Home » Articles » “ஆட்டோ சஜஷனின் ஆரம்ப நாயகன் யார்?”

 
“ஆட்டோ சஜஷனின் ஆரம்ப நாயகன் யார்?”


admin
Author:

(தஞ்சை நகரில், “தன்னம்பிக்கை” மாத இதழின் அறிமுகவிழா யோகம் ரியல் எஸ்டேடஸ் நிறுவனத்தால் நடத்தப்பட்டது. இந்த விழாவில் திரு. சுகி. சிவம் ஆற்றிய உரையின் சில பகுதிகள்.. உங்களுக்காக)

வாழ்க்கையின் பொருள் என்ன என்கிற கேள்வியை எல்லாத் தத்துவங்களும் எழுப்பி வந்துள்ளன. அடிப்படையில் வாழ்க்கை ஒரு வித்தியானமான கவிதை. அதற்கு அவரவர் கற்பிப்பதே அர்த்தம். திருவள்ளுவர் ஒரு அர்த்தம் சொன்னார், சாக்ரடீஸ் ஒரு அர்த்தம் சொன்னார்.

எனவே, நம் வாழ்க்கைக்கு நல்ல அர்த்தம் கற்பிக்கும் கடமை நமக்குத்தான் இருக்கிறது. பிழைத்தல் – இருத்தல் – வாழ்தல் என்று மூன்று நிலைகள். ஆங்கிலத்தில் Survival – Existence – Living என்று இவற்றைச் சொல்லலாம்.

இவற்றில், வாழ்தல் என்கிற நிலைநோக்கி நகர்கிற போதுதான் நம்வாழ்க்கை சரியான அர்த்தம் பெறும்.

நாம் நமது கட்டுப்பாட்டுகுள், நிர்வாகத்துக்குள் இருப்பதே நல்ல வாழ்க்கை. இன்று, பெரிய தலைவர்களெல்லாம் எதற்கும் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை என்பது போல ஒரு சூழல் நிலவுகிறது.

விநாயகர் கையின் அங்குசம் வைத்திருக்கிறார். அங்குசம், யானையை அடக்கக்கூடியது. விநாயகர் யானை முகத்துடன் இருக்கிறார். தனது கட்டுப்பாடு தன்னிடம் உள்ளதால் மற்றவர்கள் அவரைக் கட்டுப்படுத்த வேண்டியதிலை என்துதான் இதன்பொருள். “விநாயகன்” என்ற சொல்லுக்கு “தனக்கும் மேலான தலைவன் இல்லாதவன் என்று” பொருள்.

தனக்கு உண்மையாக இருப்பதுதான் முக்கியம். திருவள்ளுவரைக் கேட்டால், ‘யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற”

என்கிறார் “நான்றிந்த வரையில்” என்பதுதான் இதன் சிறப்பு.

உலகம் உருவானது இறைவனின் எண்ணம். அப்படியானால் நம் லகம் உருவாவதும் நம்முடைய எண்ணம் தான். கர்ணன். இதற்கொரு எடுத்துக்காட்டு. ஒரு பெட்டியில் போட்டு ந்தியில் மதிக்கவிடப்பட குழந்தை கர்ணன். அந்தக் குழந்தையை ஒரு தேரோட்டி எடுத்து வளர்த்தார். தன்னைப் போல் கர்ணனையும் ஒரு தேரோட்டியாக்கிவிட அவர் கருதினார். ஆனால், கர்ணன் தெளிவாகச் சொன்னான். “நான் எந்த அரசனுக்கும் தேரோட்டியாக மாட்டேன். ஒரு அரசனை எனக்குத் தேரோட்டியாக்குவேன” என்று.

பல்லாண்டுகள் போயின. கர்ணன் அங்க தேசத்தின் அரசனானான். துரியோதன்னுக்கு ஆருயிர் நண்பனாய்த் திகழ்ந்தான். பாரத யுத்தம் மூண்டது. சல்லியன் என்கிற அரசன் தன் தேரோட்டியாக வேண்டுமென்று துரியோதனனிடம் சொல்ல, அவன் சல்லியனிடம் போய்க்கேட்டான். சல்லின் மறுத்தான். அப்போது மிகவும் சமயோசிதமாக சொன்னான். துரியோதனன் “சல்லியா! அர்ச்சுனனுக்குத் தேரோட்டுகிற கண்ணன், அவனைவிடப் பெரியவன்தானே! அதுபோல கர்ணனைவிடப் பெரியவனான நீ, கர்ணனுக்குத் தேரோட்டுவது குற்றமில்லை” என்று உடனே சல்லியன் ஒப்புக்கொண்டான்.

இதிலிருந்து ஒன்று தெரிகிறது. சொல்கிற வித்த்தில் சொன்னால் யாரை வேண்டுமானாலும் வேலை வாங்கலாம்.

அரசனை எனக்குத் தேரோட்டியாக்குவேன் என்று சிறு வயது முதல் உறுதியாக நம்பி வந்தான் கர்ணன். அந்த எண்ணம் வலிமையாக இருந்தது. உள் மனதில் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டு ஆழப் பதிந்தது. அது உண்மையானது.

நல்ல எண்ணங்களை திரும்பத் திரும்ப மனதில் ஆழமாக விதைப்பதன் மூலம் அது நிஜமாகும் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம், கர்ணன்.


Share
 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment


 

 


August 2001

மனசு விட்டுப் பேசுங்க….
வெற்றியின் மனமே
உறவுகள்… உணர்வுகள்
நான்கு பந்துகளுடன் நம்முடைய வாழ்க்கை!
கேள்வி – பதில்
வாசகர் கடிதம்
நீங்கள் எடுக்கும் முடிவான முடிவு என்ன?
தலைப்புச்செய்தி
மனித சக்தி மகத்தான சக்தி
உள்ளத்தோடு உள்ளம்
நிறுவனர் பக்கம்
சிரிப்போம் சிறப்போம்
பொதுவாச்சொல்றேன்
“ஆட்டோ சஜஷனின் ஆரம்ப நாயகன் யார்?”
"ஆட்டோ சஜஷனின் ஆரம்ப நாயகன் யார்?"
வணக்கம் தலைவரே
பெற்றோர் பக்கம்