

பூச்சியத்தைக் கண்டு பிடித்தது இந்தியர்கள் தான். ‘1234’ இலக்கங்கள் உபயோகித்தது இந்தியர்கள்தான். கட்டிட சாஸ்திரத்தில் தலை சிறந்து விளங்கியது இந்தியர்கள்தான். கனடா நாட்டில் கட்டிடக் கலையை வளர்த்த மயன் ஒரு இந்தியர்தான், சீன நாட்டு லாவோட்சு இந்தியர்தான் என்பது போன்ற சரித்திர உண்மைகளை இளம் வயதில் சொல்லித் தந்தால் அவர்களுக்கு நாட்டுப் பற்று ஏற்படும்.

பத்தாயிரம் வருட இந்திய சரித்திரத்தில், இந்தியா ஒருமுறை கூட வெளி நாட்டின் மீது படையெடுத்துச் சென்று ஆக்கிரமித்ததில்லை. ஏனெனில், இந்தியா சமாதானத்தை விரும்புகிறது என்று இந்தியாவின் பெருமையைக் கூற வேண்டும்.

இந்தியாவின் பெருமைகளை இன்றைய இளைஞர்கள் இளம் வயதில் படித்தால், இந்தியா சக்திவாய்ந்த நாடாக, செழிப்பான நடாக மாறிவிடும்.

பாடங்களில் சொல்லப்படும் செய்திகளைப் போலவே அதிக பாதிப்பை ஏற்படுத்துவது ஆசிரியர்களின் மனநிலையும், அவர்கள் மாணவர்களை நடத்தும் விதமுமதான்.

ஆசிரியர்களை, மாணவர்கள் தாய்தந்தைக்கு சமமாக வைத்து மதிக்கிறார்கள், அன்பு செலுத்துகிறார்கள்.

ஆசிரியர்களின் நடை உடை பாவனைகளை குழந்தைகள் அப்படியே காப்பியடிப்பதும் உண்டு.

அதனால் டீச்சர்கள் வெறுப்பு, பொறாமை கிசுகிசு பேசுவது போன்ற கெட்ட பழக்க வழக்கங்களை குறைந்த பட்சம் குழந்தைகள் எதிரிலாவது தவிர்க்க வேண்டும்.

பிரம்பால் அடிப்பது, கெட்ட வார்த்தைகளால் திட்டுவது போன்ற கடுமையான செயல்களை கட்டாயம் செய்யக்கூடாது.

ஒரு வருங்கால டாக்டரை, என்ஜினியரை, கணிப்பொறி வல்லுநரை நாம் அடிக்கலாமா? கெட்ட வார்த்தையால் திட்டலாமா?

குழந்தைகள் தன்மான உணர்வுகள் நிரம்பியவை. பெரியவர்களைப் பாராட்டபடவேண்டும் என்றுதான் அவர்கள் விரும்புகிறார்கள்.

அவர்களை நமக்கு சமமாக மதித்துதான் நடத்த வேண்டுமே தவிர, அடிப்பது, திட்டுவது போன்ற வழக்கங்களை அடியோடு கைவிட வேண்டும்.

நாம் இப்போது அவர்களை எப்படி நடத்துகிறோம் என்பது அவர்களது வாழ்வையே தீர்மானிக்கப் போகிறது என்ற பொறுப்புணர்ச்சி ஒவ்வொரு டீச்சருக்கும் கட்டாயம் தேவை.

அன்பான, கனிவான டீச்சர்களை குழந்தைகளும் முழுவதும் மறக்க மாட்டார்கள். தெய்வத்திற்கு சமமாக வைத்துப் போற்றுவார்கள்.

தொடரும்…


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


September 2001

சிரிப்போம் சிறப்போம்
ஆஸ்திரேலியாவில் சந்தித்த தன்னம்பிக்கை மிக்க தமிழ் இளைஞர்கள்
வெற்றிப்பாதை
பெற்றோர் பக்கம்
சிந்தனைத்துளி
டாக்டர் ருத்ரன் பதில்கள்
நிறுவனர் பக்கம்
நம்பிக்கையும் நானும்
வாசகர் கடிதம்
மனித சக்தி மகத்தான சக்தி
உறவுகள் உணர்வுகள்
பொதுவாச் சொல்றேன்
வணக்கம் தலைவரே!
சிந்தனைத்துளி
மனசுவிட்டுப் பேசுங்க….
வெற்றியின் மனமே
உள்ளத்தோடு உள்ளம்